»   »  கேட் வாக் மதுமிதா

கேட் வாக் மதுமிதா

Subscribe to Oneindia Tamil

நல்வரவு படத்தில் மாடலிங் பெண்ணாக நடிக்கவுள்ள மதுமிதா இதற்காக கேட் வாக் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

கேரக்டருக்கேற்ப சிறப்பு பயிற்சி எடுப்பது நடிகர்களின் வழக்கம். ஊமையாக நடிப்பதாக இருந்தால் வாய் பேச முடியாதவர்களைப் பார்த்துக் கற்பார்கள், குள்ளர்களாக நடிப்பதாக இருந்தால் அப்படிப்பட்டவர்களைப் பார்த்து நடை, உடை, பாவனைகளை ஸ்டடி செய்வார்கள்.

அதேபோல நடிகைகளும் கேரக்டர் ஸ்டடி செய்வது இப்போது அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் லேட்டஸ்டாக சேர்ந்துள்ளார் மதுமிதா.

குடைக்குள் மழை மூலம் பார்த்திபனால் சினிமாவுக்கு அழைத்து வரப்பட்டவர் மதுமிதா. ஆனால் நல்ல நடிகையாக இருந்தும், மூக்கும் முழியுமாக சிறப்பாக இருந்தும் மதுமிதாவுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நல்வரவு படம் மூலம் மீண்டும் தமிழில் அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இப்படத்தில் மாடலிங் செய்பவராக நடிக்கிறார் மதுமிதா. இதற்காக மாடலிங் குறித்து கற்று வருகிறாராம்.

மாடலிங் பெண்களின் வாழ்க்கை முறை, அவர்கள் எப்படி மேக்கப் செய்து கொள்வார்கள், எப்படி பூணை நடை (கேட் வாக்) நடப்பார்கள், எப்படி சிரிப்பார்கள், ஹேஸ்டைல் செய்வது எப்படி என்பது குறித்து ஒரு மாடலிங் நிலையத்தில் சேர்ந்து கற்று வருகிறார் மதுமிதா.

எல்லாம் சரி, பட வாய்ப்புகள் சரியாக இல்லையே பேசாமல் காதல், கீதல், கல்யாணம் என்று கிளம்ப வேண்டியதுதானே என்று கேட்டால்,

அய்யோ காதல் என்ற பேச்சுக்கே இடமில்லை. நான் அப்பா, அம்மா சொல் பேச்சைக் கேட்கும் சமர்த்துப் பெண்.

நாளைக்கே யாரையாவது பார்த்து இவரைக் கல்யாணம் செய்து கொள் என்று அப்பா, அம்மா கூறினால் உடனே கழுத்தை நீட்டி விடுவேன் என்கிறார் படு நிதானமாக.

ச்சோ ச்வீட்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil