ரசிகனாக இருந்து பக்தனாக மாறினேன்.. ரஜினி பற்றி கூலி பட நடிகர் நெகிழ்ச்சி.. எக்ஸ்க்ளூசிவ் பேட்டி
சென்னை: ரஜினிகாந்த நடிப்பில் உருவாகியிருக்கும் கூலி படம் சமீபத்தில் வெளியாகி ஓரளவுக்குத்தான் வரவேற்பை பெற்றது. அதேசமயம் வசூலில் சக்கைப்போடு போட்டிருக்கிறது. இந்நிலையில் கூலி படத்தில் நடித்த நடிகர் கராத்தே கார்த்தி ஃபில்மிபீட் தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்தார். இவர் கூலி தவிர்த்து ஜெயிலர், டாக்டர் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோலிவுட்டில் ஸ்டண்ட் கலைஞராக நுழைந்து இப்போது நடிகராக மாறியிருப்பவர் கராத்தே கார்த்தி. அவர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான டாக்டர் படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.. அதனைத் தொடர்ந்து ஜெயிலர் படத்திலும் நடித்த அவர் இப்போது கூலி படத்திலும் நடித்திருக்கிறார். இந்நிலையில் அவர் ஃபில்மிபீட் தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அவர் அளித்த பேட்டியில், "பேட்ட படத்தில் ரஜினி சாரிடம் ஆசி வாங்குவதற்கு முன்பு தீவிர ரசிகனாக இருந்தேன்.
அந்தக் காட்சியில் கிண்டல் செய்தார்: கூலி படத்தில் ரஜினி சாருடன் ஒரு ஃபைட் சீனில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். சுருதிஹாசனுடன் சண்டையிடும் காட்சியில், ரஜினி சாரை ஹியூமர் கலந்து பார்த்தோம். அப்போது, அவர் கிண்டல் செய்து சிரித்து சந்தோஷமாக இருந்தார். ரசிகனாக இருந்து பக்தனாக மாறிய பிறகு, ரஜினி சாரிடம் கேட்டதெல்லாம் கிடைத்தது. ஜெயிலர் ஷூட்டிங்கில் திடீரென அவரைப் பார்க்கத் தோன்றியது. தயக்கத்துடன் அண்ணா என்று அழைத்தேன். அவர் ஆசி வழங்கிய பிறகு, பாசிட்டிவ் வைப்ரேஷன் கிடைத்தது.

எனக்கு வந்த கனவு: ஒருமுறை இமயமலையில் குருஜி ரஜினிக்கு செல்ஃபோன் கொடுப்பது போன்று கனவு கண்டேன். அதை ரஜினி சாரிடம் சொன்னபோது, அவரும் ஆச்சரியப்பட்டார். அந்த நிகழ்வு என்னை மாற்றியது. அப்போதிருந்துதான் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்று தோன்றியது.
கூலி வாய்ப்பு: கைதி படத்தில் அன்பறிவு மாஸ்டர் மூலம் லோகேஷ் அறிமுகமானார். ஒவ்வொரு படம் முடிந்ததும் லோகேஷ் நம்பரை மாற்றி விடுவார். அதனால் மெயிலில் மட்டுமே தொடர்புகொள்ள முடிந்தது. மஞ்சும்மல் பாய்ஸ் பார்த்து சௌபின் சாஹிரை வியந்தேன். அவரைப் பார்க்கும்போது, இவ்வளவு பெரிய நடிகரா இவர் என்று ஆச்சரியப்பட்டேன். சண்டை காட்சிகளில் ரஜினி சார் என்னை கிண்டல் செய்வார். ஹாஸ்டல் சீனில் டான்ஸ் ஆடிட்டே ட்ரிங்க்ஸ் பண்ணுவார். ரசிகனாக இருந்து அவருடன் நடிக்கும்போது, ஃபேன் பாய் மொமண்ட் வந்தது. அதைக் கட்டுப்படுத்த கஷ்டப்பட்டேன் கார்த்தி.
ஒருமுறை ஹாஸ்டல் சீனில் நான் ரெடியாகும்போது, ரஜினி சார் என்னைப் பார்த்து "பெர்பாமன்ஸா?" என்று கேட்டார். சுருதிஹாசன் மேடம், "இவர் பெரிய கமல்ஹாசன்" என கிண்டல் செய்தார். சீரியலில் நடிக்க வாய்ப்புக்காக ஏங்கினேன். அப்போது பல அவமானங்களை சந்தித்தேன். அதுதான் எனனி மேலும் மேலும் உழைக்க தூண்டியது" என்றார்.


Click it and Unblock the Notifications











