»   »  திரை விருந்துக்கு தயாராகுங்கள்: கமல்

திரை விருந்துக்கு தயாராகுங்கள்: கமல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

"மும்பை எக்ஸ்பிரஸ் வெளியாகும் நாளில் "சந்திரமுகியும் வெளியாவது தற்செயலானது. எனது மற்றும் ரஜினி ரசிகர்களுக்கு இருபடங்களும் நல்ல விருந்தாக அமையும். அதை அனுபவிக்க ரசிகர்கள் தயாராகுங்கள் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் நடித்துள்ள "சந்திரமுகியும், கமல்ஹாசன் நடித்துள்ள "மும்பை எக்ஸ்பிரஸ் படமும் ஏப்ரல் 14ம் தேதி ஒரே நாளில்வெளியாகின்றன. இருவரது படங்களும் ஒரே நாளில் வெளியாவது நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடைபெறவுள்ளதால்இருவரது ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

இந்த நிலையில் தனது பட ரிலீஸ் குறித்து கமல் கூறுகையில், ரஜினியின் படமும், எனது படமும் ஒரே நாளில் வெளியாவதுதற்செயலானது. இருவருமே, இதுவரை மோதிக் கொண்டதில்லை.

எங்களுக்குள் எந்தவித கசப்புணர்வுகளும் ஏற்பட்டதில்லை. நாங்கள் மட்டுமல்ல, எங்களது ரசிகர்களும் மோதிக் கொள்ளாமல்மிகுந்த எச்சரிக்கையுடன்தான் இருந்து வருகிறோம்.

இருவரது ரசிகர்களுக்கும் வருகிற தமிழ்ப் புத்தாண்டு நல்ல விருந்தைக் கொடுக்கவுள்ளது. அதை அனுபவிக்க அவர்கள் தயாராகவேண்டும்.

எனது படம் நல்ல நகைச்சுவைப் படம். வழக்கமாக ரஜினியின் படத்தில் அவர் தான் பலம். கதை இரண்டாம் பட்சமாகத் தான்இருக்கும். ஆனால் "சந்திரமுகியில் கதையும் நன்றாக இருப்பதாக கேள்விப்பட்டேன்.

அனைத்து வசதிகளும் நிறைந்த மும்பை மாநகரத்தில், எந்தவித வசதியையுமே அனுபவிக்காமல், அதுகுறித்து கொஞ்சம் கூடத்தெரியாமல் வாழும் மக்களைப் பற்றிய கதைதான் "மும்பை எக்ஸ்பிரஸ். கொஞ்சம் நையாண்டியாக அதைக் கொடுத்துள்ளோம்.

இந்தப் படத்தில் நான் இதுவரை செய்யாத பாத்திரத்தில் நடித்துள்ளேன். அதாவது மரணக்கிணற்றில் மோட்டார் சைக்கிள் ஓட்டிப்பிழைப்பவராக நான் நடித்துள்ளேன். பல காட்சிகளை நானேதான் செய்துள்ளேன். டூப் போடவில்லை.

"வசூல் ராஜா னு பேர் வெச்சேன். இதுக்கு டாக்டர்கள் எல்லாம் சேர்ந்து கோவிச்சுக்கிட்டாங்க.. "திருடா னு கூப்பிட்டா இவங்கஎதுக்கு திரும்பிப் பார்க்கிறாங்கன்னு தெரியல. வசூல் பண்ற டாக்டரே நம்மூரில் இல்லைன்னு உங்களால சொல்லமுடியுமா ?

சாதாரண ஜனங்களிடம் போய் கேட்டுப்பாருங்க..எது உண்மைன்னு தெரியும். அந்த கலாட்டா முடிஞ்சுது. இப்போ அடுத்தது!"மும்பை எக்ஸ்பிரஸ் னு பேர் வெச்சேன். அது ஆங்கிலத் தலைப்புன்னு மாத்தச் சொல்றாங்க.

நான் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திக்க விரும்புகிறேன். "குருதிப்புனல்" னு பேர் வெச்சப்போ என்னை யாரும் பாராட்டவில்லை.

இப்போ இந்தப்படத்தில் கதை மும்பையைச் சுற்றி நடக்குது. என் பேரே படத்தில் அது தான். அதுக்காக நிறைய செலவுசெய்தாகிவிட்டது. திடீர்னு பேரை மாத்தச் சொன்னா எப்படி என்றார் கமல்.

நியாயந்தானே!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil