»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Subscribe to Oneindia Tamil

மீபத்தில் பஞ்சதந்திரம் படப் பிடிப்பு தொடர்பாக கனடா சென்ற கமல்ஹாசன் அங்கிருந்து அமெரிக்கா செல்வதற்காகடொரண்டோ விமான நிலையம் சென்றபோது அவரது பெயரையும் தாடியையும் பார்த்த அதிகாரிகள் அவரை தீவிரவாதி என்றுநினைத்து தள்ளிக் கொண்டு போய் குடைந்து எடுத்தது நமக்குத் தெரியும்.

தான் பட்டபாடு குறித்து ஒரு ஆங்கில பத்திரிக்கைக்கு பேட்டியளித்திருக்கிறார் கமல். அதன் விவரம்:

டொராண்டோவில் இருந்து லாஸ்ஏஞ்சல்ஸ்க்கு மேக்கப் டெஸ் சம்பந்தாமாக செல்ல இருந்தேன். ஆனால், விமான நிலையகஸ்டம்ஸ் அதிகாரிகள் என்னை கேள்விகளால் துளைத்து எடுத்து விட்டார்கள். அவர்கள் மேல் தவறு ஒன்றும் இல்லை, செப்டம்பர்11ஆம் தேதி அமெரிக்காவில் நடந்த தாக்குதல் அவர்களை அவ்வாறு கேள்வி கேட்க வைத்துள்ளது.

என்னுடைய பெயரின் இறுதியில் வரும் ஹாசன் என்பதை ஹசன் என்று நினைத்துக் கொண்டனர். என்னுடைய தாடியைப்பார்த்தவுடன் மேலும் சந்தேகம். இதனால் என்னை தீவிரவாதி என்றே முடிவுகட்டி விட்டனர். நான் ஏன் அமெரிக்கா செல்கிறேன்,எனக்கு அங்கு என்ன வேலை என்பதை தெரிந்து கொள்ள விரும்பினார்கள்.

எதற்காக இங்கு வந்துள்ளீர்கள் என்று கேட்டார்கள். நான் சினிமா பட ஷூட்டிஹ்கிற்கு வந்திருப்பதாகச் சொன்னேன். உடனேதயாரிப்பாளர் பெயரைக் கேட்டார்கள். பின்பு எதற்காக லாஸ் ஏஞ்சல்ஸ் போகிறீர்கள் என்று கேட்டார்கள்.

ப்ராஸ்தடிக் என்று ஒரு மேக்கப் போடுவதற்காக சென்று கொண்டிருக்கிறேன் என்று நான் சொன்னவுடன் அவர்கள் முகத்தில் ஒருகுழப்பம். அவர்களுக்கு இது பற்றி எதுவும் தெரியவில்லை என்று புரிந்தது. உடனே என்னால் முடிந்த அவர்களுக்குவிளக்கினேன். நான் நடிக்கின்ற படத்தில் என்னுடைய கேரக்டருக்குன்னு ஒரு லுக் இருக்கு. இந்த மேக்கப் போட்டால் தான் அந்தலுக் கிடைக்கும் என்று விளக்கினேன். அவர்கள் என்ன புரிந்து கொண்டார்களோ தெரியவில்லை.

பின்பு அதை விட்டுவிட்டு உங்கள் விமானச் செலவை யார் ஏற்றுள்ளார்கள் என்று கேட்டனர். எனக்கு அந்த விஷயத்தை பற்றிஎதுவும் தெரியாது. ஆகையால் தெரியாது என்று கூறினேன். உடனே, இதையெல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டாமா?கஸ்டம்ஸ் விஷயங்களுக்கு இதெல்லாம் முக்கியம் என்று தெரியாதா? என்று ஒரு நீண்ட உபதேசம். விதியே என்று கேட்டுக்கொண்டேன்.

நான் பிரயாண சம்பந்தமான பேப்பர்களை எல்லாம் காட்டி விளக்கினேன். அப்படி இருந்தும் அவர்கள் என்னை விடுவதாய்இல்லை. என்னை ஒரு தனி அறைக்குள் அழைத்துக் கொண்டு போய் ஒரு பயஙகரவாதியை விசாரிப்பது போல் விசாரித்தனர்.

ஷூட்டிங்கிற்காக லாஸ் ஏஞ்சல்ஸ் போகிறீர்களா என்று கேட்டனர். இல்லை மேக்கப் போடுவதற்காக போகிறேன் என்று கூறினேன்.பின்பு ஏன் ஷூட்டிங்கிற்காக போகிறேன் என்று கூறினீர்கள் என்று கேட்டனர். நான் முதலில் சொன்ன பதிலை அவர்கள் தவறாகபுரிந்து கொண்டனர். அப்படி நான் கூறவே இல்லையே என்று கூறிவிட்டு, ஷூட்டிங் டொராண்டோவில் முடிந்துவிட்டது. மேக்கப்போடுவதற்காக லாஸ்ஏஞ்சல்ஸ் போகிறேன் என்று கூறினேன்.

லாஸ்ஏஞ்சல்ஸ்ல மேக்கப் போட்டுட்டு ஷூட்டிங்கிற்கு இந்தியாவுக்கு போவீர்களா என்று கிண்டினார்கள். எனக்கு என்ன சொல்லிஇவர்களுக்கு புரிய வைப்பது என்று புரியவில்லை. அவர்களுக்கு மீண்டும் மேக்கப் பற்றி விளக்குவதற்குள் போதும் போதும்என்றாகிவிட்டது.

டொராண்டோ வருவதற்கு முன் லாஸ் வேகாஸ்க்கு ஏன் சென்றீர்கள் என்று கேட்டனர். நேஷனல் அஸோஷியேஷன் ஆஃப்ப்ராட்காஸ்ட் நடத்திய கன்பரன்சில் கலந்து கொள்ளச் சென்றதாக கூறினேன். அதை ஏனோ ஒப்புக் கொண்டார்கள்.

பிறகு திடீரென நீங்கள் போகலாம் என்று கூறினர். அப்பாடா, ஒரு வழியாய் விட்டார்களே என்று சந்தோஷமாய் எனதுடிக்கெட்டைப் பார்த்தால் ரெப்யூஸ்ட் ( refused ) என்று இருந்தது. அதிர்ந்து போய், அப்போ நான் லாஸ் ஏஞ்சல்ஸ் போகமுடியாதா என்று கேட்டதற்கு முடியாது என்று கூறிவிட்டனர் இறுகிய முகத்தோடு.

டொரண்டோவில், ஞாயிற்றுக்கிழமை எந்த அலுவலகமும் இயங்காத அன்று தனிமையில் மிகவும் பாடுபட்டுவிட்டேன்.ஆனாலும் அந்த அதிகாரிகள் விசாரிக்கும்போது நான் கோபப்படவே இல்லை. மகாத்மா காந்தியின் தீவிர விசிறி நான்.மகாத்மாவை தென்ஆப்பிரிக்க ரெயிலில் இருந்து வெளியே எறிந்ததை விடவா இது கசப்பான விஷயம் என்று என்னை நானேதேற்றிக் கொண்டேன்.

இவ்வாறு கமல் கூறியுள்ளார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil