»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Subscribe to Oneindia Tamil

வசூல்ராஜா என்று ஒரு தனி நபரை மட்டுமே எனது படம் குறிக்கிறது, டாக்டர்களை வசூல் ராஜாக்கள் என்றுகூறவில்லை என்று வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். பட தலைப்பு விவகாரம் தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் விளக்கம்அளித்துள்ளார்.

கமல்ஹாசன் நடிக்க, சரண் இயக்க வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் தலைப்புடாக்டர் தொழிலை அவமதிக்கும் வகையிலும், டாக்டர்களை இழிவுபடுத்தும் வகையிலும் இருப்பதாகக் கூறிதமிழ்நாடு டாக்டர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

படத் தலைப்பை மாற்றக் கோரி போராட்டம் நடத்தவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர். இந் நிலையில் இதுகுறித்துகமல் கூறுகையில், இரண்டாவது முறையாக எனது படத்திற்கு இதுபோல நடக்கிறது. படத்தை பார்க்காமல்எதையும் கூறக் கூடாது. படத்தின் தலைப்பு பற்றி அவர்கள் நினைப்பது தவறான கருத்து.

இந்தியில் வெளியாகி முன்னாபாய் எம்.பி.பி.எஸ். என்ற பெயரில் வெற்றிகரமாக ஓடிய படத்தைத்தான் நாங்கள்தமிழில் எடுக்கிறோம். இப்படத்தை லண்டனில் உள்ள டாக்டர்கள் பாராட்டியுள்ளனர். ஆனால் இங்குள்ளடாக்டர்கள் ஏன் எதிர்க்கிறார்கள் என்பது புரியவில்லை.

வசூல்ராஜா என்ற பெயர் டாக்டர்களைக் குறிக்கவில்லை. கதாநாயகனின் தொழிலைத்தான் குறிக்கிறது, ஆனால்கதாநாயகனும் டாக்டர் அல்ல. எனவே டாக்டர்கள் அவசரப்பட்டு புகார் கூறக் கூடாது என்று கூறினார் கமல்.

பிரச்சினைகள் ஒரு பக்கம் இருக்க, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். வேகமாக வளர்ந்து வருகிறது. படத்தில் ஆடியோவொர்க் ஏறத்தாழ முடிந்து விட்டது. பரத்வாஜ் இசையில் கமல்ஹாசன் 2 பாடல்களைப் பாடியுள்ளார். பரத்வாஜும்ஒரு பாட்டைப் பாடியுள்ளார். இதுதவிர கருணாஸின் மனைவி கிரேஸும் ஒரு பாட்டுப் பாடியுள்ளார்.

கருணாஸ் பற்றி சிறுகுறிப்பு:

சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு கருணாஸும், கிரேஸும் சேர்ந்து மெல்லிசைக் குழு வைத்திருந்தார்கள்.இப்போது அந்தக் குழுவை கிரேஸே தனித்துப் பார்த்து வருகிறார். நந்தாவில் லொடுக்குப் பாண்டியாகஅறிமுகமான கருணாஸ், கோடம்பாக்கத்தில் லொடுக்குப் பாண்டி என்ற பெயரில் சிறு ரெஸ்டாரன்ட் நடத்திவருகிறார். ஷூட்டிங் நேரம் போக மற்ற நேரங்களில் கருணாஸை இங்கேதான் பார்க்க முடியும்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil