»   »  மிரட்டலுக்குப் பணிய மாட்டேன்: கமல்

மிரட்டலுக்குப் பணிய மாட்டேன்: கமல்

Subscribe to Oneindia Tamil

மும்பை எக்ஸ்பிரஸ் படத்தின் பெயரை மாற்றுமாறு மிரட்டினால் அதற்குப் பயப்பட மாட்டேன், பணிய மாட்டேன் என்று நடிகர்கமல்ஹாசன் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

தனது பெஸ்ட் பிரண்ட் படத்தின் பெயரை மாற்ற இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா இன்று அறிவித்தார்.

ஆனால், கமல் தனது நிலையில் பிடிவாதமாகவே உள்ளார்.

பெயரை மாற்றியே தீர வேண்டும் என்று தமிழ் பாதுகாப்பு இயக்கம் உறுதியாக கூறி வருகிறது. ஆனால் முடியாது என்று கமல்மறுத்து வருகிறார்.

சென்னையில் கருத்துச் சுதந்திரமும், பொறுப்பும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. அதில் கலந்து கொண்டு கமல்பேசுகையில்,

பணிவதா, இல்லையா என்பது இப்போது பிரச்சினையில்லை. பணிவதால் மக்களுக்கும், இந்த சமுதாயத்திற்கும் எந்தப் பலனும்ஏற்படாது. மாறாக, ஒரு சிறு அரசியல் குழுவினருக்கு மட்டுமே திருப்தியும், சந்தோஷமும் கிடைக்கும். அதை நான்விரும்பவில்லை.

விமர்சனத்திற்கு நான் பயப்பட மாட்டேன். மாறாக அதை வரவேற்கிறேன். ஆனால் வன்முறை மூலமோ அல்லது மிரட்டல்மூலமோ அது வந்தால் நிச்சயம் அதற்கு நான் பணிய மாட்டேன்.

எனது படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று சில தமிழ் அமைப்புகள் கோரி வருகின்றன. ஆனால் அவர்களதுபோராட்டத்தை முதலில் ரயில்வே நிலையத்திலிருந்து அவர்கள் தொடங்க வேண்டும். இன்னும் திருநெல்வேலி எக்ஸ்பிரஸ்,மும்பை எக்ஸ்பிரஸ் என்ற பெயர்களில் ரயில்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. அவற்றை முதலில் மாற்ற அவர்கள் கோரட்டும்.

சண்டியர் படத்தின் பெயரை நான் மாற்றியதற்குக் காரணம் அதில் செய்யப்பட்டிருந்த நிதி முதலீட்டுக்குப் பாதுகாப்பு வேண்டும்,வினியோகஸ்தர்களுக்கு பிரச்சினை வரக் கூடாது என்பதற்காகத்தான். வேறு எந்தக் காரணத்திற்காகவும் படப் பெயரை நான்மாற்றவில்லை.

இருப்பினும், சண்டியர் என்ற பெயரை விட விருமாண்டி என்ற பெயரில்தான் ஜாதீய அறிகுறிகள் அதிகம் இருந்தன என்பதுதான்உண்மை என்றார் கமல்.

இதற்கிடையே மும்பை எக்ஸ்பிரஸ் ரிலீஸ் கொஞ்சம் தள்ளிப் போகலாம் என்றும் காதில் செய்திகள் விழுகின்றன. உயர் டிஜிட்டல்தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளதால், தியேட்டர்களில் சிறிய டெக்னிக்கல் இம்ப்ரூப்மெண்ட் தேவைப்படுகிறதாம்.

அதைச் செய்ய உரிய கால அவகாசம் தந்து, அவசரப்படாமல் படத்தை கமல் வெளியிடுவார் என்கிறார்கள். திட்டமிட்ட ஏப்ரல்14ல் இல்லாவிட்டாலும் ஏப்ரலுக்குள் கட்டாயம் படத்தை ரிலீஸ் செய்துவிடுவதில் தீவிரமாய் இருக்கிறார் கமல்.

இதை வெளியிட்ட கையோடு அடுத்து ரோஜா கம்பைன்ஸ் காஜா முகம்மது தயாரிப்பில் காக்க.. காக்க கெளதமின் இயக்கத்தில்வித்தியாசமான 3 வேடங்களில் நடிக்கப் போகிறார் கமல். இதற்காக கமலுக்கு பெரிய சம்பளம் பேசியிருக்கிறார் காஜா முகம்மதுபாய்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil