»   »  காம்னா, ஜீவன் 'கிக் லாக்'!

காம்னா, ஜீவன் 'கிக் லாக்'!

Subscribe to Oneindia Tamil

'லிப்பாலஜி'யைக் டீப்பாக கடைப்பிடிக்கும் 'தொண்டர்கள்' கூட்டத்தில் லேட்டஸ்டாக ஜீவனும், காம்னாவும் ஐக்கியமாகியுள்ளனர். மச்சக்காரன் படத்தில் இருவரும் இணைந்து ஆழமாக கொடுத்துள்ள ஒரு அழுத்தமான உம்மா காட்சி இடம்பெற்றுள்ளதாம்.

Click here for more images
கமல்ஹாசன் ஆரம்பித்து வைத்த 'முத்தப் பரம்பரையில்' பலரும் அவ்வப்போது வந்து சேர்நதபடிதான் இருக்கின்றனர். அதை சிலர் 'குற்றப் பரம்பரையாக' பார்த்தாலும் கூட, 'யுத்தப் பரம்பரையாக' மாறி, 'முத்த சாசனத்தை' அழுத்தமாக பதிய வைத்து வருவது சினிமாவில் அடிக்கடி நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்த வகையில் லேட்டஸ்டாக இந்த வரிசையில் இணைந்துள்ளனர் ஜீவனும், காம்னாவும். மச்சக்காரன் படத்தில் காம்னாவும், ஜீவனும் கொடுத்துக் கொண்ட ஆழமான முத்தக் காட்சி இடம் பெற்றுள்ளதாம்.

படத்தில் ஒரு முத்தம் மட்டுமல்லாது சில பல இடங்களில் காம்னாவுக்கு முத்தமிட்டு ஒரு முத்தப் புரட்சியையே செய்துள்ளாராம் ஜீவன். முத்தக் காட்சிகளில் நடிக்க காம்னா முழு ஒத்துழைப்பு கொடுத்தாராம். இதற்காக இயக்குநரிடமும் பாராட்டுப் பெற்றாராம்.

தமிழ்வாணன் இயக்கத்தில் உருவாகும் மச்சக்காரன் (ஜீவனுக்கும் கூட இந்த டைட்டில் பொருந்தும்) முழுக்க முழுக்க இளமை ததும்பும் காதல் கதையாகும். படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்துப் பாடல்களும் வசீகரிக்க வைக்கும் வகையில் உள்ளதாம்.

படம் முழுக்க காமெடியிலும் பின்னி பிணைந்திருக்கிறார்கள். மொத்தம் 11 காமெடியன்கள் படத்தில் இருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதுவரை ஒரு தமிழ்ப் படத்தில் இத்தனை காமெடியன்கள் கொத்தாக நடித்ததில்லை என்று கூறுகிறார்கள்.

படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக ரூ. 30 லட்சம் செலவில் அணை செட் போட்டு அசத்தியுள்ளனர். தமிழகத்தின் 10 மாவட்டங்களில் உள்ள 10 முக்கிய நகரங்களில் ஷூட்டிங் நடத்தி கொசுறுச் சாதனையும் புரிந்துள்ளனர்.

படத்தில் இளமை பொங்க நடித்துள்ளார் காம்னா. பட அனுபவம் குறித்து காம்னா கூறுகையில், படத்தில் எனது ரோலை ரசித்து, லயித்துச் செய்தேன். முத்தக் காட்சி குறித்து கூற முடியாது. ஆனால் அவை ஆபாசமாகவோ அல்லது வல்கராகவோ இருக்காது என்பதை மட்டும் உறுதியாக சொல்கிறேன்.

முத்தமிடுவது பாவச் செயல் அல்ல. அது அன்பை, உணர்வை அழகாக வெளிப்படுத்தும் ஒரு வழிதான். எனது ரோலுக்கு ஏற்றது போல நான் நடித்துக் கொடுத்துள்ளேன் என்று டிப்ளமேட்டிக்காக பேசினார்.

ஜீவனுக்கு இந்த ஆண்டு மச்சக்கார ஆண்டுதான். அவர் நடித்த நான் அவனில்லை இந்த ஆண்டின் மெகா ஹிட் படங்களில் ஒன்றாக அமைந்தது. ஒரே படத்தில் சினேகா, ஜோதிர்மயி, நமீதா, மாளவிகா, கீர்த்தி சாவ்லா என ஐந்து நாயகிகளுடன் அப்படத்தில் அட்டகாசம் செய்திருந்தார் ஜீவன். மச்சக்காரனில் காம்னாவுடன் கலக்கியுள்ளார்.

'மச்சக்கார மச்சான்' என்பார்களே அது ஜீவனுக்கு சுத்தமாக பொருந்தும்!

Read more about: kamna
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil