»   »  கமலினியின் ஆசைகள்

கமலினியின் ஆசைகள்

Subscribe to Oneindia Tamil

தெலுங்கில் இருந்து வந்து வேட்டையாடு விளையாடு படத்தில் நடித்த கமாலினிக்கு அதன் பிறகு தமிழில் நிறைய வாய்ப்புகள் வந்தும் அதை ஏற்கவில்லையாம்.

மேற்கு வங்கத்தை சேர்ந்த இந்த ஆப்பிளுக்கு நடிப்பை விட படம் இயக்கும் ஆசை மேலோங்கி நிற்கிறதாம்.

மேடை நாடகங்களில் இருந்து சினிமாவிற்கு வந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. நல்ல வேடங்களை விட நல்ல படங்களை தேர்வு செய்யும் பக்குவம் இவரிடம் இருக்கிறது. இதனால் குறைவான படங்களில் நடித்தாலும் நல்ல பெயர் வாங்கியிருக்கிறார்.

அதே போல மீண்டும் மேடை நாடகங்களில் நடிக்கவும் ஆசையாக உள்ளாராம். ஆனால், அதற்கான நேரம் கிடைக்கவில்லை என்று வருத்தப்படுகிறார்.

அதை விட படம் இயக்கும் ஆசை தான் மேலோங்கி நிற்கிறதாம்.

அவரிடம் பேசும்போது, தமிழில் நல்ல இயக்குநர்களின் படங்களில் நடிக்க விரும்பிகிறேன். கிளாமர், ஹோம்லி என எந்த வட்டத்தில் சிக்க விரும்பவில்லை. இதுபோன்ற விஷயங்களில் எனக்கு நம்பிக்கையும் இல்லை என்கிறார்.

தமிழ் அவ்வளவு தானா.. இனிமேல் நடிக்க மாட்டீர்களா என்று கேட்டபோது,

பிரியா இயக்கும் கண்ணாமூச்சி ஏனடா படத்தில் நடிக்க இருந்தேன், ஆனால் தெலுங்கில் சத்திய நாராயணா இயக்கும் படத்தில் நடிப்பதால் அந்தப் படத்தில் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை.

இப்போது கரு.பழனியப்பன் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தாகியிருக்கிறேன், இந்த படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. நல்ல கதை கிடைத்தால் தொடர்ந்து தமிழில் நடிப்பேன் என்றார்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil