»   »  காம்னாவும், காயமில்லா கிளாமரும் ..

காம்னாவும், காயமில்லா கிளாமரும் ..

Subscribe to Oneindia Tamil

எனது படங்களில் முடிந்தவரை கிளாமர் காட்டித்தான் நடிப்பேன். எனது கிளாமர் யாரையும் காயப்படுத்தாது என்று தடாலடியாக கூறுகிறார் காம்னா ஜெத்மலானி.

ரொம்ப நாளாக முகத்தைக் காட்டாத காம்னா மச்சக்காரன் மூலம் மறு வருகை புரிகிறார். ஜீவன்தான் நாயகன். அவருக்கேற்ற ரோமியோ கேரக்டர். ஜூலியட்டாக காம்னா ஜூஜூலிபா செய்துள்ளார். கள்வனின் காதலி பட இயக்குநர் தமிழ்வாணன் படத்தை இயக்கியுள்ளார்.

முக்கால்வாசிப் படத்தை முடித்து விட்ட கையோடு செய்தியாளர்களைச் சந்தித்தனர் காம்னா, ஜீவன், தமிழ்வாணன் ஆகியோர். முதலில் காம்னா பேசியதை சொல்லிடுவோம் ...

கவர்ச்சி காட்டி நடிப்பது குறித்து பலரும் கேட்கிறார்கள். கவர்ச்சி காட்டி நடிப்பதில் என்ன தவறு என்று எனக்குப் புரியவில்லை. உடலின் அழகைக் காட்டி நடிப்பதில் என்ன தவறு. எனது படங்களில் கண்டிப்பாக கிளாமர் காட்டித்தான் நடிப்பேன். அதேசமயம் அதில் ஆபாசம் இருக்காது.

கவர்ச்சியின் எல்லை எது என்பது எனக்குத் தெரியும். அதைத் தாண்ட மாட்டேன். எனது கிளாமர் யாரையும் காயப்படுத்தாது.

மச்க்காரன் படத்திலும் எனக்கு கிளாமர் காட்சிகள் உள்ளன. அதேசமயம் நடிப்பதற்கும் நல்ல வாய்ப்பு கொடுத்துள்ளார் தமிழ்வாணன்.

ஜீவன் நைஸ் பெர்சன். திறமையான நடிகர். ரொம்பவும் நட்பாக பழகுகிறார். இந்தப் படம் எனக்கு தமிழில் நல்ல பிளாட்பாரம் அமைத்துக் கொடுக்கும் என்றார் காம்னா.

அடுத்து ஜீவன் பேசுகையில்,

மச்சக்காரனை பெரும் ஹிட் படமாக்க ஆர்வமாக உள்ளேன். இதற்காக எனது முழு திறமைகளையும் இதில் கொட்டி நடித்துள்ளேன்.

நான் அவன் இல்லை படத்திற்கு முன்பாகவே இந்தப் படம் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. நான் அவனில்லை படத்திற்குக் கிடைத்துள்ள மாபெரும் வெற்றியும், வரவேற்பும் எனக்கு மிகுந்த பயத்தைக் கொடுத்துள்ளது.

மச்சக்காரன் படமும் அதேபோல ஹிட் படமாக வேண்டும் என்று பாடுபட்டு வருகிறேன். ஹீரோவாக இது எனக்கு 3வது படம். முதல் இரண்டு படங்களும் ஹிட் படங்கள். 3வது படமும் அதுபோலவே அமையும் என்றார் நம்பிக்கையுடன்.

தமிழ்வாணன் என்ன சொல்கிறார் என்றால், மச்சக்காரன் ஒரு பக்கா என்டர்டெய்னர். இளைய சமுதாயத்திற்கு நல்ல அறிவுரையையும் இதில் கூறியுள்ளோம். கள்வனின் காதலியை விட இந்தப் படம் வித்தியாசமாக இருக்கும், ஒரு விதமாக இருக்கும்.

ஒரு மனிதனின் பல முகங்களையும் வெளிக் காட்டும் விதமாக ஜீவன் இதில் நடித்துள்ளார். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் வில்லனும் இருப்பான், ஹீரோவும் இருப்பான். அதைத்தான் இப்படத்தில் ஜீவன் வெளிப்படுத்தியுள்ளார்

இந்தக் கதைக்கு மிகவும் பொருத்தமான நடிகர் ஜீவன் மட்டும்தான். கதையை நான் எழுதியபோது எனது மனதில் வந்தவர் ஜீவன் மட்டுமே.

இப்படத்தில் இன்னொரு விசேஷமும் உண்டு. அதாவது படத்தில் ஒரு பாடல் வருகிறது. அதாவது அந்தக் காலத்து வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் வைஜெயந்தி மாலாவும், பத்மினியும் சேர்ந்து போட்ட ஆட்டம் போல ஒரு குத்தாட்டத்தை இப்படத்தில் வைத்துள்ளோம்.

இந்தப் போட்டி ஆட்டத்துக்காக சிம்ரனையும், மாளவிகாவையும் அணுகினோம். இருவரும் சம்மதித்து விட்டனர். ஏற்கனவே பஞ்ச தந்திரம் படத்தில் ரம்யா கிருஷ்ணனுடன் இணைந்து சிம்ரன் பம்பரமாக சுழன்று ஒரு போட்டிப் பாட்டுக்கு பொளந்து கட்டியது நினைவிருக்கலாம்.

இதை குத்துப் பாட்டாக நினைக்காமல், தனது அடுத்த சுற்றுக்கு அச்சாரமாக அமையும் பாடலாக கருதி இந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டுள்ளாராம் சிம்ரன்.

இப்படத்தின் 85 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டது. மிச்சமுள்ள காட்சிகளை இன்னும் ஒரு வாரத்தில் முடித்து விடுவோம். ஆகஸ்ட் மத்தியில் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளோம் என்றார் தமிழ்வாணன்.

மச்சக்காரன் இச்சைக்காரனாக இருப்பானா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil