For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஹிஸ்டாரிகல் படம் தான் ஆனால் இது வேறு மாதிரி... ராஜேஷ் கனகசபை பிரத்தியேக பேட்டி

  |

  ஹிஸ்டாரிகல் படம் தான் ஆனால் இது வேறு மாதிரி... ராஜேஷ் கனகசபை பிரத்தியேக பேட்டி

  சென்னை : பீட்சா, சூதுகவ்வும், அட்டகத்தி, இன்று நேற்று நாளை, தெகிடி போன்ற மறக்கமுடியாத மெகா ஹிட் படங்களை, தமிழ் சினிமாவிற்கு தயாரித்து அளித்தவர் தயாரிப்பாளர் சிவி குமார்.

  திருக்குமரன் என்டெர்டெயின்மென்ட் நிறுவன தயாரிப்புகளில் பல்வேறு நடிகர்கள் மற்றும் இயக்குநர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார். அது மட்டுமின்றி , 'மாயவன்', 'கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்' ஆகிய திரைப்படங்களை இயக்கி உள்ளார்.

  தற்போது மயில் பிலிம்சுடன் இணைந்து திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் படம் கொற்றவை. 2000 வருடங்களுக்கு முந்தய கதை. புனைவும் உண்மையும் கலந்த மூன்று பாகங்களைக்கொண்ட பிரம்மாண்ட படைப்பாக உருவாகிக் கொண்டிருக்கிறது.

  Kottravi hero Rajesh Kanagasabai special interview

  யாருப்பா ஹீரோ ?

  அழகிய தமிழ் மகன் என்ற சின்னத்திரை நிகழ்ச்சியினை, நடிகை குஷ்பு தொகுத்து வழங்க, அதில் " சாகச தமிழ் மகன் விருது" பெற்ற நாயகன் "ராஜேஷ் கனகசபை" கொற்றவை திரைப்படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார். சந்தனா ராஜ், சுபிக்‌ஷா எனும் கதாநாயகிகளோடு விருவிருப்பான படபிடிப்பு இனிதே நிறைவுற்றது. தற்போது வெளியீட்டுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் கொற்றவை நாயகன் இன்னும் அந்த பரபரப்பில் இருந்து மீளவில்லை என்றே கூறலாம். நமது ஃப்லிமி பீட் தளத்திற்கு அவர் கொடுத்த பிரத்யேக பேட்டி இதோ..

  கேள்வி : "கொற்றவை" ங்கிற பிராஜக்டில எப்படி நீங்க உள்ள வந்தீங்க?

  பதில் : வருஷக்கணக்கில எல்லாருமே படம் ட்ரை பண்ணிக்கிட்டே தான் இருக்கோம். ஒரு விஷயத்தை அதுக்காகவே நாம பிராக்டிஸ் பண்ணிட்டு, அதையே தொடர்ச்சியாக பண்ணிக்கிட்டே இருந்தாக்கா, ஏதாவது ஒரு நேரத்தில.. குறிப்பா நாம எதிர் பாக்காத நேரத்துல.. அந்த விஷயம் நடக்கும். இதுதான் உண்மை. அந்த உண்மை எனக்கு நடந்துச்சு. அவ்ளோதான். அடுத்தடுத்து தோல்விகளை பார்த்துகிட்டு இருந்தேன். அந்த சமயத்துல எனக்கு திடீர்னு வந்து, 'ஒரு பெரிய ப்ராஜெக்ட் பண்ண முடியுமா' ன்னு கேட்குறப்போ.. நிஜமாவே இது உண்மைதானா இல்லை கனவான்னுதான் தோணும். இப்ப வரைக்கும் எனக்கு அப்படித்தான் இருக்கு. அப்படித்தான் இந்த விஷயமும் நடந்துச்சு. சீ . வி. குமார், புது ஆட்களை தேடி தேடி வாய்ப்பு கொடுத்து அவங்க திறமையை வெளிக்கொண்டுவர ஒரு உன்னத மனிதர். ஒரு வேளை என் திராவிட முகம், இந்த கண்கள் இதெல்லாமும் அவருக்கு பிடிச்சிருக்கலாம்.

  Kottravi hero Rajesh Kanagasabai special interview

  எப்படி ரெண்டு ஜோடி ?

  கேள்வி : கரெக்டா சொன்னீங்க. அது எப்படிங்க அந்த போட்டோல இரண்டு ஹீரோயின் பக்கத்துல எப்படி கம்பீரமாக உங்களால நிக்க முடியுது ?

  பதில் : அந்த கேரக்டர் அப்படி.. அந்த ஹீரோ போர் தளபதி. ஒரு சாகசம் பண்ணுற கேரக்டர் . அதனால கத்திய அப்படி வச்சிகிட்டு மொறைச்சிகிட்டு கத்திய போகஸ் பன்றதால, பெண்கள் மேல கண்கள் போகல..என்று சிரித்தபடி சொன்னார் .

  கொற்றவைத் தமிழ் எப்படி ?

  கேள்வி : கொற்றவை படத்தில தமிழ் எப்படி இருக்கு? உங்களுக்கு பேச எளிதா இருந்துச்சா?

  பதில் : நாம பிறந்ததிலிருந்தே தமிழ் பேசிகிட்டு இருக்கோம். அப்படி பேசுறவங்களுக்கு கூட, இது ஒரு புது அனுபவமா இருக்கும். அதுல அவ்வளவு ஆராய்ச்சி இருக்கு. அந்த ஆராய்ச்சியோட வெளிப்பாடுதான் இதுல வர்ற வசனங்கள். அதுக்குப் பின்னாடி அவ்வளவு கடின உழைப்பு இருக்கு. தமிழ் ஆர்வலர்கள், தமிழ்ப் பற்று இருக்குறவங்களுக்கு எல்லாம் இது மிகப்பெரிய ஒரு தீனியா இருக்கும். ஏன்னா டயலாக் எழுதறது, அத சரியா உச்சரிப்போட பேசறது. இதுவே ரொம்ப பெரிய விஷயமா, முக்கியமான விஷயமா இருந்துச்சு.

  கொற்றவையும் பெற்றவையும்

  கேள்வி : கொற்றவையில் இருந்து நீங்கள் பெற்றவை என்ன ?

  பதில் : நிறைய தமிழ் வார்த்தைகள், தமிழ் சார்ந்த விஷயங்கள் நிறைய கத்துகிட்டேன். அதுவே ரொம்ப பெரிய சந்தோஷம். தமிழ் ஒரு மிகப்பெரிய ஆழ்கடல். அதுல முத்தெடுக்க எடுக்க வந்து கிட்டே இருக்கும். அதோட வீரியம் ரொம்ப பெருசு. ஒரு லைஃப்ல அதை சொல்லி முடிக்க முடியாது இந்த முழு படமே பார்த்தீங்கன்னா 2000 வருஷத்தோட தமிழ் வரலாற்றையும் முழுசா சொல்லக்கூடிய அளவுக்கு இருக்கு.

  Kottravi hero Rajesh Kanagasabai special interview

  ஹீரோ ஜாக்பாட்

  கேள்வி : மிகப் பெரிய ஹீரோக்களுக்கெல்லாம் கிடைக்க வேண்டிய வாய்ப்பு, அது உங்களுக்கு கிடைச்சிருக்கு. அதை எப்படி பீல் பண்றீங்க.

  பதில் : படம் ஷூட்டிங் முடிஞ்சது. டப்பிங் போயிட்டு இருக்கு. இருந்தாலும், நெஜமாவே இப்ப வரைக்கும் எனக்கு இது நிஜம் தானா அப்படின்னு ஒரு ஃபீல் இருந்துகிட்டே இருக்கு. நிஜமாவே இதெல்லாம் நடக்குதா? நீங்க என்கிட்ட தான் பேசிகிட்டு இருக்கீங்களா? அந்த வியப்புல இருந்து இன்னும் நான் வெளி வரல. படம் வெளி வந்த பிறகு கூட எல்லாருக்கும் ஒரு தாக்கமும், பிரம்மிப்பும் நிச்சயமா இருக்கும்.

  ப்ப்பாஆ ஆ என்ன கண்ணுடா ?

  கேள்வி : உங்க கண்களுக்கு ஒரு சக்தி இருக்குன்னு நினைக்கிறேன். உங்கள செலக்ட் பன்றதுக்கு இதுவும் ஒரு காரணமா இருக்கலாம். ஷூட்டிங் அப்போ, யாராச்சும் இத உங்க முன்னாடி சொல்லிருக்காங்களா?

  பதில் : ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி பாலுமகேந்திரா சார் சொல்லியிருக்கார். நீ நிச்சயம் நடிக்க ட்ரை பண்ணுடான்னு சொன்னார். நான் காலேஜ் படிக்கும்போது VJ வா இருந்தேன். அப்போ ஒரு நாள் அவரை நான் கேலரி ல இன்டர்வியூ எடுத்து கிட்டு இருந்தேன். இப்ப நீங்க என்கிட்ட இருக்குற மாதிரி. அப்போ அவரு கிட்ட கேள்வி கேட்டுகிட்டு இருந்தேன். "சார் நான் படம் எல்லாம் ட்ரை பண்ணிட்டு இருக்கேன்"னு சொன்னேன். "கண்டிப்பா ட்ரை பண்ணு, உன் கலருக்கு உன் கண்ணுக்கு நீ கண்டிப்பா நீ ட்ரை பண்ணலாம்.. நல்லா வருவ"ன்னு சொன்னாரு. அதுதான் எனக்கு கிடைச்ச மிகப்பெரிய பலம். மிகப்பெரிய காம்பிளிமெண்ட். இத்தனை வருஷம் கழிச்சு அந்த கனவு நிறைவேறி இருக்கு. ரொம்ப சந்தோஷமா இருக்க

  Kottravi hero Rajesh Kanagasabai special interview

  திமிங்கிலமும் குட்டி மீனும்

  கேள்வி : கொற்றவை ல பெரிய பெரிய ஆர்டிஸ்ட் கூடல்லாம் நடிக்கும் போது உங்க அனுபவம் எப்படி இருந்துச்சு?

  பதில் : அத எப்படி சொல்றது ஒரு மிகப்பெரிய திமிங்கலத்து நடுவுல ஒரே ஒரு சின்ன கோல்டு ஃபிஷ் அவங்களோட ட்ராவல் பன்ற மாதிரிதான் இருந்துச்சு. பெரியவங்களுக்கு தெரிஞ்சது 7 வண்ணம், குழந்தைகளுக்கு தெரிஞ்சது 7000 வண்ணம்ன்னு சொல்வாங்க. அந்த குழந்த எல்லாத்தையும் பிரம்மாண்டமா பார்க்கும் இல்லையா, அது போலதான் எனக்கும் இருந்துச்சு. கூட ஒர்க் பண்ணவங்க எல்லாருமே பெரிய ஆட்கள். அந்த ஃபீல்டுல அவங்கதான் டாப். அவங்க கூட நான் நடிக்கிறேன். கூட நடிக்கிறவங்க எனர்ஜி வேற மாதிரி இருக்கு. அவங்க பக்கத்துல நிக்கவும் முடியல. இருந்தாலும் எல்லாருமே எனக்கு அவ்வளவு சப்போர்ட் பண்ணாங்க. கொஞ்சம் கூட பந்தாவோ, ஈகோவோ இல்லாம, என்ன இன்னும் பெட்டரா பன்றதுக்கு எவ்வளவு ஹெல்ப் பண்ணனுமோ.. அத்தனையும் பண்ணினாங்க. அது மட்டும் இல்லாம சீன் பை சீன் எல்லாமே ஸ்கெட்ச் போட்டு, ஸ்க்ரிப்ட் முதற்கொண்டு பிக்ஸ் பண்ணியாச்சு. பழந்தமிழ் டயலாக்ஸ்தான் எல்லாமே. அங்க போயி எதுவுமே மாத்த முடியாது. அந்த காலத்துல கலைஞருடைய எழுத்துக்கள்ல வந்த திரைப்படங்கள் பார்த்துருக்கேன். அதெல்லாம் பார்த்து எனக்கு பழக்கமானதால, அந்த காலத்து தமிழ நாம பிழையில்லாம நல்லா பேசி நடிக்கிறோம்ங்குற ஒரு சந்தோஷமும் இருந்துச்சு.

  விழுவின் நெடியோனே

  கேள்வி : நீங்க பேசினதுல ஒரு வசனம் பேசிக்காட்டுங்களேன்..

  பதில் : "முந்நீர் விழுவின் நெடியோனே, மழவராயர் இடத்து பரியேறி, கரு நாகக் காயிலைக்கொண்டு நஞ்சேறிக்கொள்வாயாக".. இப்படி பெருசா போகும்..என்று சொல்லி கலகலவென சிரித்தார் கொற்றவை நாயகன் ராஜேஷ் கனகசபை. தஞ்சை மண்ணில் பிறந்த நாயகனுக்கு, தமிழ்ப்பற்று சொல்லியா தரவேண்டும். உற்சாகமான அவர் குரலில் முழு வீடியோவும் " பில்மி பீட் தமிழ் "" யூ ட்யூப் சானலில் காணலாம்

  நவரசாவின் 'ப்ராஜெக்ட் அக்னி' முழு நீள திரைப்படமாகிறது!நவரசாவின் 'ப்ராஜெக்ட் அக்னி' முழு நீள திரைப்படமாகிறது!

  English summary
  Kottravi film has Rajesh Kanagasabai Vela Ramamoorthy, Anupama Kumar, Pawan and Gaurav Narayanan playing crucial roles. While music for the film is by Ghibran
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X