»   »  திரும்பி வந்தார் காதல் பட இசையமைப்பாளர்!

திரும்பி வந்தார் காதல் பட இசையமைப்பாளர்!

Subscribe to Oneindia Tamil

நடாஷாவுக்கும், எனக்கும் இடையே காதல் இல்லை, நல்ல நட்புதான் உள்ளது என்று காதல் படத்தின் இசையமைப்பாளர் ஜோஷ்ா ஸ்ரீதர்கூறியுள்ளார்.

ஜோஷ்வா சமீபத்தில் தலைமறைவாகி விட்டார். அவரிடம் கீ போர்ட் வாசித்து வந்த பெங்களூரைச் சேர்ந்த நடாஷா என்பரையும்காணவில்லை.

இதையடுத்து தனது மகள் நடாஷாவை ஜோஸ்வா கடத்திச் சென்று விட்டதாக நடாஷாவின் தாயார் பெங்களூர் காவல் நிலையத்தில் புகார்கொடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதில் ஜோஸ்வாவுக்குத் திருமணமாகி குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

காணாமல் போன ஜோஸ்வா, நடாஷாவைத் தேடும் பணி தீவிரமாக நடந்தது.

இந் நிலையில் ஜோஷ்வா திடீரென நடாஷாவுடன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஜோஷ்வா கூறியதாவது:

எனது வளர்ச்சியைப் பிடிக்காத சிலர் இதுபோன்ற தவறான செய்தியைப் பரப்பியுள்ளனர்.

எனக்கும் நடாஷாவுக்கும் தவறான உறவு எதுவும் இல்லை. நாங்கள் நல்ல நண்பர்கள். எனது இசைக் குழுவில் நடாஷா உதவிஇசையமைப்பாளராக வேலை செய்வது அவரது தாயாருக்குப் பிடிக்கவில்லை.

என்னைப் பற்றி நடஷாவின் குடும்பத்தினர் அவதூறான செய்திகளைப் பரப்பி வருகின்றனர். நடாஷாவை நான் கடத்தி விட்டதாக அவரதுதாயார் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

இதுதொடர்பான வழக்கில் அடுத்த வாரம் கர்நாடக நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளேன். அடியாட்களை ஏவி என்னை துன்புறுத்தவும்நடாஷாவின் பெற்றோர் முயன்றனர். காவல்துறையினரும் என்னைக் கைது செய்ய முயன்றனர்.

நடாஷாவின் குடும்பத்தினரின் செய்கையால், எனது குடும்பம் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளது. எனக்குத் திருமணமாகி 2 பெண்குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக எனது மனைவியும், நானும் பிரிந்து வசிக்கிறோம்.

தனது தனிப்பட்ட வாழ்க்கையில் போலீஸார் தலையிடக் கூடாது என்பதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடாஷா வழக்குப் பதிவுசெய்துள்ளார். இதுதொடர்பாக தமிழக, கர்நாடக டிஜிபிக்கள், மயிலாப்பூர் துணை ஆணையர், அண்ணா நகர் உதவி ஆணையர்,நடாஷாவின் தாயார் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இப் பிரச்சினையிலிருந்து நான் மீண்டு விடுவேன். இப்போது புதிதாக 3 படங்களுக்கு இசையமைக்க ஒத்துக் கொண்டுள்ளேன் என்றார்ஜோஷ்வா.

நடாஷா கூறுகையில், நான் கலிபோர்னியாவில் இசைப் படித்தேன். ஜோஸ்வாவுடன் நட்பு கிடைத்த பின்னரே சினிமாவுக்கு வந்தேன்.ஜோஸ்வாவுடனான நட்பை எனது தாயார் எதிர்க்கிறார். எனது தந்தை துபாயில் இருக்கிறார்.

ஜோஸ்வாவை விட்டு நான் பிரிந்து வராவிட்டால் அவரைக் கொலை செய்யப் போவதாக எனது தாயார் மிரட்டுகிறார். நான் மேஜர்பெண். எனது தனிப்பட்ட நட்பு, தனிப்பட்ட வாழ்வில் யாரும் தலையிட முடியாது என்றார்.

இவர்கள் பேட்டி தந்து கொண்டிருந்தபோதே போலீசார் அங்கு வந்து நடாஷா கடத்தப்பட்டதாகத் தரப்பட்ட புகாரின்பேரில்ஜோஸ்வாவைக் கைது செய்ய முயன்றனர். இதை ஜோஸ்வாவின் வழக்கறிஞர்கள் எதிர்த்தனர். நீதிமன்றம் முன் ஜாமீன் தந்துள்ளதை சுட்டிக்காட்டினர்.

கிருஸ்துவ சமூகத்தைச் சேர்ந்தவர் நடாஷா. ஸ்ரீதர் இந்து சமயத்தவர். சமீபத்தில் தான் தனது நடாஷாவுக்காக ஜோஷ்ா ஸ்ரீதர் என மாற்றிக்கொண்டார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil