twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வாழ்க்கை கடினமான விஷயங்களை கற்று கொடுக்கும் தயாராக இருக்க வேண்டும் விஷ்ணு விஜய் ஸ்பெஷல் பேட்டி!

    |

    சென்னை: நடிகர் விஷ்ணு விஜய், நடிகை ரக்ஷிதா ஆகியோர் நடிப்பில் கலர்ஸ் தமிழில் இது சொல்ல மறந்த கதை தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. 100 எபிசோடுகளை கடந்து ரசிகர்கள் மத்தியில் இந்த தொடர் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.

    இத்தொடரில் நடித்து வரும் விஷ்ணு விஜய் நமது பிலீம்பீட் சேனலுக்கு சிறப்பு நேர்காணல் கொடுத்துள்ளார்.

    வாழ்க்கை சில சமயங்களில் கற்றுக் கொடுக்கின்ற பாடம் கடினமாக இருக்கும். அவற்றை நாம் எதிர்கொள்ள வேண்டும் என்று நடிகர் விஷ்ணு விஜய் அந்த பெட்டியில் கூறியுள்ளார்.

    இது உலகமகா வேண்டுகோளா இருக்கே..இவரது விசுவாசத்துக்கு ஒரு அளவே இல்லையா?இது உலகமகா வேண்டுகோளா இருக்கே..இவரது விசுவாசத்துக்கு ஒரு அளவே இல்லையா?

    வி என்றால் வெற்றி

    வி என்றால் வெற்றி

    கேள்வி: உங்களுடைய இயற்பெயர் என்ன?

    பதில்: எனக்கு இரண்டு பெயர்கள் உண்டு. வினு என்றும், விஜய் என்றும் அழைப்பார்கள். வி என்றால் வெற்றி என்ற நோக்கத்தில் அனைத்து பெயர்களிலும் வி என்ற எழுத்து அமைந்துள்ளது. எனது இயற்பெயர் விஷ்ணுகுமார்.

    சும்மா சுற்றி திரிய முடியாது

    சும்மா சுற்றி திரிய முடியாது

    கேள்வி: சில தொடர்களின் படப்பிடிப்பின்போது, நடிகர்களை காத்திருக்க வைக்கிறீர்களே? அது குறித்து நீங்கள் கூற விரும்புவது?

    பதில்: என்னை பொறுத்தவரை முதல் இரண்டு தடவை பழகி விடுவேன். அப்புறம் நான் குறிப்பிட்ட நேரத்துக்கு தான் வருவேன். அப்போது அவர்கள் காத்திருப்பார்கள். ஆனால் சில தொடர்களில் கதை நம்மை சுற்றி நடக்கும்பொழுது, நாம் அவ்வாறு செய்ய முடியாது. தொடர்ச்சியாக படப்பிடிப்பு இருக்கும். சும்மா சுற்றி திரிய முடியாது என்றார்.

    மனப்பக்குவம் வேண்டும்

    மனப்பக்குவம் வேண்டும்

    கேள்வி: சமீபத்தில் சின்னத்திரையில் இருப்பவர் சில பேரை இழந்துள்ளோம். அது குறித்து நீங்கள் கூறுவது?

    பதில்: இதற்கு முழு காரணம் தெளிவின்மை. சிலருக்கு நிறைய வாய்ப்புகள் வரும். சிலருக்கு வாய்ப்புகள் குறைவாக வரும். அவற்றை நாம் எடுத்துக் கொள்ளும் முறையிலும், நாம் நடந்து கொள்ளும் முறையில் தான் அமைகிறது. எந்த சூழ்நிலையிலும் திமிராக நடக்கக்கூடாது. நடிப்பு என்பது ஒரு வேலையாக மட்டுமே பார்க்க வேண்டும். எளிமையாக இருக்க வேண்டும். புரிதல் கண்டிப்பாக இருக்க வேண்டும். இவற்றையெல்லாம் சரியாக பயன்படுத்தினால் சரியான இலக்கை அடைய முடியும். சரியாக பயன்படுத்தவில்லையென்றால் தோல்வி ஏற்படும். இவற்றை தவிர்க்க வேண்டுமென்றால் தோல்வியை தாங்கும் மனப்பக்குவம் வேண்டும். வாழ்க்கை சில சமயங்களில் கற்றுக் கொடுக்கின்ற பாடம் கடினமாக இருக்கும். அவற்றை நாம் எதிர்கொள்ள வேண்டும் என்றார்.

    பரங்கிமலை ஜோதி தியேட்டர்

    கேள்வி: ஒடிடியில் அடல்ட் தொடர்பான கதை வந்தால் நடிப்பீர்களா?

    பதில்: என்னை பொறுத்தவரை கதை தான் முக்கியம். சதை முக்கியமில்லை. அடல்ட் தொடர்பான கதையில் நடிக்க வேண்டும் என்று எந்த ஒரு நடிகரும், நடிகையும் விரும்புவதில்லை. அவ்வாறு விரும்பினால் நாம் இருக்க வேண்டிய இடம் பரங்கிமலை ஜோதி தியேட்டரில் தான். என்னுடைய தேடல் சிறந்த கதை மட்டுமே என்றார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://www.youtube.com/watch?v=BSLmpKiwu44 இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.

    English summary
    Life should be ready to teach you difficult things, Says Vishnu Vijay in a Special Interview
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X