»   »  சிம்பு சிம்பு..-லேகா

சிம்பு சிம்பு..-லேகா

Posted By:
Subscribe to Oneindia Tamil

எல்லோரும் சொல்வது போல சிம்பு கெட்டவன் இல்லை, ரொம்ப நல்லவர், ஜென்டில்மேன் என்கிறார் கெட்டவன் படத்தில் சிம்புவுக்கு ஜோடி போட்டுள்ள எஸ்.எஸ். மியூசிக் லேகா வாஷிங்டன்.

நயனதாரா மேட்டருக்குப் பிறகு சிம்புவைப் பற்றி ஏகப்பட்ட செய்திகள் சில்வண்டு போல சிறகடித்துப் பறந்து வந்தன. அவருடை ப்ளே பாய் இமேஜ் நாளுக்கு நாள் வலு கூடி வந்தது. அவரும் அதற்கேற்றார் போல ஏகப்பட்ட செய்திகளில் சிக்கினார்.

ஆனால் படு வித்தியாசமாக, அவருடன் நடித்துக் கொண்டிருக்கும் எந்த நடிகையும் சிம்புவைப் பற்றி எந்தத் வதறான செய்தியையும் சொல்வதே இல்லை.

சிம்புவுடன் நடிக்கும் நடிகைகள், சிம்புவைப் பற்றி புகழாரம் சூட்டிக் கொண்டுதான் உள்ளனர். லேட்டஸ்டாக அந்த வரிசையில் இணைந்திருப்பவர் லேகா வாஷிங்டன். இவர் கெட்டவனில் சிம்புவின் நாயகி.

எஸ்.எஸ்.மியூசிக் சானலில் வலம் வந்து கொண்டிருக்கும் அழகு சுந்தரிதான் இந்த லேகா. அவரை ஒரு தியேட்டரில் வைத்துப் பார்த்து அசந்த சிம்பு, அடுத்த விநாடியே அவர்தான் தனது கெட்டவன் படத்தின் நாயகி என்ற முடிவுக்கு வந்து விட்டார்.

சிம்புவைப் பற்றி லேகா நல்ல மாதிரியாகப் பேசி வருகிறார். கெட்டவன் படத்தில் சிம்புவுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து லேகா கூறுகையில், சிம்பு நிஜ வாழ்க்கையிலும் வில்லன் என்று பலரும் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

அது உண்மையல்ல. அவர் ஒரு பக்கா ஜென்டில்மேன். பல திறமைகள் கூடி வரப் பெற்ற திறமைசாலி. உண்மையில், இந்தப் படத்தில் நடிக்க வேண்டாம் என பலரும் எனக்கு அட்வைஸ் செய்தனர். ஆனால் நான் சிம்புவை முதன் முதலாகப் பார்த்தபோதே அவரை முழுமையாகப் புரிந்து கொண்டேன். அதனால்தான் நடிக்க முடிவு செய்தேன்.

என்னைப் பொருத்தவரை சிம்பு ஒரு பக்கா புரபஷனல். எப்போதுமே சினிமாவைப் பற்றியும், தனது கேரக்டர் குறித்தும் மட்டுமே சிந்தித்துக் கொண்டிருப்பார். எப்படியெல்லாம் காட்சிகளுக்கு மெருகூட்டலாம் என்ற சிந்தனைதான் அவருக்கு.

படத்தின் பெயர்தான் கெட்டவன். அது சிம்புவின் கேரக்டரைக் குறிக்கும் சொல் அல்ல என்று மூச்சு விடாமல் சொல்லி நிறுத்தினார் லேகா.

கெட்டவன் படத்தில் அய்யராத்து பெண்ணாக நடிக்கிறாராம் லேகா. அவரை படத்தில் செல்லமாக தயிர் என்றுதான் அழைப்பார்களாம். இப்படத்தில் நமீதாவும் இருக்கிறார். அசத்தலான நீச்சல் உடைக் காட்சியில் நமீதாவை லகலகவெனக் காட்டியிருக்கிறார்களாம். படத்தின் ஷூட்டிங் படு வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறது.

தீபாவளிக்கு தீப்பொறியாக கிளம்பி வருகிறதாம் கெட்டவன்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil