»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Subscribe to Oneindia Tamil

தமிழில் படப் பெயரை வைக்காவிட்டால், தமிழ்நாட்டில் எங்குமே படப்பிடிப்பு நடத்த முடியாது என்று கமல்ஹாசன், இயக்குனர்எஸ்.ஜே.சூர்யாவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மும்பை எக்ஸ்பிரஸ், பிஎப் என்று படங்களுக்குப் பெயர் வைத்திருந்த கமல்ஹாசன், சூர்யாவை அந்தப் பெயர்களைக் கைவிடுமாறு தமிழ்ப்பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் டாக்டர் ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

ஆனால், இக் கோரிக்கையை இருவரும் நிராகரித்துவிட்டனர்.

இந் நிலையில் சென்னையில் இன்று இயக்குனர் வி.சி.குகநாதனின் பேனா என் ஆயுதம் என்ற புத்தக வெளியீட்டு விழா நடந்தது. அப்புத்தகத்தை திருமாவளவன் வெளியிட்டுப் பேசியதாவது:

திரைப்படம் என்பது மக்களை எளிதில் சென்றடையும் சக்தி வாய்ந்த ஊடகம். இது இன்றைக்கு தமிழனின் பொருளாதாரம், சமூகம்,அரசியல் உள்ளிட்ட அனைத்துக்கும் எதிரான போக்கில் சென்று கொண்டுள்ளது.

இந்தப் போக்கிலிருந்து திரைப்படத் துறையை விடுவிக்கத்தான் தமிழர் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. திரைப்படங்கள்மட்டுமல்லாது, அனைத்துத் தளங்களிலும் தமிழனுக்கு எதிரான போக்கினை தடுத்து நிறுத்துவதே இந்த இயக்கத்தின் நோக்கம்.

தமிழ்நாட்டில்தான் நடிகர்களுக்கு மிகப் பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. ரசிகர் மன்றங்களும் அதிக அளவில் இங்குதான் உள்ளன.தங்களுக்குப் பிடித்த நடிகரைப் போல ஸ்டைல் செய்வது, உடை அணிவது, தலைமுடியை வாரிக் கொள்வது என்பது இங்குதான் அதிகம்.

அமிதாப்பச்சன் படம் வரவில்லையென்றால் அவரது ரசிகர்கள் யாரும் தற்கொலை செய்து கொள்வதில்லை. என்.டி.ஆர். படம்வரவில்லையென்றால் அவரது ரசிகர்கள்யாரும் தற்கொலை செய்து கொண்டதில்லை. ஆனால் தமிழ்நாட்டில் இது நடக்கிறது.

தன் ஹீரோவின் படம் வரவில்லையென்றால் துக்கம் அனுஷ்டிக்கிறான் தமிழ் இளைஞன். இளைஞர்களை சீரழிக்கும் இந்த மோகத்தைப்பயன்படுத்திக் கொண்டுதான் இங்குள்ள நடிகர்களும் தங்களது ஆசாபாசங்களை மன்றங்களின் மூலம் நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.

தமிழ் படங்கள் திரையரங்குகளோடு நின்று விட்டால் எங்களுக்கு ஒரு கவலையும் இல்லை. ஆனால் கோட்டை வரைகோலோச்சுவதால்தான் எங்களுக்குக் கவலை ஏற்படுகிறது. இப்படிச் சொல்வதன் மூலம் நடிகர்களை அரசியலுக்கு வரக் கூடாது,பதவிகளை வகிக்கக் கூடாது என்று கூறுவதாக அர்த்தம் இல்லை.

அவர்கள் தாராளமாக அரசியலுக்கு வரலாம், நாடாளலாம். ஆனால் சினிமா என்ற விளம்பரத்தையும், புகழையும் மட்டும் பயன்படுத்தக்கூடாது. இந்த மக்களுக்காக போராடி, வாதாடி, உழைத்து அரசியலுக்கு வர வேண்டும். குறுக்கு வழியில் பதவியை அடைய நினைக்கக்கூடாது.

இலங்கையில் விடுதலைப் புலிகள் கழுத்தில் சயனைடு குப்பிகளை கட்டிக் கொண்டு போராடுகிறார்கள். அந்த அளவிற்கு இல்லாவிட்டாலும்குறைந்தபட்சம் இதுபோன்ற கலாச்சார சீரழிவுகளை எதிர்த்தாவது நாங்கள் போராட இருக்கிறோம்.

தமிழ்ப் படங்களுக்கு தமிழில் பெயர் வையுங்கள் என்று கோரிக்கை வைக்கிறோம். இதை வேண்டுகோளாக, கடிதம் மூலமாக, நேலும்தெரிவிக்கிறோம். இதில் தயாரிப்பாளர்களின் வணிகத்தில் நாங்கள் குறுக்கிடுவதற்கான வாய்ப்பே இல்லை. அது எங்களது நோக்கமும்இல்லை.

ஆனால் தமிழ் பாதுகாப்பு இயக்கம் வேண்டுகோள் விடுத்த பிறகும் கமல்ஹாசன் எனது படத்திற்கு பாதி தமிழிலும், பாதிஆங்கிலத்திலும்தான் பெயர் வைப்பேன் என்று கூறுகிறார். படத்தின் கதையைப் பார்த்தால் நான் பெயர் வைத்ததற்கான காரணம் புரியும்என்கிறார்.

கமல்ஹாசனின் திறமை மீது அவரது நடிப்பு மீது எங்களுக்கு எப்போதுமே நல்ல மரியாதை உண்டு. ஆனால் அவரது போக்கு வருத்தம்தருகிறது. தன்னை தமிழ் பற்றாளன் போல அவர் காட்டிக் கொள்கிறார். தமிழ் பள்ளிகளுக்கு உதவுகிறார். ஆனால் தமிழில் பெயர் வைக்கமறுக்கிறார்.

இதைப் பார்க்கும்போது மக்களை போலும் கள்வர் என்ற திருவள்ளுவன் கூற்றுதான் எனக்கு நினைவுக்கு வருகிறது.

தமிழகத்தில் இன விரோதிகள் கூட தங்களை தமிழ் பற்றாளர்களாக காட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதேபோல எஸ்.ஜே.சூர்யாஎன்ற ஒரு இயக்குனர் தனது படத்திற்கு பி.எப். என்று பெயர் வைத்துள்ளார். கேட்டால் பெஸ்ட் பிரண்ட் என்கிறார்.

இப்படித்தான் பெயர் வைப்பேன், நானும் தமிழன்தான், டைட்டில் தவறு என்பது பார்ப்பவர்களின் பார்வையைப் பொருத்தது என்றுவீராப்பாக பேட்டி தருகிறார். இதன் மூலம் ரசிகர்களை அவர் அவமதிக்கிறார், நல்ல நிண்பன் என்ற பெயரையும் கொச்சைப்படுத்துகிறார்.

இவர்களுக்கு ஒரு வேண்டுகோள். தங்களைத் திருத்திக் கொண்டு படங்களின் பெயரையும் மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால்தமிழர்கள் உங்களைத் திருத்துவார்கள், தமிழகத்தில் எங்கேயும் படம் எடுக்க முடியாத நிலை ஏற்படும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்என்றார் திருமாவளவன்.

விழாவில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் தியாகராஜன், கவிஞர்கள் மு.மேத்தா, காசிஆனந்தன், பிறைசூடன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil