யாரிடமும் 1ரூபாய் கூட வாங்கல.. இலவச மருத்துவமனை.. கே.பி.ஒய் பாலா பேட்டி!
சென்னை: கேபிஒய் பாலா ஹீரோவாக அறிமுகமாக உள்ள காந்தி கண்ணாடி படத்தில், நமிதா கிருஷ்ணமூர்ததி நாயகியாக நடித்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 5-ந் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பாலா, ஏழை மக்களுக்கு பயன்தரும் வகையில் இலவச மருத்துவமனை ஒன்றை கட்டி வருவதாக கூறியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா. அதன் பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலரை வாய்விட்டு சிரிக்க வைத்தார். ஆரம்பத்தில் சின்ன சின்ன காமெடியில் வந்து கலக்கிய பாலாவிற்கு, குக் வித் கோமாளி நிகழ்ச்சி திருப்பு முனையாக அமைந்தது. அந்த நிகழ்ச்சிக்கு பின் விஜய் சேதுபதியின் புலிக்குட்டி பாண்டி, விமர்சகரான ப்ளூ சட்டை மாறனின் ஆண்டி இந்தியன், நாய் சேகர், போன்ற படங்களில் நடித்து வந்தார்.

கே.பி.ஒய் பாலா : சின்ன சின்ன ரோலில் நடித்து வந்த கே.பி.ஒய் பாலா, காந்தி கண்ணாடி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய பாலா, நானும், அமுதவாணன் அண்ணாவும் பேசிக்கொண்டிருந்தபோது, முன்னாடி இருக்கும் இந்த இடத்தை வாங்கி போடு என்றார். அப்போது தான், எனக்கு ஒன்று தோன்றியது இந்த இடத்தில் ஒரு இலவச மருத்துவமனை கட்டினால் எப்படி இருக்கும் என்று கேட்டேன். உடனே அமுதவாணன் சரி செய் என்றார். இருக்கிற இடத்தை வைத்து மருத்துவமனையை கட்டலாம் என்று பார்த்தோம் ஆனால், இடம் சிறியதாக இருந்ததால், அண்ணனின் இடத்தை கேட்டேன் அவருடம் உடனே ஓகே எடுத்துக்கோ என்று சொல்லிவிட்டார்.
6 ஆண்டு உழைப்பு: சாதாரண கூலி வேலை செய்பவர்கள் உடம்பு சரியில்லை என்று மருத்துவமனைக்கு சென்றால் ஆயிரம் ரூபாய் செலவாகிறது. அவர்களுக்காகத்தான் இந்த இலவச மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் காலையில் இருந்து இரவு வரை அனைத்து விதமான நோய்களுக்கும் இலவசமாக சிகிச்சை கொடுக்கப்படும். அர்ச்சனா அக்கா அவர்களுக்கு ஒரு பேட்டி அளித்திருந்தேன். அந்த பேட்டியில், கட்ட வேண்டும் என்று ஆசை என கூறி இருந்தேன். அந்த பேட்டி கொடுத்த 20 நாளிலேயே இந்த இடத்தை வாங்க முடிவு செய்தேன். 6 வருடமாக நான் உழைத்து சேர்த்து வைத்த பணத்தில் வீடு கட்டுவேன் என்று தான் அனைவரும் நினைத்தார்கள். நான் வீடு கட்டி வாழ்ந்தால், நான் ஜாலியாக இருப்பேன், அடுத்து வரும் என் குடும்பத்தினர் ஜாலியாக இருப்பார்கள். ஆனால் ஒரு இலவச மருத்துவமனை கட்டினால், ஒரு நாளைக்கு சுமார் 100 பேர் ஜாலியாக சந்தோஷமாக இருப்பார்கள்.
என் ஆசை: இதுவரை மருத்துவமனையை கட்டுவதற்காக யாரிடமிருந்தும் ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை. பலரும் உதவி செய்வதாக சொல்கிறார்கள். ஆனால், நான் அவர்களிடம் வாங்கி உதவி செய்வதற்கு நான் எதற்கு என்னுடைய முயற்சியால் இந்த மருத்துவமனை வர வேண்டும் என்று தான், நான் நினைக்கிறேன். தற்போது 80 சதவீத கட்டிட பணிகள் முறிந்து விட்டது. இலவச மருத்துவமனை என்பதால் அரசிடம் அனுமதி வாங்க வேண்டும் அது கிடைத்துவிட்டால் இந்த மருத்துவமனையை செயல்படுத்தி விடுவேன் என்று பாலா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











