»   »  ஒரு படம், ரெண்டு காம்னா

ஒரு படம், ரெண்டு காம்னா

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரே தேங்காயில் ரெண்டு ஸ்டிரா போட்டுக் குடிப்பது என்ற வாசகம் ரொம்பப் பாப்புலரானது. அதே மாதிரி, மச்சக்காரன் படத்தில் காம்னாவை, கிளாமராகவும், ஹோம்லியாகவும் காட்டி அசத்தப் போகிறார்களாம்.

எஸ்.ஜே. சூர்யாவிடம் உதவியாளராக இருந்தவர் தமிழ்வாணன். பிறகு குரு சூர்யாவைப் போட்டு கள்வனின் காதலி என்ற படத்தை இயக்கி இயக்குநராக அவதாரம் எடுத்தார்.

முதல் படமே போணியாகவில்லை. இருந்தாலும் மனம் தளராத தமிழ்வாணன் இப்போது, ஜீவன், காம்னா நடிப்பில் மச்சக்காரன் என்ற படத்தை இயக்கப் போகிறார்.

தலைப்பிலேயே படத்தின் கதை புரிந்திருக்கும். தொடர்ந்து அதிர்ஷ்டம் அடித்தால் அவருக்கு எங்கேயோ சிறப்பான இடத்தில் மச்சம் இருக்குப்பா என்பார்கள். இதையே படத்தின் கதைக் கருவாக வைத்து விட்டார் தமிழ் வாணன்.

கதையை ஜீவனிடம் சொன்னபோதே அவர் அசந்து விட்டாராம். அப்படியே காம்னாவை அணுகி கதை சொன்னபோது அவரும் ஜாலியாகி விட்டாராம்.

காம்னாவை தமிழ்வாணன் பிடித்த கதையே ஒரு சுவாரஸ்யம்தான். இதயத் திருடன்தான் காம்னாவுக்கு தமிழில் முதல் படம். ஆனால் அதற்கு முன்பாக தெலுங்கில் ரணம் என்ற படத்தில் நடித்திருந்தார் காம்னா.

ரணம் படத்தைப் பார்த்த தமிழ்வாணன், அரண்டு போய் விட்டாராம். அடுத்த படத்தில் இவர்தான் நாயகி என்று அப்போது முடிவு செய்தாராம். அதன்படியே இப்போது மச்சக்காரன் படத்தில் காம்னாவை நாயகியாக்கி விட்டார்.

இப்போது வாயைத் திறந்தாலே காம்னா புராணம்தானாம். காம்னா அற்புதமான ஆர்ட்டிஸ்ட். எந்தக் கேரக்டர் கொடுத்தாலும், எந்தக் காஸ்ட்யூம் கொடுத்தாலும் அதற்குப் பொருத்தமானவராக மாறி விடுவார்.

மச்சக்காரன் படத்திலும் கூட அவரை இரண்டு வகையாக வித்தியாசப்படுத்திக் காட்டியிருக்கிறேன். கிளாமரிலும் அவர் கலக்கப் போகிறார், ஹோம்லி ரோலிலும் பின்னி எடுப்பார்.

சேலையிலும் கிளாமர் காட்டுவார், மாடர்ன் உடையிலும் வந்து மயக்க வைப்பார். காம்னாவை இதுவரை யாரும் இப்படி அழகாக காட்டியதில்லை என்று எல்லோரும் சொல்லப் போகிறார்கள் பாருங்கள் என்று தடபுடலாக சொல்கிறார் தமிழ்வாணன்.

படத்தோட கதை என்னண்ணே என்றோம். வாழ்க்கையில் எதுவுமே இல்லாதவனுக்கு எல்லாமே கிடைக்குது, எல்லா வசதிகளுடனும் கூடிய ஒரு பொண்ணு கிடைக்கிறார், அதற்குப் பிறகு அவனோட நிலை என்ன என்பதுதான் படத்தோட கதை என்றார்.

படத்தில் இன்னொரு விசேஷம். அதாவது தமிழகத்தில் உள்ள 30 மாவட்டங்களிலும் படம் பிடிக்கப் போகிறார்களாம். கிட்டத்தட்ட ஒவ்வொரு சீனும் ஒரு ஊரில் படமாக்கப்பட உள்ளதாம்.

இந்தப் படத்தில்தான் என்னோட வாழ்க்கையும் இருக்கு பாஸ் என்கிறார் தமிழ்வாணன். எப்படி? இந்தப் படம் வெற்றி அடைந்தால், தனது கல்யாணப் பேச்சை ஆரம்பித்து குடும்ப சாகரத்தில் குதிக்கத் தீர்மானித்திருக்கிறாராம்.

ஜெயிச்சா காதல், இல்லாட்டி கடலா??

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil