»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

கன்னட திரையுலகினருக்கு ஒத்துழைப்பு தரக் கூடாது என்று பிற மொழி திரையுலகினர் முடிவெடுத்துள்ள நிலையில்,கன்னடப் படங்களில் நடிக்கத் தயார் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

நடிகர் ரிச்சர்ட் (ஷாலினியின் அண்ணன்) சென்னையில் டிவிடி வாடகை நிறுவனம் வைத்திருக்கிறார். இவர்தற்போது பெங்களூர் கோரமங்களா 6வது பிளாக் 80 அடி சாலையில் சினிமா பாரடைஸோ என்ற பெயரில் புதியநிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

கமல் இந் நிறுவனத்தை துவக்கிவைத்தார். றுதாடக்கவிழாவில் நடிகர்கள் ரிச்சர்ட், ரமேஷ் அரவிந்த், நடிகைகள்ஷாலினி, பூஜா, ஷாமிலி, நிறுவனத்தின் இன்னொரு பங்குதாரர் சந்தோஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் கமல் நிருபர்களிடம் பேசுகையில்,

கர்நாடகத்தில் பிற மொழி படங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பது வருத்தம் அளிக்கிறது.திரைப்படங்களுக்கு மொழி ஒரு பிரச்சினையே அல்ல. எந்த மொழி படத்தையும் எங்கு வேண்டுமானாலும்திரையிடலாம்.

கர்நாடக திரையுலகினருக்கு இருப்பது போன்ற பிரச்சினை எல்லா மாநில திரையுலகிற்கும் இருக்கிறது. இதற்குபேச்சுவார்த்தை மூலம்தான் தீர்வு காண வேண்டும். எனவே கர்நாடகத்தில் பிற மொழிப் படங்களுக்குவிதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தவறானது.

நான் குறிப்பிட்ட மொழியை மட்டும் சேர்ந்த கலைஞன் அல்ல. நான் எல்லா மொழிகளுக்கும் சொந்தமான நடிகன்.தமிழில் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிப் படங்களிலும் நான் நடித்துள்ளேன்.

கன்னட சினிமாவில் நடிக்க இப்போது வாய்ப்பு கிடைத்தாலும் நடிப்பதற்குத் தயாராகவே இருக்கிறேன். நான் கூடமுதலில் தமிழில் நடிக்கவில்லை. வேறு மொழியில் நடித்து தான் தமிழுக்கு வந்தேன். யார் வேண்டுமானாலும் எந்தமொழி படத்திலும் நடிக்கலாம்.

கன்னடத்திலும் எம்.எஸ்.சத்யு, காசரவள்ளி போன்ற பெரிய பெரிய திரைப்பட கலைஞர்கள் உள்ளனர். கன்னடசினிமாவை வளர்க்க முதலில் கர்நாடகாவில் எல்லா நகரங்களிலும் திரையிடும் வகையில் அதிக பிரிண்ட்கள்போட வேண்டும்.

விரல் விட்டு எண்ணும் அளவுக்கு வாங்கப்படும் தமிழ் சினிமாவால் கன்னட சினிமா பாதிக்கப்படுகிறது என்பதையாரும் ஏற்க மாட்டார்கள். ஆகையால் கர்நாடகத்தில் பிற மொழி படங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைநீக்கி அனைத்து மொழி படங்களும் திரையிட ஏற்பாடு செய்ய வேண்டும்.

மருதநாயகம் திரைப்படம் எடுக்கும் திட்டத்தை நான் கைவிடவில்லை. அது ரூ.40 கோடி செலவில் எடுக்கவேண்டிய படம் ஆகும். அடுத்ததாக தமிழில் ஒரு படம் நடிக்கிறேன். அதற்கு அடுத்ததாக இந்தியில் ஒரு படம்நடிக்கிறேன் என்று கமல் கூறினார்.

முன்னதாக கமல், ஷாலினி, பூஜா ஆகியோர் வந்திருப்பதை அறிந்து அந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கானோர்கூடினர். அவர்களைக் கட்டுப்படுத்த போலீஸார் மிகவும் சிரமப்பட்டனர், பின்னர் போலீஸார் லேசான தடியடிநடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர்.

இந்த டிவிடி வாடகை நிறுவனத்தினுள் சர்வதேச தரத்தில் டிவிடி ஹோம் தியேட்டர் வசதி உள்ளது. டிவிடியை பார்க்கவிரும்புவோர் ஹோம் தியேட்டரில் உரிய கட்டணம் செலுத்தி படம் பார்க்கலாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil