படுக்கை அறையில் அந்த காட்சி மட்டும் தான் காட்டல..பிக்பாஸ் நிகழ்ச்சியை விளாசிய தமிழா தமிழா பாண்டியன்!

சென்னை: கடந்த ஐந்தாம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சிகள் இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அது மட்டுமல்லாமல் அவர்கள் கவர்ச்சி ஆடை அணிந்து வலம் வருவதும், ஆபாசமாக பேசுவதும் சர்ச்சையாக இருக்கும் நிலையில் இது குறித்து தமிழா தமிழா பாண்டியன் KingwoodsTV youtube சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில்,

தமிழக மக்களுடைய மனங்களில் அடுத்தவர்களின் வீடுகளில் நடக்கும் ஆபாசங்களை தெரிந்து கொள்வது என்பது ஒரு வகையான வக்கிர புத்தி. அது தான் பிக் பாஸ். அது எதுவரை நீள்கிறது என்றால், குளியல் அறை காட்சிகள் முதல், கழிவறை, படுக்கை அறை, உடை மாற்றுவது வரை சென்றுவிட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்தவர்கள் சொல்வது என்ன வென்றால், நீச்சல் குளத்தில் இரண்டு பெண்களை குளிக்க வைத்து அதில் ஒரு ஆணையும் குளிக்க வைத்து படம் பிடித்து ஒளிபரப்புகிறார்கள். இதைபார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து டிஆர்பி அதிகரிப்பதால், கோடிகள் குவிகிறது.

Bigg Boss tamil journalist pandian Vijay sethupathi
Photo Credit:

பிக் பாஸ் சீசன் 9: இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதிக்கு 75 கோடி ரூபாய் சம்பளம். சினிமாவில் ரஜினி, விஜய்க்கு தான் ரூ200 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதிக்கு ரூ75 கோடி ரூபாய், மற்றவர்களுக்கு ரூ25 கோடி ரூபாய். இப்படி ரூ 200 கோடி வருமானம் ஈட்டும் இந்த நிகழ்ச்சி, பாலியல் வக்கிரத்தையும், நீள படத்திற்கு இணையாக இரட்டை அர்த்த வசனங்கள் உள்ளன. இந்த நிகழ்ச்சியை எப்படி குடும்பத்தோடு பார்ப்பார்கள் என்கிற கவலை எல்லாம் பிக் பாஸ் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கு இல்லை.

விஜய் சேதுபதிக்கு பணம் வந்த போதும்: ஆனால், இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு யாரும் இல்லை. இதுதான், பிக் பாஸ் நிகழ்ச்சி இப்படி தரம் தாழ்ந்து போனதற்கு காரணம். இதனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவர்ச்சி உடையில் வலம் வருவது, தரம் தாழ்ந்து பேசுவது, ரெட்டையர்த்த வசனம், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வது என இவை எல்லாமே பார்வையாளர்கள் குறைத்துக் கொண்டே வருவதால் அவர்களை ஈர்ப்பதற்கான யுத்திகளை, திட்டமிட்டு காட்சிகளை உருவாக்கி வருகின்றனர். விஜய் சேதுபதிக்கு 75 கோடி ரூபாய் கொடுக்கிறார்கள். இதனால், அவர் எந்த நிலைக்கும் செல்வார். இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து அவருக்கு இந்த வாய்ப்புகள் கிடைக்காது. இதனால், கிடைத்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக் கொள்கிறார். நடிகருக்கும் அதுதான் நிலைமை, நடிகைகளுக்கும் அதுதான் நிலைமை. இதனால் அவர்களுக்கு சமூகத்தை பற்றியும், சீரழிவு பற்றியும் எந்த கவலையும் இல்லை என தமிழா தமிழா பாண்டியன் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X