»   »  மாளவிகா கிளாமருக்குத் தடா

மாளவிகா கிளாமருக்குத் தடா

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிச்சுக்கோ, ஆனால் கிளாமர் மட்டும் கூடவே கூடாது என்று மாளவிகாவுக்கு அவருடைய கணவர் கண்டிஷன் போட்டுள்ளாராம்.

கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு பாட்டு மூலம் மாளவிகா, ரசிகர்களின் நெஞ்சங்களை குளிர வைத்தார். தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்த மாளவிகாவுக்கு இடையில் பெரிய சுணக்கம் ஏற்பட்டது.

தமிழை விட்டு இந்திக்குத் தாவிய அவர் அங்கு சி யூ அட் 9 படத்தில் படு கிளாமராகவும், கிறக்கமாகவும் நடித்து ரசிகர்களின் உறக்கத்துக்கு உலை வைத்தார்.

அதே சூட்டோடு தமிழுக்குத் திரும்பி வந்தார். சித்திரம் பேசுதடியில் அவர் வாள மீனு பாட்டுக்கு அவர் போட்ட ஆட்டம் அசரடித்தது. மறுபடியும் மாளவிகா காட்டில் மெல்ல ஆரம்பித்தது நல்ல மழை.

தொடர்ந்து வந்த திருட்டுப் பயலே படத்தில் அவர் காட்டிய வில்லித்தனம் மாளவிகாவுக்கு பெரும் பெயரை வாங்கிக் கொடுத்தது. இதையடுத்து மறுபடியும் பிசியானார் மாளவிகா.

தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்த அவர் திடீரென கல்யாணம் செய்து கொண்டார். கல்யாணம் ஆனாலும் தொடர்ந்து நடிப்பேன், வழக்கம் போல கிளாமர் காட்டுவேன் என்றும் ஸ்டேட்மென்ட் விட்டார். சொன்னதோடு நில்லாமல், கல்யாணத்திற்குப் பிறகு நடித்த ஒரு படத்தில் கிளாமர் காட்சிகளிலும் நடித்துக் கொடுத்தார்.

இடையில் சின்ன கேப் விட்டிருந்த மாளவிகா மீண்டும் சென்னைக்கு வந்துள்ளார். கட்டுவிரியன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஷூட்டிங்கில் கிடைத்த ஒரு சின்ன பிரேக்கில் மாளுவைப் பிடித்தோம்.

அப்போது மாளவிகா கூறுகையில், வழக்கம் போல எனக்கு வாய்ப்புகள் வருகின்றன. கல்யாணத்திற்குப் பிறகு வாய்ப்புகள் குறைந்து விடவில்லை. தமிழில்தான் அதிக கவனம் செலுத்துகிறேன். மலையாளத்தில் கூட வாய்ப்பு வந்தது. ஆனால் சம்பளம் குறைவாக கூறுகிறார்கள். அதனால்தான் அங்கு போகவில்லை.

கட்டுவிரியனில் இரட்டை வேடத்தில் நடிக்கிறேன். ரொம்ப நன்றாகப் பேசப்படும் வகையில் எனது கேரக்டர்கள் உள்ளன. ஒரு வேடத்தில் போலீஸ் ஆபிசராக நடித்துள்ளேன்.

அப்புறம், தொடர்ந்து சிங்கிள் பாட்டுக்களுக்கும் ஆட தயாராக உள்ளேன். சிங்கக்குட்டி படத்தில் ஒரு ஐட்டம் பாட்டுக்கு ஆடியுள்ளேன். ரொம்ப கிளாமர் இல்லாத கதாபாத்திரங்கள், சிங்கிள் பாட்டுக்களுக்கு ஆடுவேன், நடிப்பேன்.

எனது கணவர் ரொம்ப ஒத்துழைப்பாக உள்ளார். நடிப்பதற்கு அவர் தடையே சொல்லவில்லை. ஆனால் கிளாமர் மட்டும் வேண்டாம் என்று கூறியுள்ளார். நானும் இதுவரை முகம் சுளிக்க வைக்கும் அளவுக்கு கிளாமராக நடித்ததில்லை, இனியும் நடிக்க மாட்டேன் என்று கூறினார்.

விசேஷம் ஏதும் இல்லீங்களா மேடம்??

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil