»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Subscribe to Oneindia Tamil

கோவை:

மருதநாயகம் படம் வெளி வராமல் நான் சாக மாட்டேன் என்று கமல்ஹாசன் கூறினார்.

கோவை ஜி.ஆர்டி. கல்லூரியில் நடந்த விழாவில் பங்கேற்க கமல் நிருபர்களிடம் பேசுகையில்,

மகாநதி, ஹேராம் போன்ற சில நல்ல கதையுள்ள எனது படங்கள் தோற்றுவிடக் காரணம் ரசிகர்கள்அல்ல. அந்தப் படங்கள் எடுக்கப்பட்ட விதத்தில் இருந்த தவறு தான் காரணம்.

தயாரிப்பாளர்களுக்கு என்னால் நஷ்டம் ஏற்பட்டபோதெல்லாம் பணத்தைத் திருப்பித் தந்துள்ளேன்.அதை நான் வெளியில் சொன்னதே இல்லை. சிலர் பணம் கொடுத்துவிட்டு அதற்கானவிளம்பரத்தையும் தேடிக் கொள்கின்றனர். நான் அதைச் செய்ததில்லை.

மருதநாயகத்தில் எனது பணம் ரூ. 8 கோடி முடங்கிப் போய்விட்டது. அந்தப் படம்வெளிவரவில்லை என்றால் நான் சாக மாட்டேன். விக்ரமுக்கு தேசிய விருது கிடைத்தது பெரும்மகிழ்ச்சி அளித்தது.

திறமையுள்ள நடிகரான விக்ரமுக்கு விருது கிடைத்தது எனக்குக் கிடைத்த விருதாகவே நினைத்துமகிழ்ந்தேன். தகுதியில்லாதவர்கள் விருது பெற்றால் நிச்சயம் எனக்குக் கோபம் வரும்.

இப்போது நடிக்க வருபவர்கள் எல்லாமே முதல்வர் நாற்காலி கனவோடு தான் வருகிறார்கள்இதனால் நாட்டுக்குத் தான் கெடுதல் என்றார்.

பின்னர் ரசிகர்கள் மத்தியில் பேசிய கமல்ஹாசன்,

என் மன்றத்தில் இருப்பவர்கள் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் சேருங்கள். ஆனால்,நற்பணி செய்ய வரும்போது அரசியல் சட்டையைக் கழற்றிவிட்டு வாருங்கள்.

நீங்கள் சினிமாக்காரன் பின்னால் சுற்றும் கூட்டமல்ல. சிந்திப்பவன் பின்னால் சுற்றும் கூட்டம்.

தமிழன் என்பது தகுதியல்ல. விலாசம் தான். தமிழன் என்ற தகுதியைப் பெற நாம் முயற்சிப்போம்.ஜாதிகளை ஒழிக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்யுங்கள்.

அரசியலில் சேருவது உங்கள் இஷ்டம். தலையெழுத்து என்று கூட வைத்துக் கொள்வோம் என்றார்கமல்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil