»   »  கனிகா Vs

கனிகா Vs

Subscribe to Oneindia Tamil

டான்சர் படத்தின் மூலம் தமிழில் மீண்டும் நல்ல பெயர் வாங்கியிருக்கிறார் கனிகா. இதைத் தொடர்ந்து தனக்கு அதிக வாய்ப்புக்கள் வரும்என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.

கேரளத்தைச் சேர்ந்த கனிகா ஃபைவ் ஸ்டார் மூலம் தமிழில் அறிமுகமானார். முதல் படத்திலேயே கனமான பாத்திரத்தில் நடித்து அசத்தினார்.ஆனால் தொடர்ந்து படங்கள் வரவில்லை.

அவரும் அதற்காக கவலைப்பட்டவில்லை. நல்ல குரல் வளமும் இருந்ததால் தெலுங்கில் பாட்டுப் பாட போய் விட்டார். அப்படியே கரம்மசாலா ரக ரோல்களிலும் தனது உடல் வனப்பைக் காட்டி கலக்கி வருகிறார்.

இந் நிலையில் திடீரென எதிரி படத்தின் மூலம் தமிழில் ரீஎன்ட்ரி கொடுத்தார். அதிலும் பேசப்பட்டார். தெலுங்கில் கவர்ச்சி கேரக்டர்கள்செய்தாலும் தமிழில் அதைத் தவிர்த்துவிடுகிறார் கனிகா.

இவரது நடிப்புத் திறமையை உணர்ந்த சேரன் தனது ஆட்டோகிராப்பில் கடைசி சீனில் தலைகாட்ட வைத்தார். அந்தப் படத்திலும் அவரதுரோல் பெரிதும் பாராட்டப்பட்டது. இப்போது டான்ஸர் படத்தின் மூலம் கோடம்பாக்கத்தின் கவனத்தை தன் பக்கம் திருப்பியிருக்கிறார்.

அடுத்து ஒரு தமிழ்ப் படத்தில் புக் ஆகியிருந்தாலும் சொல்லிக் கொள்ளும்படி புதுப் பட வாய்ப்புக்கள் கனிகாவுக்கு குவியவில்லை.


அழகிருந்தும், நன்றாக நடித்தாலும் ஏன் தமிழில் கரையேற முடியவில்லை என்று கனிகாவிடமே கேட்டோம்.

சினிமாவை நன்கு புரிந்து வைத்துள்ள கனிகா மனம் திறந்து தந்த பதில்,

நன்றாக நடிக்கிறோம், ஆனால் பிரபலமாகவில்லை. இப்படியெல்லாம் நான் நினைத்ததேயில்லை. திறமை இருந்தால் மட்டும் போதாது.அதிர்ஷடம் இருக்க வேண்டும். என்னைப் பொருத்தவரை தமிழ் சினிமாவில் எனக்கென்று ஒரு இடம் இருக்கவே இருக்கிறது.

கவர்ச்சி காட்டி என்னால் நடிக்க முடியாது. அது எனக்கு வரவும் வராது (அப்ப தெலுங்குல மட்டும்???). எனக்கேற்ற ரோல்களில் மட்டுமேநடிப்பேன். எந்த ரோலாக இருந்தாலும் சரி, சிறிது பெரிது என்று நான் பார்ப்பதில்லை. எனக்கு பொருத்தமானதாக இருக்கிறதா என்பதைமட்டுமே பார்ப்பேன்.

ஆட்டோகிராப் படத்தில் நான் நடித்ததை பெருமையாகவே கருதுகிறேன். அதுபோன்ற ரோல்கள் வந்தால் நிச்சயம் செய்வேன். சின்னரோலாக இருந்தாலும் பவர்ஃபுல்லாக இருக்க வேண்டும்.

ஆட்டோகிராப்பில் சினேகா நடித்தது மாதியான ரோலில்தான் நான் டான்ஸர் படத்தில் குட்டியுடன் செய்த ரோல். அதற்காக ரொம்பவேபெருமைப்படுகிறேன். நிஜ வாழ்வில் ஊனத்தை வென்றவர் குட்டி. அவருடன் நடித்தது எனக்குப் பெருமை என்றார்.

ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடச் சொன்னால் ஆடுவீர்களா என்று கேட்டபோது, முன்னணி நடிகைகள் டான்ஸ் ஆடுவதை பெரிய விஷயமாககூறுகிறார்கள். அது எனக்குப் புரியவில்லை. அதில் என்ன தவறு இருக்க முடியும்? அதுவும் ஒரு நடிப்புதானே? என்றார் கனிகா.

மலையாளத்தில் இப்போது ஒரு படத்தில் நடிக்கிறார் கனிகா. அதில் இவருக்குப் போட்டியாய் இன்னொரு ஹீரோயினாக நம்ம ஊர்சொர்ணமால்யாவைப் போட்டிருக்கிறார்கள்.

இருவருக்கும் சூட்டிங் ஸ்பாட்டில் யார் பெரியவர் யுத்தமாம். கனிகாவின் சாப்ட்டான அழகை தனது வெயிட்டான அழகால் ஓரம்கட்டிவருகிறாராம் சொர்ணமால்யா. ஈகோ சண்டை உச்சத்தில் இருப்பதால் படப்பிடிப்பு தளத்தில் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்வது கூட இல்லை.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil