For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  இப்படி அசிங்கப்படுத்திட்டாங்களே... யார் என்னைக் கல்யாணம் பண்ணிப்பா? - நிகிதா

  By Shankar
  |
  Nikitha
  பெங்களூர்: தர்ஷனுடன் காதல் என்பது அடிப்படையில்லாதது... பொய்யானது. ஆனால் அதை வைத்து என்னை தடை செய்வதாக அறிவித்து அசிங்கப்படுத்திவிட்டார்கள். இனிமேல் என்னை யார் திருமணம் செய்து கொள்வார். இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா?," என்று கேள்வி எழுப்பியுள்ளார் நடிகை நிகிதா.

  கன்னட நடிகர் தர்ஷனுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி 3 ஆண்டுகள் கன்னடப் படங்களில் நடிக்க தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது. இதனால் அதிர்ச்சியாகியுள்ளார் நிகிதா.

  இவர் தமிழில் 2003ல் வெளியான குறும்பு படத்தில் அறிமுகமானார். சத்ரபதி, வெற்றி வேல் சக்தி வேல், சரோஜா போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது சேரன் மற்றும் பிரசன்னாவுடன் முரண் படத்தில் நடித்து வருகிறார். கன்னடத்தில் மூன்று படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார். தெலுங்கிலும் நிறைய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

  தடை காரணமாக புதிய கன்னட படங்களில் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் மற்ற மொழிகளில் அவரை யாரும் தடுக்கவி்ல்லை.

  ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் தான் மிகவும் அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக நிகிதா வருந்துகிறார்.

  இது குறித்து நிகிதா இன்று அளித்த பேட்டியில், "எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. யாருடனும் எனக்கு தவறான தொடர்பும் கிடையாது. நான் அப்படிப்பட்ட பெண் அல்ல.

  நடிகர் தர்ஷினுடன் என்னை இணைத்துப் பேசுவதால் சொந்த வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. தர்ஷனுடன் காதல் என்பது அடிப்படையில்லாதது. பொய்யானது. இந்த பொய் குற்றச்சாட்டை வைத்து என்னை அசிங்கப்படுத்திவிட்டார்களே, இனிமேல் என்னை யார் திருமணம் செய்து கொள்வார்? இந்த செய்திகளை படித்த பிறகு யாராவது என்னை மணக்க சம்மதிப்பார்களா?

  நான் ஒரு பெண் என்பதை தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ளவர்கள் மறந்து விட்டனர். அவர்களின் தடை உத்தரவு என் சினிமா வாழ்க்கையை மட்டும் பாதிக்கவில்லை. சொந்த வாழ்க்கையையும் நிர்மூலமாக்கி விட்டது. எனது குடும்பத்தினரும் இதனால் மனம் உடைந்து போயுள்ளனர்.

  தர்ஷனுக்கும் அவரது மனைவிக்கும் தகராறு என்பது அவர்களின் குடும்ப பிரச்சினை. அதில் என்னை ஏன் இழுத்தார்கள் என்று புரியவில்லை. நான் வெளி மாநிலத்தில் இருந்து வந்த நடிகை, என்பதால் என்னை தண்டித்துள்ளனர்.

  தர்ஷனுடன் எனக்கு தகாத தொடர்பு இருந்ததாக தயாரிப்பாளர் சங்கத்தில் நிரூபிக்க முடியுமா? சில இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் நான் தவறு செய்ய வில்லை என்ற உண்மை தெரியும். அவர்கள் என்மேல் அனுதாபம் காட்டுகின்றனர். யார் உண்மையான குற்றவாளி என்பது விரைவிலேயே தெரியும். அப்போது நான் பட்ட அவமானத்துக்கு இழப்பு தர முடியுமா இவர்களால்?", என்றார்.

  English summary
  Nikitha, the actress punished by Kannad Film Industry for 3 years ban, reacted painfully. She alleged that the Kannad Producers took action against her on false allegations. She has also questioned that whether any one ready to marry her after seen all these allegations.

  சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more