»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

எந்த ஜாதிக்கும் ஆதரவாக நான் செயல்படவில்லை. ஆனால் அரசியல்வாதிகள் தான் ஜாதிகளால் பிழைக்கிறார்கள். ஓட்டுக்களைப் பெற அவர்களுக்கு ஜாதிகள் தேவைப்படுகின்றன என்று நடிகர் கமல்ஹாசன் குற்றம் சாட்டினார்.

விருமாண்டி படம் தொடர்பான சர்ச்சைகளிலிருந்து மீண்டும் சற்றே ஓய்வாக உள்ள கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். விருமாண்டிக்காக சென்னை கேம்ப கோலா மைதானத்தில் போடப்பட்ட பல கோடி மதிப்பிலான செட்டிலேயே இச் சந்திப்பு நடந்தது.

அவரது பேட்டி:

நான் எந்த ஜாதிக்கும் ஆதரவாக செயல்படவில்லை. ஆனால் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு அரசியல்வாதியும் ஏதாவது ஒரு ஜாதியை நம்பித்தான் அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார். அந்த ஜாதி அரசியலை விட்டு வெளியே வர அவர்கள் தயாரா?

வாக்காளர் பட்டியலில் ஜாதி உள்ளது. அதை முதலில் ஒழிக்க அரசியல்வாதிகள் முன்வர வேண்டும். அதற்குப் பிறகு சினிமாக்காரர்களை கண்டிக்கலாம். சினிமாக்காரர்கள் ஜாதியை வைத்து படம் எடுப்பதை விட வேண்டும் என்றால் அரசியலிலும் ஜாதி ஒழிய வேண்டும்.

அதற்கு அரசியல்வாதிகள் முன்வந்தால் நாங்கள் ஜாதிகளை வைத்து படம் எடுப்பதை விட்டு விடுகிறோம்.

மேலும் ஒவ்வொருவரின் மனதிலும் ஜாதி உள்ளது. தெருக்களில் உள்ள ஜாதிப் பெயரை எடுத்து விட்டால் மட்டும் ஜாதி போய் விடுமா? ஒவ்வொருவரின் நெற்றியிலும் பட்டை உள்ளதே, முன்பு சாதாரணமாக தொப்பி போட்டுக் கொள்வார்கள், இப்போது அழுத்தமாக தொப்பி போட்டுக் கொள்கிறார்கள். அவர்களின் கோபம் எனக்குள்ளும் உள்ளது.

எங்களது எல்லை எது என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் எல்லை மீறி போனால் அதை சுட்டிக் காட்ட, தட்டிக் கேட்க சென்சார் போர்டு உள்ளது. இதை மீறி யாராவது எங்களது எல்லைக்குள் வந்தால் அவர்களை மதிக்க நாங்கள் தயரிால்லை.

திருட்டு விசிடி பிரச்சினையை தீர்க்க ஒரே வழி, திரைப்படத்துறையினரே நேரடியாக விசிடிக்களை தயாரித்து விடுவதுதான் என்றார் கமல்.

பேட்டியின்போது படு வேகமாக தனது கருத்துக்களை முன் வைத்தார் கமல்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil