அவன் ஒரு சரியான ஃப்ராடு.. இலவச ஆம்புலன்ஸ் எல்லாம் ஏமாற்று வேலை.. KPY பாலாவை விளாசிய பிரபலம்!

சென்னை: KPY பாலா என்றாலே பலரும் சொல்லும் விஷயமாக இருப்பது அவர் செய்யும் நன்மைகள் தான். அதாவது யாரென்றே தெரியாத பலருக்கும் ஓடி ஓடி உதவி செய்து வருகிறார் KPY பாலா. இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டும் வருகிறார். இப்படி இருக்கும்போது, KPY பாலா சரியான ஃப்ராடு என்றும் அவர் கொடுத்த ஆம்புலன்ஸ்கள் எல்லாம் ஏமாற்று வேலை என்றும் பத்திரிகையாளர் உமாபதி, அறம் நாடு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இது பலருக்கும் திடுக்கிடும் செய்தியாக மாறியுள்ளது.

அந்த பேட்டியில் அவர் கூறும்போது, KPY பாலாவுக்கு உண்மையிலேயே உதவும் மனப்பான்மை உள்ளது. அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். ஆனால் அவருக்கு எங்கிருந்து இவ்வளவு உதவிகள் செய்ய பணம் கிடைக்கிறது. அவரே பல பேட்டிகளில் கூறுகிறார், முழுக்க முழுக்க தனது உழைப்பால் திரட்டிய பணத்தை கொண்டு தான் இந்த உதவிகளைச் செய்து வருகிறேன் என்று கூறுகிறார். அப்படி என்றால் இவர் இதுவரை வழங்கிய ஆம்புலன்ஸ், இரு சக்கர வாகனங்களுக்கு எல்லாம் எங்கிருந்து பணம் வந்தது? அவ்வளவு பணம் அவர் சம்பாதித்து விட்டாரா?

Journalist Umapathy Slams KPY Bala at Interview Goes Trending
Photo Credit:

டுபாக்கூர்: அவர் கொடுக்கும் ஆம்புலன்ஸ், இரு சக்கர வாகனங்கள் என அனைத்து வாகனத்தின் நம்பர்கள் அனைத்தும் மறைக்கப்பட என்ன காரணம்? எல்லாம் ஏமாற்று வேலை. தொடக்கத்தில் அவர் அந்த ஆம்புலன்ஸ்களை ஒரு அறக்கட்டளை மூலம் கொடுத்தார். ஆனால் அந்த அறக்கட்டளையும் பாலாவுக்கு பின்னால் என்னவெல்லாம் நடக்கிறது என்பதை நான் இன்னொரு முறை ஆதாரத்துடன் கூறுகிறேன். இது போன்ற இருப்பவர்கள் எப்போதும் ஒரு சென்மெண்ட் கதைகளுடனே இருப்பார்கள். அதுபோலத்தான் பாலாவும். அவர் வழங்கிய ஒரு ஆம்புலன்ஸ் நெம்பர் பிளேட்டில் உள்ள நெம்பர் ஒரு உயர் ரக காரின் எண். அப்படி இருக்கும்போது இதில் இருந்தே தெரிய வேண்டும், அது எல்லாம் டுபாக்கூர் வேலை என்று. ஆவர் வழங்கிய ஆம்புலன்ஸ்களுக்கு இன்சூரன்ஸ் இல்லை.

சந்தேகம்: இப்போது சொந்த செலவில் ஹாஸ்பிடல் கட்ட வேண்டும் என்றும் அதில் இலவசமாக மருத்துவம் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ஒரு மருத்துவமனை கட்டுவது என்பது எவ்வளவு பணம் செலவாகும் தெரியுமா? பாலா இது போல சொன்ன பிறகுதான் எனக்கு பாலா மீது சந்தேகம் வந்தது, அதன் பின்னர் அவரது பின்னணியையும் பின்புலத்தை விசாரித்தால் அது எங்கேயோ ஒரு நாட்டில் போய் முடிகிறது. பாலாவால் பயன் பெற்றவர்களுக்கு நான் பேசுவதைக் கேட்கும் போது கோபம் வரலாம். ஆனால் யாரோ ஒரு சிலருக்கு உதவி செய்துள்ளார் என்பதற்காக இந்த நாட்டை பலிகடாவாக மாற்ற முடியாது.

Journalist Umapathy Slams KPY Bala at Interview Goes Trending
Photo Credit:

சதி வேலை: பாலா நல்ல பையன் தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் பாலாவை வைத்து மிகப்பெரிய சதி வேலைக்கு திட்டமிட்டு வருகிறார்கள். அதை நாம் தடுக்க வேண்டும். இன்று இப்படி இருக்கும் பாலா, நாளை அரசியலில் காலடி எடுத்து வைக்கிறார் என்றால் சந்தோசம். பாலாவின் வீடியோக்களையும் பேட்டிகளையும் நீங்களே பாருங்கள். பாலாவுக்கு எதிராக என்னிடம் பல ஆதாரங்கள் உள்ளது. ஆனால் தம்பியை ரொம்பவும் அடிக்க வேண்டாம் என்பதால் நீங்களே அவரது வீடியோவைப் பாருங்க" என்று கூறியுள்ளார். இவரது இந்த பேட்டி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X