»   »  மனம் திறக்கும் லேகா

மனம் திறக்கும் லேகா

Posted By:
Subscribe to Oneindia Tamil
Click here for more images
கெட்டவன் படத்தின்போது நிறைய விஷயங்கள் நடந்து விட்டன. ஆனால் எனது நடிப்புத் திறமை மீது எந்தக் குறையும் சொல்ல முடியாது என்று லேகா வாஷிங்டன் கூறியுள்ளார்.

எஸ்.எஸ்.மியூசிக் சானலில் அவர் பாட்டுக்கு அழகாக விஜேவாக பணியாற்றிக் கொண்டிருந்தார் லேகா. இந்த நிலையில்தான் சிம்பு தனது கெட்டவன் படத்தில் லேகாவை நாயகியாக்கினார்.

இடையில் என்ன நடந்ததோ, லேகா படத்திலிருந்து நீக்கப்பட்டதாக செய்தி வந்தது. அவருக்குப் பதில் திரிஷா அல்லது ஆசின் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் அதை லேகா மறுத்தார்.

இந்த நிலையில் கெட்டவன் படமே தற்போது ஒத்திப் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், லேகாவைத் தேடி சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் வந்துள்ளது. அந்த நிறுவனம் தயாரிக்கவுள்ள தமிழ்ப் படத்தில் நடிக்கவுள்ளார் லேகா.

இந்த வருத்தததில் இருந்து வந்த லேகா தற்போது அந்த வருத்தம் நீங்கி சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கப் போகும் புதிய படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளாராம்.

சத்யஜோதி பிலிம்ஸ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தயாரித்த படம் எம் மகன். பெரும் வெற்றி பெற்ற இப்படத்தைத் தொடர்ந்து அடுத்து ஜெயம்கொண்டான் என்ற பெயரில் புதிய படத்தை சத்யஜோதி தயாரிக்கிறது.

இப்படத்தில் லேகாவுக்கு ஜோடியாக நடிப்பது உன்னாலே உன்னாலே பட நாயகன் வினய். மணிரத்தினத்தின் உதவியாளர்களில் ஒருவரான ஆர்.கண்ணன் இப்படத்தை இயக்கவுள்ளார்.

படத்தின் நாயகியாக பாவனாவை ஒப்பந்தம் செய்ய இயக்குநர் முயற்சிக்கிறாராம். லேகா 2வது நாயகியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த செய்தியை உறுதிப்படுத்திக் கொள்ள லேகாவை நாம் தொடர்பு கொண்டபோது, ஜெயம்கொண்டான் படத்தில் நான் நடிக்கிறேன். ஆனால் நிச்சயமாக 2வது நாயகியாக நடிக்கவில்லை. நான்தான் படத்தின் ஹீேராயின் என்றார் லேகா.

கெட்டவன் பட அனுபவம் குறித்து லேகாவிடம் கேட்டபோது, எனக்குத் தெரிந்தவரை, கெட்டவன் படத்தில் இன்னும் நான் இருப்பதாகவே உணர்கிறேன். ஆனால் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று தெரியாது.

படப்பிடிப்பின்போது நிறைய விஷயங்கள் நடந்து விட்டன. ஆனால் எனது நடிப்பில் எந்தக் குறையும் இல்லை. அதில் சந்தேகமே வேண்டாம். மற்றவை குறித்து பிறகுதான் தெரியும் என்றார் லேகா.

ஆல் தி பெஸ்ட் லேகா!
Read more about: lekha

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil