நெப்போலியனுக்கும் தனுஷூக்கும் இப்படி ஒரு பிணைப்பா.. பெயர் ரகசியத்தை உடைத்த கஸ்தூரி ராஜா!

சென்னை: தனுஷின் இட்லி கடை தியேட்டரில வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கின்றது. படத்தை பார்த்த அனைவருக்கும் தங்களின் சிறு வயது ஞாபகம் வந்துவிட்டதாகவே கூறுகின்றனர். அந்த அளவிற்கு மிகவும் நேர்த்தியாக படத்தை கொடுத்திருக்கின்றார் தனுஷ். இதில், நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன், சமுத்திரக்கனி, இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

தனுஷின் இட்லி கடை திரைப்படம் தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிவரும் நிலையில், தனுஷின் தந்தையும் பிரபல இயக்குனருமான கஸ்தூரி ராஜா ஊடகத்திற்கு பேட்டி ஒன்று பேட்டி அளித்துள்ளார். அதில், படப்பிடிப்பின் போது செல்வராகவன் செட்டில் வேறு யாராவது தவறு செய்திருந்தால் தனுஷை தான் திட்டுவார். இதனால், தனுஷ் வீட்டிற்கு வந்ததும் அம்மாவின் மடியில் படித்துக்கொண்டு எனக்கு சினிமாவே வேண்டாம் என அழுவார். துள்ளுவதோ இளமை, காதல்கொண்டேன், சுள்ளான் ஆகிய படங்கள் வரை தனுஷூக்கு சினிமா மீது ஈடுபாடே இல்லை. அதன் பிறகு தான் மெல்ல மெல்ல தனுஷிற்கு சினிமா மீது ஈடுபாடு வந்தது என்றார்.

Dhanush Kasthuri Raja Nepoleon
Photo Credit:

கஸ்தூரி ராஜா பேட்டி: இதைத்தொடர்ந்து தான் இயக்கிய எட்டுப்பட்டி ராசா படம் குறித்தும், அந்த படத்தில் நடித்த நெப்போலியன் குறித்து வெகுவாக புகழ்ந்து பேசினார். இதையடுத்து, அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கலா மாஸ்டர் நெப்போலியனுக்கு வீடியோ காலில் அழைத்து பேசினார். அப்போது கஸ்தூரி ராஜா, நாம் 30 வருடத்திற்கு முன்பு எடுத்த பஞ்சுமிட்டாய் சேலை கட்டி பாடல் தான் எப்போதும் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. அஜித்குமார் நாம் 30 வருடத்திற்கு முன்பு எடுத்த பஞ்சுமிட்டாய் சேலை கட்டி பாடல் தான் எப்போதும் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. அஜித்குமார் நடித்த 'குட் பேட் அக்லி' படத்திலும் அந்த பாடலைத்தான் வைத்து இருக்கிறார்கள். அதனால் தான் அந்த படம் நன்றாக ஓடியது. அதேபோல விஷால் நடித்த மார்க் ஆண்டனி திரைப்படத்திலும் அந்த பாடலை வைத்து இருக்கிறார்கள். இப்பொழுதும், நீங்கள் தான் பெரிய நடிகராக இருக்கிறீர்கள் என்றார்.

தனுஷின் பெயர் ரகசியம்: இதையடுத்து பேசிய நெப்போலியன், தனுஷின் பெயர் ரகசியம் குறித்து யாருக்கும் தெரியாத ஒரு விஷயத்தை கூறினார். தனுஷ் பத்தாவது படிக்கும் போது நான், எட்டுப்பட்டி ராஜா திரைப்படத்தில் நடித்தேன். கரைசல் காட்டும் பூவே படத்தில் நான் நடித்த போது 12 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். படப்பிடிப்புக்கு வந்தால் ஓடி வந்தது மடியில் உட்கார்ந்து கொள்வார். அவருடைய உண்மையான பெயர் வெங்கடேஷ் பிரபு. கரிசக்காட்டு பூவே திரைப்படம் வரும் பொழுது தான் என்னுடைய முதல் மகன் தனுஷ் பிறந்தார். அப்பொழுது, இயக்குனர கஸ்தூரி ராஜா சார், மகனுக்கு என்ன பெயர் வைத்திருக்கிறீர்கள் என கேட்டார். நான் தனுஷ் என வைத்திருக்கிறேன் என சொன்னேன். உடனே அவர், உங்கள் மகன் தனுஷ் ரசியா என்று கேட்டார். இல்ல சார் தனுஷ் என்றால் வில் அம்பு. வில்லை வளைக்க வளைக்க அம்பு வேகமாக பாயும். அதே போல நான், எவ்வளவு அமைதியாக இருக்கிறேனோ அந்த அளவுக்கு அமைதியாக அனைவருக்கும் வளைந்து கொடுப்பேன். ஆனால், வில்லாக பாய்ந்து விட்டால், யாரும் என்னை தடுக்க முடியாது. என ஒரு விளக்கத்தை கொடுத்தேன் இந்த விளக்கம் கஸ்தூரி ராஜா அவர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது. அதன் பின் 2002 ஆம் ஆண்டு நடித்த துள்ளுவதோ இளமை திரைப்படம் வெளிவருகிறது. அதில், தனது மகனை தனுஷ் என்ற பெயரில் அறிமுகம் செய்து இருந்தார் என நெப்போலியன் வீடியோ காலில் நடிகர் தனுஷின் பெயர் ரகசியத்தை கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X