Lokesh Kanagaraj: ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு நான் கதை எழுதமாட்டேன்.. லோகேஷ் கனகராஜ் எடுத்த முடிவு

சென்னை: சமீபத்தில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வெளியாகி, விமர்சன ரீதியாக தோல்வி படமாக மாறிய படம் கூலி. பெரிய நட்சத்திரப் பட்டாளம், சன் பிக்சர்ஸ் போன்ற தயாரிப்பு நிறுவனம், லோகேஷ் கனகராஜ் இயக்கம், அனிருத் இசை என இந்த ஒத்த படத்தில் மொத்த பெரிய தலைகளும் இருக்கிறது என்று கூறும் அளவுக்கு படம் இருந்தது. இப்படி இருக்கும்போது, படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டு படக்குழு மற்றும் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான்.

இப்படி இருக்கையில் ரசிகர்களுடன் படம் பார்த்த படத்தின் இயக்குநர் அதன் பின்னர் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் பல சுவாரஸ்யமான பதில்கள் அளித்தார். குறிப்பாக, " இதுவரை நான் எதுவுமே சொன்னது இல்லை. ஆனால் ரசிகர்களின் அபரிமிதமான எதிர்பார்ப்பு உள்ளது அல்லவா, அதுதான் என்னை இவ்வளவு உயரத்திற்கு கொண்டு வந்துள்ளது. என்னை மட்டுமல்ல அனைத்து நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரையும் தான்.

Lokesh Kanagaraj Opens About He Never Write Script To Fans Expectations Video Goes Trending
Photo Credit:

அது தப்பு இல்லை: இந்த அபரிமிதமான எதிர்பார்ப்பு இல்லை என்றால் எங்களால் சினிமா பண்ணவே முடியாது. ரசிகர்களின் இந்த அபரிமிதமான எதிர்பார்ப்பை குறை சொல்ல முடியாது. உதாரணத்திற்கு கூலி படத்தையே எடுத்துக் கொள்வோமே, நாங்கள் படத்தில் டைம் டிராவல் என்று கூறவில்லை. எல்.சி.யூ., வில் படம் இருக்கிறது, இல்லை என்று எதுவும் கூறவில்லை. அப்படி இருந்தும் இவை அனைத்தையும் ரசிகர்களாகவே பேசி ரசிகர்களாகவே சொல்லிக் கொண்ட விஷயங்கள். நான் ஒரு டிரைலர் கூட வெளியிடவில்லை. படம் 18 மாதங்கள் படப்பிடிப்பு நடைபெற்றது.

கதை: மொத்த படப்பிடிப்பும் முடியும் வரை படத்தின் மீது எந்த அளவுக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூட்ட முடியுமோ, அந்த அளவுக்கு எதிர்பார்ப்பை கூட்டி வைத்திருந்தேன். அதனால் இங்கு ரசிகர்களுக்கு ரஜினி சார் படம் என்றால் ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. அதேபோல் லோகேஷ் கனகராஜ் படம் என்றால் அதற்கு ஒரு ஹைப் உள்ளது. அதை எப்படி தடுக்க முடியும். அதற்கு வழியே இல்லை. ஆனால் என்னால் ஒருபோதும் அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு கதை எழுத முடியாது. அதற்கு நான் ஒருபோதும் முயற்சி செய்ய மாட்டேன். நான் எழுதும் கதை அவர்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவு செய்தால் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த பேச்சு தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பலரும் லோகேஷ் கனகராஜ் ரசிகர்கள் மீது வைத்துள்ள மதிப்பை பாராட்டி வருகிறார்கள்.

Lokesh Kanagaraj Opens About He Never Write Script To Fans Expectations Video Goes Trending
Photo Credit:

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X