For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கமல்ஹாசன் என்னை பாராட்டவே இல்ல.. கண்டிப்பா விருது வாங்குவேன்..நடிகை லிசி எக்ஸ்குளூசிவ்!

  |

  சென்னை: இந்த வருடம் தனக்கு பல விருதுகளை பெற்று தரும் என்று நம்புவதாக நடிகை லிசி ஆண்டனி தெரிவித்துள்ளார்.

  Recommended Video

  Lizzie Antony Exclusive | கண்டிப்பா ஒருநாள் Award வாங்குவேன் | Filmibeat Tamil

  2017ம் ஆண்டு, தரமணி படத்தில் நான் நடித்தபோது இயக்குனர் ராம் கூறுகையில், நடிகர் கமலஹாசன் உங்களை அழைத்து பாராட்டுவார் என்றும், பல விருதுகளை பெறுவீர்கள் என்றும் கூறினார்.

  இன்று வரை எனக்கு நடிகர் கமலஹாசனிடம் இருந்து எந்த ஒரு அழைப்பும் வரவில்லை. ஆனால் மனம் தளராமல் இன்று வரை அவரது அழைப்புக்காக காத்து கொண்டிருக்கிறேன் என்றார்.

  குவியும் குத்தாட்ட வாய்ப்புகள்.. இன்னும் பல கோடிகளை அதிரடியாக ஏற்ற நடிகை.. அப்படி ஆடவும் ரெடியாம்?குவியும் குத்தாட்ட வாய்ப்புகள்.. இன்னும் பல கோடிகளை அதிரடியாக ஏற்ற நடிகை.. அப்படி ஆடவும் ரெடியாம்?

   என்னை யாரும் சிபாரிசு செய்யவில்லை

  என்னை யாரும் சிபாரிசு செய்யவில்லை

  கேள்வி: தங்களுடைய திரையுலக பயணம் குறித்து....

  பதில்: இந்த சினிமா உலகில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள நினைத்த ஆர்வம் தான் என்னை உள்ளே இழுத்தது. நான் திரையுலகுக்கு வரும்பொழுது, எனக்கு யாரையும் தெரியாது. யாரும் என்னை சிபாரிசும் செய்யவில்லை. என்னுடைய உழைப்பு, விடாமுயற்சியின் காரணமாக தங்க மீன்கள் திரைப்படம் முதல் இன்று வரை பத்து வருடங்களாக இந்த திரையுகில் பயணிக்கிறேன். நான் எப்பொழுதும் இயக்குனர் கூறுவதை கேட்டு நடிக்கும் நடிகை.

   குருநாதர் இயக்குனர் ராம் சார் தான்

  குருநாதர் இயக்குனர் ராம் சார் தான்

  கேள்வி: வித்தியாசமான படங்கள், வேறுபட்ட இயக்குனர்களுடன் பணிபுரிந்துள்ளீர்கள். உங்களுக்கு பிடித்த இயக்குனர் யார்?

  பதில்: கண்டிப்பாக இயக்குனர் ராம் சார் தான். இவர் தான் எனது குருநாதர். அவரது படங்களில் நான் நடிக்கும்பொழுது ஸ்க்ரிப்ட் எனக்காகவே எழுதியது மாதிரி தோன்றும். இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின் படங்களில் நடிக்கும்பொழுது, டென்ஷன் இல்லாமல் ரொம்ப அழகாக வேலை செய்ய முடியும். எவ்வளவு கஷ்டமான சீனாக இருந்தாலும் எளிதாக பண்ண முடியும். இயக்குனர் செல்வராகவனுடன் சாணிக்காகிதம் திரைபடத்தில் நடிகையாக நடித்துள்ளேன். அந்த அனுபவம் மிகவும் அருமையாக இருந்தது. இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் உருவாக்கும் என நம்புகிறேன்.

   முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்

  முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்

  கேள்வி: ரைட்டர் திரைப்படம் குறித்து...

  பதில்: நான் கதை கேட்கும்பொழுது இதில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று எனக்கு தோன்றினால் மட்டுமே நடிக்க ஒத்துக் கொள்வேன். அதைப்போலவே இப்படத்தின் கதை கூறும்பொழுது, இதில் நான் தான் நடிப்பேன் என்று கூறினேன். சமுத்திரகனி போன்ற திறைமைசாலிகளுடன் பயணம் செய்வது பல விதத்தில் சினிமா அனுபவங்களை கற்று கொள்ள முடியும் .

   பெருமையாக உள்ளது

  பெருமையாக உள்ளது

  கேள்வி: உங்களது கேரக்டர் குறித்து....

  பதில்: இந்த கேரக்டரை இவர் செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து என்கிட்டே வரும்பொழுது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கும். அப்பொழுது எனது பொறுப்புணர்வு இன்னும் அதிகமாகி விடுகிறது. திரைபடத்தில் ஒரு சீன் வந்தாலும், அது முக்கியமானதாக இருக்க வேண்டும் என்பது எனது எண்ணம். அம்மா, அண்ணி, அக்கா எந்த கேரக்டராக நான் உருவெடுத்தாலும் அந்த கேரக்டரை நான் சிறப்பாக செய்ய வேண்டும் என எண்ணுவேன்.

   ஜாலியாக ஒரு படம் பண்ணனும்

  ஜாலியாக ஒரு படம் பண்ணனும்

  கேள்வி: உங்களால் பேமிலி, சினிமா எப்படி இரண்டையும் மேனேஜ் செய்ய முடிகிறது?

  பதில்: என்னோட வளர்ச்சி மெதுவானதற்கு என் மகன் தான் காரணம். அவன் வளரும் சமயத்தில் அம்மாவாக என்னுடைய பங்கு ரொம்ப முக்கியம். அதனால் பல படங்களை நான் இழந்து இருக்கிறேன். இப்பொழுது அவன் காலேஜ். அதனால் நான் செட்டில் ஆகி விட்டேன். நல்லது நினைத்தால் நல்லது நடக்கும். என்னுடைய கனவு என்னவென்றால், தற்போது ஹெவிரோல் பண்ணி கொண்டு இருக்கேன். ஒரு சீன்ல மட்டும் இல்லாமல் படம் முழுவதும் அழுத்தமான வித்யாசமான பல மொழி படங்கள் நடிக்கணும். மேலும் ஜாலியாக ஒரு காமெடி படம் பண்ண வேண்டும் என்பது தான் என்னுடைய கனவு.

   நல்லது நினைத்தால் நல்லது நடக்கும்

  நல்லது நினைத்தால் நல்லது நடக்கும்

  கேள்வி: தற்பொழுது எத்தனை படம் கைவசம் உள்ளது?

  பதில்: இந்த ஆண்டு 11 படங்கள் ரிலீசாக உள்ளது. அதில் குறிப்பாக பொம்மை நாயகி, நட்சத்திரம் நகர்கிறது, ராங்கி, ஜோஸ்வா, நயன்தாராவுடன் கனெக்ட், பா.ரஞ்சித் இயக்கிய விக்டீம் போன்றவை.

  கேள்வி: உங்களுடைய ஆசை?

  பதில்: நான் நல்லா உழைக்கிறேன். இந்த வருஷம் கண்டிப்பாக விருது வாங்க வேண்டும் என்று ஆசைப்படறேன். நல்லது நினைத்தால் நல்லது நடக்கும் என்பது எனது நம்பிக்கை. என்று தனது அனுபவங்களை பகிர்ந்தார் லிசி.இன்னமும் நிறைய கேள்விகள் மற்றும் பதில்கள் இந்த வீடியோவில் சுவாரஸ்யமாக உள்ளது . இந்த முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனல் சென்று காணலாம் .

  English summary
  Kamalhaasan Didn't appreciate me Till now Says Lizzie Antony in Exclusive Interview
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X