»   »  சிவாஜிக்கே பெரிய ஷாக் கொடுத்த தாவணிக் கனவுகள்! - 'உங்கள்' கே பாக்யராஜ் சிறப்புப் பேட்டி -1

சிவாஜிக்கே பெரிய ஷாக் கொடுத்த தாவணிக் கனவுகள்! - 'உங்கள்' கே பாக்யராஜ் சிறப்புப் பேட்டி -1

Posted By:
Subscribe to Oneindia Tamil

கே பாக்யராஜ்...

தமிழ் சினிமா என்றல்ல.. இந்திய சினிமாவையே தனது சுவாரஸ்யமான திரைக்கதைகளால் திரும்பிப் பார்க்க வைத்தவர். திரைப் பாக்கியம் என திரையுலகினரால் கொண்டாடப்படுபவர்... தான் எத்தனை பெரிய திறமைசாலி என வெளியில் பறைசாற்றிக் கொள்ளத் தெரியாதவர்...

கமர்ஷியல் அளவீட்டை வைத்துப் பார்த்தால் அவர் எடுத்த படங்களில் 95 சதவீதம் வெற்றிப் படங்கள்.. ஆனால் தரத்தை வைத்துப் பார்த்தால் 100 சதவீதம் வெற்றிப் படங்கள் தந்தவர். அந்த ஏழு நாட்கள், தூறல் நின்னுப் போச்சி, டார்லிங் டார்லிங் டார்லிங், முந்தானை முடிச்சு உள்பட தொடர்ந்து 7 வெள்ளி விழாப் படங்கள் கொடுத்த ஒரே இயக்குநர் கே பாக்யராஜாகத்தான் இருப்பார். ஆனால் அதை ஒருபோதும் தனது சாதனையாகக் காட்டிக் கொண்டதில்லை.

K Bagyaraj's Special interview for Oneindia Tamil

இன்றைய தலைமுறை வாசகர்களுக்கு அவரது சாதனைகளை, அனுபவங்களை அறியத் தரவேண்டும் என்பதற்காகவே இந்தப் பேட்டி.

தனக்கு நடந்த பாராட்டு விழா, சிவாஜி கணேசனை இயக்கிய அனுபவம், அமிதாப்பை திரைக்கதையால் வியக்க வைத்த ஆக்ரி ராஸ்தா அனுபவங்கள், உதவி இயக்குநர்களுடனான தனது அனுபவம், ஒரு இயக்குநருக்கு தேவையான தகுதிகள் - அனுபவங்கள், இன்றைய சினிமா... என பல விஷயங்களை மிக சுவாரஸ்யமாக பகிர்ந்து கொண்டார் கே பாக்யராஜ்.

தமிழக அரசியல் சூழல், மீண்டும் அரசியலுக்கு அவர் வருவாரா, ஜெயலலிதா இல்லாத சூழலில் அதிமுகவில் இணைய வாய்ப்பிருக்கிறதா, மோடியின் பணஒழிப்பு குறித்த பார்வை போன்றவற்றை இந்த வீடியோவின் இரண்டாவது பகுதியில் நாளை பார்க்கலாம்.

சந்திப்பு: எஸ் ஷங்கர் & ராஜீவ் காந்தி

English summary
Director - Actor K Bagyaraj's special interview.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil