மதராஸி பட டோல்கேட் சண்டைக் காட்சி லைவ்வா பண்ணோம்.. கிளைமேக்ஸ் ரொம்ப கஷ்டம் - கெவின் ஓபன் பேட்டி!

சென்னை: ஸ்டண்ட் இயக்குநர் கெவின் குமார் மதராஸி படப்பிடிப்பின்போது சந்தித்த பெரிய பெரிய சவால்களை ரிஸ்க்கான சண்டைக் காட்சிகள் குறித்தும் தமிழ் பிலிமிபீட்டுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் ஓபனாக பேசியுள்ளார். டோல்கேட் சண்டைக் காட்சியை எடுக்கும்போது, ​​ட்ரக் வரும் வேகம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. காரும் வெடிக்கத் தயாராக இருந்தது. சரியான நேரத்தில் வெடிக்கவில்லை என்றாலும் விபரீதம் நேரிடும் நிலைமை. ஆனால் சமயோசிதமாக செயல்பட்டு அந்த காட்சியைச் சிறப்பாக எடுத்ததாக கெவின் குமார் கூறியுள்ளார்.

கெவின் குமார் 'மதராஸி’ திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவங்களையும், சவால்களையும் நம்முடன் பகிர்ந்து கொண்டார். ஏ.ஆர். முருகதாஸ் அவர்கள் ஜெயிலர் படத்தில் கெவின் குமாரின் பணியைப் பார்த்துவிட்டு, மதராஸி படத்தில் டோல்கேட் சண்டைக்காட்சியை வடிவமைக்கும் பொறுப்பை ஒப்படைத்தாராம். அந்தக் காட்சியை சிறப்பாக முடித்த பிறகு, மொத்த படத்துக்கும் ஆக்ஷன் இயக்குநராகும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

Madharaasi Stun Director Kevin Kumar Exclusive Interview

"படத்தோட ஹீரோவே ஸ்டண்ட் தான்" என்று கெவின் குமார் உற்சாகமாகக் கூறினார். கதையின் ஆரம்பத்தில் இருந்தே ஆக்ஷன் காட்சிகள் சிறப்பாக இருந்ததாகவும், முருகதாஸின் எழுத்து மற்றும் கதாபாத்திர வடிவமைப்பு தனக்கு மிகவும் உதவியாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். முதல் பாதி காதல் காட்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்ததால், ஆக்ஷன் காட்சிகளில் ஈடுபாடு காட்ட முடிந்தது என்றார்.

அந்த டோல்கேட் சண்டைக் காட்சியில், கார்கள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறும் காட்சி மிகவும் அபாயகரமான ஒன்று. சரியான நேரத்தில் வெடிக்கவில்லை என்றாலும் விபரீதம் நேரிடும். முதலில் நான்கு கார்களை வெடிக்கச் செய்தார் கெவின் குமார். அடுத்த நான்கு கார்களை அவரது தம்பி வெடிக்கச் செய்தார். நேரமின்மை காரணமாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாம்.

படத்தின் இன்னொரு முக்கியமான காட்சி, அலுவலகத்தில் நடக்கும் வெடிகுண்டு தாக்குதல். அந்தக் காட்சியை CG இல்லாமல், நேரில் வெடிகுண்டு வெடிக்கச் செய்து எடுத்தனர். வெடிகுண்டு நிபுணர்கள் மும்பையிலிருந்து வரவழைக்கப்பட்டனர். சுமார் 100 மீட்டர் தூரத்தில் வயர்கள் இணைக்கப்பட்டு, வெடிகுண்டு வெடிக்கும் காட்சி மூன்று மணி நேரத்தில் எடுக்கப்பட்டதாம்.

நடிகர் விஷால் ஒருமுறை கெவின் குமாரின் வீடியோவைப் பகிர்ந்து, குழுவினருடன் அவர் மகிழ்ச்சியாகக் கத்தி ஆர்ப்பரிக்கும் தருணத்தை வெளியிட்டிருந்தார். முதல்முறையாக கார்களுக்கு நடுவே சரியான இடைவெளிவிட்டு வெடிக்கச் செய்தோம். அந்த சந்தோஷத்தில் நாங்கள் கத்தினோம் என்று கெவின் குமார் கூறினார்.

முருகதாஸ் அவர்கள் நடிகர்களின் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற சண்டைக் காட்சிகளை வடிவமைக்க நிறைய உதவினாராம். வில்லன் கன் வைத்து சண்டை போடுவதில் ஸ்பெஷலிஸ்ட் என்பதால், அந்த பாணியை வைத்தே சண்டைக் காட்சிகளை அமைத்ததாக கெவின் குமார் குறிப்பிட்டார். முருகதாஸ் சாருடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

கடைசியாக, தன் தந்தை நந்தா திரைப்படத்தில் சூர்யா செய்த ஒரு ஸ்டண்ட் பாணியை மதராசியில் பயன்படுத்தியதாகவும், அது இயக்குநருக்கும் பிடித்துப் போனதாகவும் கெவின் குமார் தெரிவித்தார். மதராஸி படத்தில் ரசிகர்கள் சண்டைக் காட்சிகளையும் குறிப்பாக அந்த டோல்கேட் சீனில் வித்யூத் ஜமால் சண்டையிடும் காட்சிகளையும் ரசித்துப் பார்த்து வருகின்றனர்.

அதே போல கிளைமேக்ஸில் வித்யூத் ஜமால் மற்றும் சிவகார்த்திகேயன் இடையே நடக்கும் ஒன் டு ஒன் சண்டைக் காட்சியை ஹார்பரில் எடுக்க ரொம்பவே சிரமப்பட்டதாகவும் இருவரும் கொடுத்த ஒத்துழைப்பு காரணமாகவே அந்த சண்டைக் காட்சியும் சிறப்பாக வந்ததாக கெவின் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X