»   »  'நான் சின்ன பொண்ணுங்க' - 'மதுரைவீரன்' மீனாட்சி

'நான் சின்ன பொண்ணுங்க' - 'மதுரைவீரன்' மீனாட்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil
டிவியில் தொடங்கி ஹீரோயின் ஆன ஸ்வாதிஷ்டா #Exclusive

விஜயகாந்த் மகன் ஷண்முக பாண்டியன் ஜோடியாக மதுரவீரன் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் 'கேரளத்து கிளி' மீனாட்சி. ஊடகங்கள் இவரது நடிப்பையும் வெகுவாக பாராட்டியது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து தமிழிலிருந்து பலரும் அழைப்பு விடுத்தும் 'ப்ளஸ் ஒன்' பரீட்சை எழத வேண்டியிருந்ததால் ஒப்புக் கொள்ளவில்லையாம் மீனாட்சி.

சின்னப் பொண்ணு

சின்னப் பொண்ணு

"நான் ரொம்ப சின்னபொண்ணுங்க ,எனக்கு சினிமாவில் சாதிக்க இன்னும் நிறைய டைம் இருக்குது.. அதனால வந்த வாய்ப்புகளுக்கு நோ சொல்லிட்டேன்," என்று தன்னம்பிக்கையுடன் இருக்கிறார் மீனாட்சி.

சென்னையில்

சென்னையில்

முழுமையாக தமிழில்தான் காலூன்ற வேண்டும் என்ற ஆசை இருப்பதால், சென்னைவாசியாகவே மாறிவிட்டாராம் மீனாட்சி. "எந்த மொழியில் நடிக்கிறோமோ அதற்கு நூறு சதவீதம் உண்மையாக இருக்க வேண்டும்," என்கிறார் இந்த 'சின்னப் பொண்ணு'

ஒரே கிராம மயம்

ஒரே கிராம மயம்

மீனாட்சிக்கு சின்ன வருத்தமும் உண்டாம். 'மதுரவீரன்' படத்தில் தன் நடிப்புக்கு நிறைய பாராட்டுக்கள் கிடைத்த போதிலும் அதன் பிறகு அவரைத் தேடி வந்தது எல்லாமே மெட்சூரிட்டியான கிராமிய கதாநாயகி வேடங்கள்தானாம். அதனால் இளமையான மாடர்ன் வேடங்களிலும் நடித்து தனது திறமைய நிரூபிக்க உதவும் ஒரு வேடத்துக்காகவும் காத்திருக்கிறாராம்.

நல்ல தமிழில்

நல்ல தமிழில்

இப்போது நடனம் கற்று வரும் மீனாட்சிக்கு நல்ல குரல் வளமும் உள்ளது. சுத்தத் தமிழில் பேசுகிறார். அப்புறமென்ன... பெரிய ரவுண்டு காத்திருக்கிறது!

English summary
Madurai Veeran movie heroine Meenatchi interview

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X