»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Subscribe to Oneindia Tamil

மும்பை நடிகைகள் தமிழ் பட நாயகியாக நடித்துவரும் இந்த வேளையில் மும்பை தமிழர் மாதவனை அலைபாயுதே படத்தில் நடிக்க வைத்து பிரபலமாக்கிவிட்டார் டைரக்டர் மணிரத்னம்.

சினிமா வாய்ப்புகள் நிறைய வரவே மும்பையிலிருந்து சென்னைக்கு வந்து தன் உறவினர் வீட்டில் தங்கிக் கொண்டு படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார்.

தன் மனைவி சரிதாவைக் கூட ஏர்ஹோஸ்டஸ் வேலைக்கு டாடா காட்டச் சொல்லிவிட்டு தன்னுடன் சென்னைக்கு அழைத்து வந்து விட்டார்.

என்ன மாதவன் எத்தனை படத்தில் நடித்துக் கொண்டிருகிறீர்கள். உலக அழகி லாரா தத்தா எல்லாம் உங்களுடன் ஜோடியாக நடிக்கக் காத்திருப்பதாகசொல்கிறார்களே! எந்த அளவு உண்மை?

மவுனமாக சிரித்துக் கொண்டார் மாதவன். இப்போது நான் நடித்துக் கொண்டு இருப்பது இரண்டு படங்கள். ஒன்று டாக்டர் முரளி மோகன் தயாரிக்கும்மின்னலே. ரியா சென் எனக்கு ஜோடி.

ராஜீவ் மேனன் உதவியாளர் கவுதம் மேனன் கதை வசனம் எழுதி டைரக்ட் செய்கிறார்.இசை ஹாரிஸ் ஜெயராஜ் என்ற புதியவர். இந்த படத்தின் படப்பிடிப்புவேகமாக வளர்ந்து வருகிறது என்றார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil