அவருடன் வாழ்ந்தது பொய்யா.. இந்த தாலி பொய்யா.. கண்கலங்கிய ஜாய் கிரிஸில்டா!

சென்னை: நடிகரும், சமையல் கலை நிபுணருமான மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி விட்டதாக ஜாய் கிரிஸில்டா காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கும் நிலைகள்,Sivasankari Talks யூடியூப் சேனலுக்கு அளித்துள்ளார். அதில், மாதம்பட்டி ரங்கராஜுடன் இரண்டு ஆண்டுகள் வாழ்ந்ததற்கான ஆதாரத்தை காட்டி உள்ளார்.

எங்களுக்கு 2023ஆம் ஆண்டு சென்னையில் திருமணம் நடந்தது. எங்களுடைய திருமணத்திற்கு, மாதம்பட்டி ரங்கராஜ் அவர்களின் குடும்பத்தினர் யாரும் கலந்து கொள்ளவில்லை. ஆனால், திருமணம் செய்து கொண்ட விஷயம் என்னுடைய மாமனார், மாமியார், அவரின் தம்பி, நண்பர்கள் என அனைவருக்கும் தெரியும். அதே போல, தலை தீபாவளிக்கு கோயம்புத்தூர் சென்றிருந்தேன் அப்பொழுது என்னுடைய மாமியார், தாலியில் குங்குமம் வைத்துவிட்டு, இப்பொழுதுதான் என்னுடைய மகன் சந்தோஷமா, சிரித்த முகத்தோடு இருப்பதை பார்க்கிறேன் என்று சொல்லி, என்னை ஆசிர்வாதம் செய்தார்கள்.

Madhampatty Rangaraj Joy Crizildaa Interview
Photo Credit:

முதல் மனைவிக்கு எல்லாமே தெரியும்: நாங்கள் இருவரும் கணவன் மனைவியாக வாழ்வது, திருமணம் செய்து கொண்டது அவர்களுடைய குடும்பத்தில் இருக்கும் அனைவருக்குமே தெரியும். அதேபோல மாதம் பட்டி ரங்கராஜ் அவர்களின் முதல் மனைவியான ஸ்ருதி பிரியா அவர்களுக்கும் தெரியும். தெரிந்திருந்தும் ஸ்ருதி பிரச்சனை செய்யாமல் ஏன் அமைதியாக இருந்தார். என்னிடம் போனில் பேசி இருக்கலாம், இந்த வீட்டிற்கு வந்து பிரச்சனை செய்து இருக்கலாம், ஆனால், எப்படி எதுவும் செய்யாமல் ஏன் அமைதியாக இருந்தார். இதுபற்றி அன்றே பேசி இருந்தால், இன்னைக்கு இவ்வளவு தூரம் என்னுடைய வாழ்க்கையின் நாசமாகி இருக்காது.

குழந்தையை கலைக்க பார்த்தார்: மாதம்பட்டி ரங்கராஜ் முதல் மனைவியிடம் பேசி நாம் பார்த்ததில்லை, இதே வீட்டில் தான் நாங்கள் இரண்டு ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். இந்த வீட்டின் லீஸ் டாக்குமெண்டில் கூட மாதம்பட்டி ரங்கராஜ் மனைவி என்று என் பெயர் தான் போடப்பட்டு இருக்கிறது. அதில் அவர் கையெழுத்தும் போட்டு இருக்கிறார். ஒரு பெண் குழந்தை வேண்டுமென மிகவும் ஆசைப்பட்டார். முதலில் நான் கர்ப்பமானேன், பின் அது கலைந்து விட்டது. அப்பொழுது மிகவும் வருத்தப்பட்ட ரங்கராஜ் இப்போது என்னுடைய வயிற்றில் இருக்கும் குழந்தையை கலைத்துவிடலாம் என பல முறை என்னிடம் சண்டை போட்டார். திருமணத்தை செல்லாதது என்று சொல்லிவிடலாம், ஆனால், குழந்தை பிறந்து விட்டால் இது லீகலாகிவிடும் என்பதால், அவருடைய தம்பி மற்றும் நண்பர்களால் பேச்சை கேட்டு இப்படி செய்து வருகிறார்.

என் குழந்தைக்கு அப்பா வேண்டும்: மாதம்பட்டி ரங்கராஜை அவமானப்படுத்த வேண்டும், அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக நான் புகார் கொடுக்கவில்லை. இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் இந்த சமுதாயம் என்னை எப்படி எல்லாம் விமர்சனம் செய்யும் என எனக்கு தெரியும். அப்படி இருந்தும் இந்த விஷயத்தை நான் வெளியில் கொண்டு வந்ததற்கு காரணம் என்னுடைய குழந்தைக்கு ஒரு நியாயம் வேண்டும், என்னுடைய குழந்தையின் அப்பா மாதம்பட்டி ரங்கராஜ் தான். அவரிடம் இருக்கும் பணத்திற்காகவோ, சொத்துக்காகவோ நான் இதை செய்யவில்லை. எனக்கு அந்த பணமும் வேண்டாம், சொத்தும் வேண்டாம் என்னுடைய குழந்தைக்கு அப்பாவாக மாதம்பட்டி ரங்கராஜ் இருக்க வேண்டும். அவரை பலமுறை தொடர்பு கொண்டு பேசுவதற்காக முயற்சி செய்தேன். ஆனால் அவரைப் பேசவிடாமல் பிடித்து வைத்திருந்தார்கள் அவர் என்னிடம் பேசினால் இந்த பிரச்சனைகள் அனைத்துமே சரியாகிவிடும்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X