»   »  “நான் சுட்டேனா... ரஜினி என்னைச் சுட்டாரா...” கபாலி கிளைமாக்ஸ் குறித்து ‘டைகர்’ சொல்லும் ரகசியம்

“நான் சுட்டேனா... ரஜினி என்னைச் சுட்டாரா...” கபாலி கிளைமாக்ஸ் குறித்து ‘டைகர்’ சொல்லும் ரகசியம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்ற கேள்வியைத் தொடர்ந்து தற்போது, டைகர் ரஜினியைச் சுட்டாரா இல்லையா என்பது தான் கபாலி பார்த்த ரசிகர்களின் மனதில் கேள்வியாகத் துளைத்து வருகிறது.

பாகுபலி முதல் பாகத்தில் கட்டப்பா பாகுபலியைக் கொல்வது போல் கிளைமாக்ஸ் வைத்த ராஜமௌலி, அதன் பதில் இரண்டாம் பாகத்தில் தெரியும் எனத் தெரிவித்திருந்தார்.


Kabali Hari's interview

ஆனால், கபாலி கிளைமாக்ஸ் அப்படியில்லை. முடிவை நம் கையில் தந்து படத்தை முடித்திருக்கிறார் ரஞ்சித். மலேசியாவில் மட்டும் வேறு மாதிரி கிளைமாக்ஸ் அமைக்கப்பட்டுள்ளது.


ஆனால், தமிழ் ரசிகர்கள் கபாலி கிளைமாக்ஸில் என்ன நடந்திருக்கும் என ரூம் போட்டு யோசித்து வருகின்றனர்.


இந்நிலையில், இந்த முக்கியக் கேள்விக்கு பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார் டைகர் ஹரி. இவர் ஏற்கனவே, அட்டக்கத்தி, மெட்ராஸ் உள்ளிட்ட படங்களில் நடித்த ஹரி தான். அதிலும் மெட்ராஸ் படத்தில் இவரது ஜானி கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது. ஆனால், கபாலி பட வெற்றியால் இவரது பெயருக்கு முன்னே டைகர் ஒட்டிக் கொண்டது.


கபாலி கிளைமாக்ஸ் குறித்து ஹரி கூறுகையில், "ரஜினி என்னை சுட்டதாகவோ அல்லது நான் தவறுதலாக கபாலிக்கு அருகில் நின்ற வேறு ஒருவரைச் சுட்டதாகவோ கூட எடுத்துக் கொள்ளலாம்" எனத் தெரிவித்துள்ளார்.


இதற்கிடையே கபாலி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் திட்டம் இருப்பதாக தயாரிப்பாளர் தாணுவும், இயக்குநர் ரஞ்சித்தும் தெரிவித்துள்ளனர்.


அப்படிப்பார்த்தால் கபாலி உயிரோடு இருந்தால் தானே இரண்டாம் பாகத்திற்குள் கதை செல்லும். கதைப்படி ரஜினிக்கு மகன் இருந்திருந்தாலாவது அவர் வளர்ந்து மீண்டும் கபாலியாகிறார் என இரண்டாம் பாகத்தில் கதை சொல்லலாம். ஆனால், அதற்கும் வாய்ப்பில்லை, கபாலிக்கு இருப்பதோ ஒரே ஒரு பெண். எனவே, இரண்டாம் பாகம் சாத்தியமானால், நிச்சயமாக டைகர் கபாலியைச் சுட்டிருக்க வாய்ப்பே இல்லை பாஸ்.

English summary
The Kabali movie fame actor Tiger Hari has revealed the secret behind the climax scene, whether he shot Rajini or not.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil