ஜோதிகாவின் சர்ச்சை பேச்சு.. எதுக்கு தேவையில்லாத வேலை.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்!
சென்னை: திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து ஒதுக்கி இருந்த நடிகை ஜோதிகா '36 வயதினிலே' திரைப்படம் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுத்து இருந்தார். அதன் பின் ராட்சசி, பொன்மகள் வந்தாள் என அடுத்தடுத்த படத்தில் நடித்து வந்த இவர், தனது மகளின் படிப்பிற்காக குடும்பத்தோடு மும்பை சென்று செட்டில் ஆனார். அதை தொடர்ந்து, பாலிவுட்டில் அஜய் தேவ்கன், மாதவன் நடித்த ஷைத்தான் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படம் பாக்ஸ் ஆபிசில் வசூலை அள்ளியதைத் தொடர்ந்து ஸ்ரீகாந்த் என்ற இந்தி படத்திலும், டப்பா கார்டெல் என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார்.
அண்மையில் ஜோதிகா, ஒரு இந்தி திரைப்பட விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியது, தமிழ்த் திரையுலக ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜோதிகா அந்த பேட்டியில், நான் "தென்னிந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து இருக்கிறேன். ஆனால், அங்கு பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. படத்தின் போஸ்டர்களில் கூட ஹீரோயின்களின் போட்டோ இருக்காது. ஆனால், மலையாள நடிகரான மம்மூட்டி, இந்தி நடிகரான அஜய் தேவ்கன் போன்றவர்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று ஜோதிகா பேசி இருந்தார்.

ஜோதிகாவின் சர்ச்சை பேச்சு: ஜோதிகாவின் இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், இணையவாசிகள் ஜோதிகாவிற்கு எதிராக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதோடு மட்டுமில்லாமல், 'சந்திரமுகி', 'காக்க காக்க', 'வாலி', 'மொழி' போன்ற வெற்றிப் படங்களில் ஜோதிகாவின் போட்டோ போஸ்டர்களில் முக்கிய இடம் பெற்று இருந்ததை சுட்டிக்காட்டி, தமிழ் சினிமா தான் உங்களை வளர்த்துவிட்டது என்பதை மறந்துவிட வேண்டாம் என பதிவிட்டு வருகின்றனர்.
தேவையில்லாத ஒப்பீடு: மேலும் ஒரு இணையவாசி, "உங்களுக்கு போஸ்டர்களில் இடம் கொடுத்ததே இந்த கோலிவுட் தான் என்பது மறந்துவிட்டீர்களா? என்றும், புதிய வாய்ப்புகளை தேடி வேறு இடத்திற்கு சென்றாலும், அவருக்கு நட்சத்திர அந்தஸ்தைக் கொடுத்த திரையுலகத்தை விமர்சிப்பது நியாயமற்றது என்று கருத்துக்களை பகிர்ந்துள்ளனார். ஒருபுறம் சில ரசிகர்கள் ஜோதிகாவை ஆதரித்தாலும், பெரும்பாலான தமிழ்த் திரையுலக ரசிகர்கள் அவரின் இந்த பேச்சு தேவையில்லாத ஒப்பீடு என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











