»   »  காதல் படத்தில் தவறில்லை: பாலாஜி சக்திவேல்

காதல் படத்தில் தவறில்லை: பாலாஜி சக்திவேல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

காதல் படத்தில் மதுரை பள்ளியை அவமதிக்கும்படியான எந்தக் காட்சியும் இடம் பெறவில்லை. இதை நீதிமன்றத்தில் நாங்கள்நிரூபிப்போம் என்கிறார் இயக்குனர் பாலாஜி சக்திவேல்.

இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் உருவான காதல் படம் சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் வசூல்மழை ஈட்டி வரும் இந்தப் படம் மதுரையை கதைக் களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இப் படத்தின் மூலம் பரத், சந்தியா கோலிவுட்டில் முன்னணி இடத்துக்கு வந்துள்ளனர்.

இந் நிலையில் மதுரையில் பிரபலமான செயின்ட் ஜோசப் மகளிர் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் ஜெயராணி சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார்.


அதில் காதல் பட நாயகி தங்களது பள்ளி சீருடையுடன் பல காட்சிகளில் வருகிறார், எங்களது பள்ளியின் பெயரும் படத்தில்காட்டப்படுகிறது. இதனால் பள்ளியின் கெளரவம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக படத் தயாரிப்பாளர் எங்கள் பள்ளிக்கு ரூ. 20லட்சம் நஷ்ட ஈடு தர வேண்டும். படத்தையும் தடை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.

இது தொடர்பாக இயக்குனர் பாலாஜி சக்திவேல் கூறுகையில், நாங்கள் அந்தப் பள்ளியில் படப்பிடிப்பை நடத்தவில்லை. அந்தப்பள்ளியின் சீருடையையும் நாங்கள் உபயோகப்படுத்தவில்லை. எனது நாயகியின் சீருடை வேறு. பள்ளியைப் பற்றிய எந்தத்தவறான தகவலையும் அந்தப் படத்தில் நான் வைக்கவில்லை.

உண்மையில் சொல்லப் போனால், சில காட்சிகளை மட்டுமே நாங்கள் மதுரை நகருக்குள் எடுத்தோம். பள்ளி தொடர்பானகாட்சிகளை நாங்கள் வேறு இடத்தில்தான் எடுத்தோம்.

படத்தைப் பற்றி யாரும் தவறாகக் கூறவில்லை. நன்றாக இருக்கிறது, நல்ல கதை, நல்ல நடிப்பு என்றுதான் எல்லோரும்பாராட்டுகிறார்கள். யாரும் தவறாக விமர்சிக்கவில்லை. பெண்களைத்தான் இந்தப் படம் அதிகம் கவர்ந்துள்ளது.

படத்தில் எந்தத் தவறும் இருப்பதாக எனக்கும் தெரியவில்லை. எங்களது தரப்பு வாதத்தை நீதிமன்றத்தில் எடுத்து வைப்போம்.நிச்சயம் இதில் வெல்வோம் என்றார் பாலாஜி.

அடுத்த படத்தையும் ஷங்கருக்காகவே பாலாஜி இயக்கப் போவது குறிப்பிடத்தக்கது. அதற்கு ரூ. 25 லட்சத்தை ஊதியமாகத்தந்துள்ள ஷங்கர், பாலாஜிக்கு ஏற்கனவே ஒரு காரையும் பரிசளித்தது குறிப்பிடத்தக்கது.

காதல் படத்தைத் தயாரிக்க ஷங்கர் கொடுக்க ரூ. 2 கோடியில் பாதியை அப்படியே திருப்பித் தந்துவிட்ட பாலாஜி, சுமார் ரூ. 80லட்சத்தில் படத்தை எடுத்து முடித்தார். ஆனால், போட்ட காசைவிட 10 மடங்கு வசூலை ஈட்டித் தந்துவிட்டது இந்தப் படம்.

இதனால் பாலாஜி-ஷங்கர் காம்பினேஷனில் அடுத்த படத்தை வாங்க வினியோகஸ்தர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil