»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Subscribe to Oneindia Tamil

எனக்கென்று தனி பாணியை உருவாக்க விரும்புகிறேன் என குடைக்குள் மழை "குல்பி ஐஸ்" மதுமிதா கூறுகிறார்.

குத்தீட்டி மூக்கு, நச் அழகு என பார்த்தவுடன் பச்செக்கென்று மனதுக்குள் செட்டில் ஆகி விடும் அளவுக்கு படு சூப்பராக இருக்கும்மதுமிதா தமிழுக்குத்தான் புதுசு. தெலுங்கில் 3 படங்களில் நடித்து ஏற்கனவே நடிப்புக்கு அறிமுகமானவர்.

கவர்ச்சியோ, கேரக்டரோ எது குறித்தும் கவலையில்லை, எந்த வேடம் கிடைக்கிறதோ அந்த வேடத்தில் சிறப்பாக நடிப்பதேதனது லட்சியம் என்று கூறுகிறார் மது.

எனக்கு கவர்ச்சியாகவும் நடிக்கப் பிடிக்கும், குணச்சித்திரமாகவும் நடிக்கப் பிடிக்கும் என்று கூறும் மதுமிதா, எனக்கென்று தனிபாணியை உருவாக்கிக் கொள்வதே லட்சியம் என்கிறார்.

நான் சின்ன வயதிலேயே பரதநாட்டியம் படித்தேன். எனது நடன அரங்கேற்றத்திற்கு வந்து ஒரு தெலுங்கு இயக்குநர் தனதுபடத்தில் நடிக்கும்படி கேட்டார். பிறகு அம்மா, அப்பாவிடம் சம்மதம் வாங்கி சினிமாவில் நடிக்க ஆரம்பித்தேன்.

முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட். தொடர்ந்து தெலுங்கில் வாய்ப்புகள் வந்தன. அந்த சமயத்தில்தான் தமிழில் குடைக்குள் மழைபடத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.

முதலில் மேக்கப் டெஸ்ட் எடுத்தார்கள். பிறகு கூப்பிடுகிறோம் என்று அனுப்பி வைத்துவிட்டார்கள். சிறிது நாட்கள் கழித்து நான்செலக்ட் ஆகிவிட்டேன் என்று கூறியபோது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

தமிழில் வெளிவந்த ஆட்டோகிராஃப், சேது, பிதாமகன் போன்ற படங்களைப் பார்த்து வியந்து போனேன்.

என் நடிப்பு பாணியே தனியாக இருக்கும். மதுமிதா போல நடிக்க வேண்டும் என்று மற்றவர்கள் கூறும் அளவுக்கு எனக்கென்றுதனி பாணியை உருவாக்க விரும்புகிறேன் என்று படபடக்கிறார்.

கிசுகிசு குறித்து மதுவிடம் கேட்டால், நான் நல்ல பொண்ணு, யாருக்கும் தொந்தரவு தர மாட்டேன். பிறகு எதற்கு என்னைப் பற்றிகிசுகிசு கிளப்பப் போகிறார்கள் என்று அப்பாவியாக கேட்கிறார்.

தமிழில் இப்போது அமுதே என்ற படத்தில் மதுமிதா நடிக்கிறார். பிறகு சரத்குமாருடன் சாணக்கியா என்ற படத்திலும் மதுமிதாஇருக்கிறார்.

தமிழ் ரசிகர்களை ஒரு வழி பண்ணாமல் இந்த பீல்டை விட்டுப் போக மாட்டேன் என்று கூறும் மதுமிதா நடிக்க வராமல்போயிருந்தால் நன்றாகப் படித்து சூப்பர் ஆடிட்டராக ஆகியிருப்பாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil