KPY பாலாவின் காந்தி கண்ணாடி படம் எப்படி இருக்கு.. பிரியங்கா சொன்னதை கேளுங்க!
சென்னை: விஜய் டிவியின் காமெடி நிகழ்ச்சிகளில் பாலா உள்ளே புகுந்து எதையாவது செய்து ரசிகர்களை சிரிக்க வைப்பார். இதனால், விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாகவே மாறிய பாலா. தான் சம்பாதித்த பணத்தில் மற்றவர்களுக்கு உதவி செய்து வருகிறார். தற்போது, நடிகர் பாலா, காந்தி கண்ணாடி படத்தில் பெரிய ஹீரோவாக மாறி இருக்கிறார். இந்த படத்தில் காதல் பட இயக்குனர் பாலாஜி சக்திவேல் ஒரு முக்கிய இடத்தில் நடித்திருக்கிறார். இத்திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில், இப்படத்தின் ப்ரீப்யூ ஷோ பார்த்த மகப ஆனந்த், பிரியங்கா, அமுதவாணன் ஆகியோர் பாலாவை வெகுவாக பாராட்டி உள்ளனர்.
படத்தை பார்த்த மகப ஆனந்த், படத்தை பார்த்துவிட்டு அழுதேன், அந்த படத்தில் பார்த்த கதாபாத்திரம் எல்லாம் எங்கோ பார்த்தது போல ஓர் உணர்வு ஏற்பட்டது. முதல் படமே பாலாவுக்கு இப்படி ஒரு படம் கிடைத்ததை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். படத்தின் இசை கதை அனைத்துமே சுவாரஸ்யமாக உள்ளது. படத்திற்கு ஏற்ப பல இடங்களில் சிரிப்பும் இருக்கிறது. ஆனால், கடைசியில் ஐந்து நிமிடம் அழ வைத்துவிட்டார் இயக்குனர். காந்தி கண்ணாடி திரைப்படம் பல விஷயங்களை அனைவருக்கும் சொல்லித் தரும் என்று நான் நினைக்கிறேன்.

ஐ லவ் யூ பாலா: அதைத்தொடர்ந்து பேசிய பிரியங்கா, காந்தி கண்ணாடி படத்தை பார்த்துவிட்டு, மிகவும் பெருமைப்படுகிறேன். அவனின் ஆரம்ப காலத்தில் இருந்து அவனை நான் பார்த்து இருக்கிறேன். இந்த படத்திலும் தன்னுடன் இருப்பவர்கள் அத்தனை பெயரையும் சேர்த்து ஒரு விஷயத்தை செய்து இருக்கிறான், அதை பார்க்கும் போது மிகவும் பெருமையாக இருக்கிறது. உண்மையில் பாலா எப்படிப்பட்ட நல்ல குணம் கொண்டவன் என்பதை படத்தை பார்க்கும் போது உங்களுக்கே தெரியும். இந்த படத்தில் நடித்த அனைவரும் ரொம்ப சிறப்பாக நடித்து இருக்கிறார்கள். படத்தில் இசையும் ரசிக்கும் படி இருக்கு, காந்தி கண்ணாடி படத்தை பார்த்து அனைவரும் பாலாவிற்கு உங்களின் ஆதரவை தர வேண்டும் என்றார்.
வேறு ஒரு பாலா: அதைத்தொடர்ந்து பேசிய பிக் பாஸ் அமீர், பாலாவை நாம் அனைவருக்கும், உதவி செய்யக்கூடிவராகத்தான் தெரியும். அவை அனைத்தையும் தாண்டி, இந்த படத்தில் பாலா வேறு ஒரு பாலாவாக மாறி இருக்கிறார். பல இடத்தில் சிரிக்க வைக்கிறார், பல இடத்தில் அழ வைத்து இருக்கிறார். அதையும் தாண்டி படத்தில் பாலாஜி சக்திவேல், அர்ச்சனா என அனைவரும் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள். அதோடு மட்டுமில்லாமல் இந்த படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நான் மிகவும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். ஏன் என்றால், ஒரு படம் எடுக்கும் போது, அந்த படத்தின் ஹீரோ யார், அவருக்கு என்ன மார்க்கெட் இருக்கு என்று தான் பார்ப்பார்கள், ஆனால், அவை எதையும் பார்க்காமல் பாலாவிற்கு ஒரு நல்ல வாய்ப்பை கொடுத்து இருக்கிறார்கள். உண்மையில் பாலா இப்படி நடிப்பார் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. இந்த படத்தை அனைவரும் குடும்பத்தோடு வந்து, தியேட்டரில் பார்த்துவிட்டு ஹீரோவாக மாறி இருக்கும் பாலாவிற்கு உங்கள் ஆதரவை தாருங்கள் என்றார்.


Click it and Unblock the Notifications











