»   »  விஷாலுக்கு முத்தம் கொடுத்தது ஸ்வீட்டான விசயம்… சொல்வது லட்சுமி மேனன்

விஷாலுக்கு முத்தம் கொடுத்தது ஸ்வீட்டான விசயம்… சொல்வது லட்சுமி மேனன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஷாலுக்கு கொடுத்த முத்தம் இனிப்பான விசயம்... அது எப்படி காரமாக இருக்கும் என்று கேட்டிருப்பது வேறு யாருமல்ல லட்சுமி மேனன்தான். சொன்னது பேட்டி எடுத்த ஆடம்ஸ் இடம்தான்.

டிவி சேனலில் நட்சத்திரங்களை பேட்டி எடுத்து அலுத்துப்போன சன் டிவி தொகுப்பாளர் ஆடம்ஸ் யு டியூப்பில் புதிதாக சேனல் ஆரம்பித்துள்ளார். ஆடம்ஸ் டாக்கீஸ் என்பதுதான் சேனலின் பெயர். ஃபேஸ்புக், டுவிட்டர் பக்கம் போல யுடுயூப்பில் தனக்கான சேனலை தொடங்கியுள்ள ஆடம்ஸ் திரை நட்சத்திரங்களை பேட்டி எடுத்து அதை பதிவேற்றியுள்ளார்.

கேள்விகள் என்னவோ கொஞ்சம் பழசுதான் ஆனால் அதை எடிட் செய்து போட்ட விதம்தான் புதுசு. ஒவ்வொரு கேள்வி பதிலுக்கும் இடையே வடிவேலு படத்தின் காமெடி காட்சிகளை போட்டு அசத்தியுள்ளார்.

ஆனது ஆய் போச்சு 5 நிமிஷம்... இது என்ன என்று கேட்கிறார்களா?இதுதான் தனது நிகழ்ச்சிக்கு ஆடம்ஸ் வைத்திருக்கும் பெயர். அப்படி என்னதான் கேட்டார் ஆடம்ஸ்... அதற்கு என்னதான் சொன்னார் லட்சுமி மேனன் மேற்கொண்டு படியுங்களேன்.

டி.ஆர் படத்தில் ஜோடி

டி.ஆர் படத்தில் ஜோடி

டி.ஆர், பவர் ஸ்டார், ராமராஜன் இந்த மூன்று பேரில் யாருடன் நடிக்க ஆசைப்படுவீர்கள்? என்று கேட்ட உடன் சற்றே யோசித்த லட்சுமி மேனன், டி.ஆர் உடன் நடிப்பேன் என்றார்.

கமல் உடன் நடிப்பேன்

கமல் உடன் நடிப்பேன்

ரஜினி, கமல், அஜீத், விஜய் இவர்கள் நால்வரில் நடிக்க வாய்ப்பு வந்தால் யாருக்கு முதலில் சம்மதம் சொல்வீர்கள் என்று கேட்டதற்கு யோசிக்காமல் கமல்தான் முதல் சாய்ஸ் என்றார்.

ஒருநாள் டேட்டிங்

ஒருநாள் டேட்டிங்

ஜெயம் ரவி, விஷால், கௌதம் கார்த்திக், சிம்பு இவர்களில் யாருடன் ஒருநாள் டேட்டிங் போக ஆசை என்று கேட்டால் யோசிக்கவே இல்லை கௌதம் கார்த்திக் என்றார் லட்சுமி மேனன்.

கரகம் ஆட ஆசை

கரகம் ஆட ஆசை

கரகாட்டக்காரன், நம்ம ஊரு பாட்டுக்காரன், அரங்கேற்ற வேளை இந்தப்படங்களை ரீமேக் செய்தால் எந்தப்படத்தில் நடிக்க ஆசை என்று கேட்டதற்கு கரகாட்டக்காரன் என்றார் லட்சுமி ( ஒருவேளை கரகம் ஆட அத்தனை ஆசையோ?)

எது ரொம்ப ஸ்பைசி

எது ரொம்ப ஸ்பைசி

பச்ச மிளகாய், சிவப்பு மிளகாய், மிளகாய் பவுடர், விஷால் உதடு இதில் எது ரொம்ப காரணமான விசயம் என்று கேட்டார் ஆடம்ஸ். லட்சுமி மேனன் யோசிக்கும் போதே விஷாலுக்கு முத்தம் கொடுத்த சீன் பின்னணியில் போடப்பட்டது. சிவப்பு மிளகாய்தான் காரம். ஒருவேளை ஸ்வீட்டுன்னு கேட்டா முத்தம்னு சொல்லியிருப்பேன்... ஆனா ஸ்பைசின்னு கேட்டா ரெட் சில்லிதான் கரெட் என்றார்.

சிம்பு - நயன்தாரா

சிம்பு - நயன்தாரா

எந்த காதல் புனிதமானது சிம்பு நயன்தாரா, சிம்பு ஹன்சிகா, அனிருத் ஆன்ட்ரியா என்ற கேள்விக்கு ஏன்தான் அப்படி யோசித்தாரோ? ஒருவழியாக சிம்பு - நயன்தாராதான் என்று கூறிவிட்டு அப்பாடா என்று பெருமூச்சு விட்டார்.

எது ஷாங்கிங் செய்தி

எது ஷாங்கிங் செய்தி

திரிஷா திருமணம் முறிவு, சிவகார்த்திக்கேயன் பெரிய ஹீரோவானது, சிம்பு செல்வராகவன் திரைப்படம் ஜி.வி.பிரகாஷ் நடிக்க வந்தது என்ற கேள்விக்கு சிவகார்த்திக்கேயன் பெரிய ஹீரோவானதுதான் அவர் சிறந்த விஜே சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்கு வந்து வெற்றி பெற்றிருக்கிறார் என்று கூறினார்.

வெட்கம் கலந்த புன்னகை

வெட்கம் கலந்த புன்னகை

சசிகுமார் லட்சுமி மேனன், விஷால் லட்சுமி மேனன், கௌதம் கார்த்திக் லட்சுமி மேனன் எந்த கிசுகிசுவிற்கு சிரித்தீர்கள் என்று கேட்டதற்கு, விஷால் உடன் சேர்த்து வந்த கிசுகிசுவிற்குத்தான் இருவரும் சேர்ந்து சிரித்தோம்.

நிர்வாண வீடியோ

நிர்வாண வீடியோ

நடிகைகள் பற்றிய வீடியோக்கள் உலா வருகிறதே எந்த அளவிற்கு உண்மை?
25 சதவிகிதம் உண்மை, இல்லாமலும் இருக்கலாம் என்று மழுப்பலாக பதில் கூறி தப்பித்துக்கொண்டார் லட்சுமி மேனன்.

நட்சத்திர பேட்டிகள்

ஆனது ஆகிப்போச்சு 5 நிமிஷம் நிகழ்ச்சிக்காக விமல், ஆர்யா, ஹன்சிகா, அனுஷ்கா ஆகியோரையும் பேட்டி எடுத்துள்ளாராம் ஆடம்ஸ். இனி அவற்றை ஒவ்வொன்றாக ரிலீஸ் செய்யப்போகிறாராம்.

English summary
Actress Lakshmi Menon has opened up on the much talked about lip-lock scene with Vishal for 'Naan Sigappu Manithan' movie.
Please Wait while comments are loading...