»   »  கிளாமர் இயக்குனர்கள்-ஜோதிர் அலுப்பு!

கிளாமர் இயக்குனர்கள்-ஜோதிர் அலுப்பு!

Subscribe to Oneindia Tamil

கிளாமராக நடிக்க நடிகைகள் துடிப்பதில்லை, இயக்குநர்கள்தான் கிளாமர் வேண்டும் என்று கேட்டு வாங்கி கவர்ச்சியாக நடிக்க வைப்பதாக கூறுகிறார் ஜோதிர்மயி.

முதல் படமான தலைநகரம் பிய்த்துக் கொண்டு ஓடியதால், ஹிட் நாயகியாக பிக்கப் ஆனவர் ஜோதிர்மயி. கல்யாணமாகி ஜோராக குடும்பம் நடத்திக் கொண்டே, மறுபக்கம் நடிகையாகவும் அசத்திக் கொண்டிருக்கிறார் ஜோதிர்மயி.

முதல் படம் ஹிட் ஆனதாலும், அடுத்து நடித்த நான் அவனில்லை படமும் சூப்பர் ஹிட் ஆனதாலும் சந்தோஷ ராகம் பாடி வருகிறார் ஜோதிர். இடையில் விஜயகாந்த்துடன் இணைந்து நடித்த சபரி சரியாக ஓடாத கவலையும் இதில் அடிபட்டு ஓடிப் போய் விட்டதாம்.

நமீதா, மாளவிகா என இரு பெரும் கவர்ச்சி கலகம் இருந்தபோதிலும், ஐந்து நாயகிகள் என்ற போதிலும், அதுகுறித்துக் கவலைப்படாமல் தன் பங்குக்கு தனி ஆவர்த்தனம் வாசித்து, கிளாமரில் தாளித்து நான் அவனில்லையில் தானும் கவனிக்கப்படும் அளவுக்கு திறமையாகவே நடித்திருந்தார் ஜோதிர்.

நீங்களும் குதிச்சுட்டீங்களா கிளாமர் குளத்தில் என்று ஜோதிரை அணுகி கேட்டபோது, எங்களுக்கு கிளாமரா நடிக்க இஷ்டமா, என்னா. அதெல்லாம் இயக்குநர்கள் எங்களிடம் கிளாமர் வேண்டும் என்று கேட்டு வாங்கி நடிக்க வைப்பது.

நடிகைகளாகச் சென்று கிளாமராக நடிக்கிறோம் என்று ஒருபோதும் கூறுவதில்லை. நாங்கள் எப்படி நடித்தாலும் அதற்கு இயக்குநர்கள்தான் காரணம்.

சில இயக்குநர்கள்தான் இப்படிக் கிளாமராக நடிக்க வைக்கின்றனர். மற்றபடி பெரும்பாலானவர்கள் நல்ல நடிப்பைத்தான் எங்களிடமிருந்து வெளிக் கொண்டு வருகிறார்கள் என்று ஒரு காலை வாரியும், மறு காலை பத்திரமாக பிடித்தும் பேலன்ஸ்டாக பேசிச் சமாளித்தார் ஜோதிர்மயி.

நன்னா பேச கத்துண்டுட்டார் ஜோதிர்!

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil