மாதம்பட்டி ரங்கராஜ் கருவை கலைக்க சொன்னார்.. அவருடன் சேர்ந்து வையுங்கள்.. ஜாய் கிரிஸில்டா பேட்டி!
சென்னை: மெஹந்தி சர்கஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மாதம்பட்டி ரங்கராஜ், அந்த படத்தை தொடர்ந்து கேசினோ, மிஸ் மேகி, பெண்குயின் போன்ற படங்களில் நடித்துள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் இவருக்கு ஏற்கனவே, திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தை ஜாய் கிரிஸில்டா வெளியிட்டு கர்ப்பமாக இருப்பதாகவும் பதிவிட்டு இருந்தார்.
முதல் மனைவி ஸ்ருதியை விவாகரத்து செய்யாத நிலையில், இரண்டாவதாக எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும் என பலவிவாதங்கள் எழுந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிரிஸில்டா போலீசில் புகாரளித்துள்ளார்.

ஜாய் கிரிஸில்டா: செய்தியாளர்களிடம் பேசிய ஜாய் கிரிஸில்டா, என்னுடைய கணவர் மாதம்பட்டி ரங்கராஜ், இப்போது என்னிடம் காண்டக்டில் இல்லை, எனக்காகவும், என்னுடைய குழந்தைக்காகவும் தான், நான் வழக்கு பதிவு செய்து இருக்கிறேன். என்னை அவர் ஏமாற்றி விட்டார். என்னுடைய குழந்தைக்கு அவர் தான் அப்பா. அதற்கு அவர் பதில் சொல்லியே ஆக வேண்டும். எனக்கும் அவருக்கும், சென்னையில் இருக்கும் திருவீதி அம்மன் கோவிலில் திருமணம் நடந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே எங்களுக்கு திருமணம் நடந்து விட்டது. நானும் அவரும் ஒரே அப்பார்ட்மெண்டில் ஒன்றாகத்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அது அனைவருக்கும் தெரியும். அவர், தன்னுடைய முதல் மனைவியுடன் 'judicial separation'ல் இருப்பதாக என்னிடம் கூறினார். அவர் சொன்னதை நம்பித்தான், நான் திருமணம் செய்தேன்.
அவர் தான் அப்பா: கடந்த ஒன்றரை மாதங்களாக அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை அதற்காகத்தான் இப்போது அவர் மீது வழக்கு பதிவு செய்து இருக்கிறேன். நான் அவரை பலமுறை சந்திப்பதற்காக முயற்சி செய்தேன், ஆனால் அவரிடம் நான் பேச முடியாதபடி பலர் தடையாக நிற்கிறார்கள். நான் இப்போது புகார் கொடுத்ததற்கு ஒரே ஒரு காரணம் நான் அவருடன் சேர்ந்து வாழ வேண்டும். அவர், என்னுடைய குழந்தைக்கு அப்பா. இத்தனை நாட்களாக திருமணமான புகைப்படத்தை நான் பதிவிடாமல் இருந்ததற்கு காரணம் அவருக்கென்று குடும்பம் இருக்கிறது, அவருடைய அம்மா, அப்பா என்னிடம் ரெக்வஸ்டாக கேட்டுக் கொண்டதால் அந்த புகைப்படத்தை நான் பதிவிடவில்லை. நாங்கள் இருவரும் அமைதியான வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டு இருந்தோம். ஆனால், இப்போது ஒரு சில உண்மைகள் தெரிய வந்ததால் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இப்போதும் கூட நான் இந்த குழந்தைக்காக தான் புகார் கொடுத்து இருக்கிறேன்.
தாக்கினார்: ஒரு வாரத்திற்கு முன்பு அவரை நான் சந்தித்து பேச சென்றேன் அப்போது, என்னிடம் பேச விருப்பம் இல்லை என்று தாக்கினார். இதற்கு முன்பும் கருவை கலைக்க சொல்லி தாக்கினார். நான் கொடுத்திருக்கும் புகார் தொடர்பாக விசாரணை நடைபெறட்டும் அதன் பிறகு மீடியாவை தனியாக சந்தித்து, நீங்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் நான் பதில் சொல்கிறேன். இப்பொழுது என்னுடைய ஒரே ஒரு கோரிக்கை இந்த வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு அவர் தான் அப்பா, மாதம்பட்டி ரங்கராஜ் தான் என்னுடைய கணவர் என ஜாய் கிரிஸில்டா கூறினார்.


Click it and Unblock the Notifications











