»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

கேரக்டர் என்றாலும் சரி, கவர்ச்சி என்றாலும் சரி கலக்கத் தயாராக இருக்கிறேன் என்கிறார் மாளவிகா.

தமிழில் சிறு ரவுண்டு வந்த மாளவிகா பின்னர் காணாமல் போனார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பேரழகன்படத்தில் ஒரு பாடலுக்கு வந்து சூர்யாவுடன் ஆட்டம் போட்டார்.

அதற்குப் பிறகு சில படங்களில் புக் ஆகியுள்ள மாளவிகா, நான் ஒரு நடிகை, எந்த ரோல் கொடுத்தாலும் அதைதயங்காமல் நடித்துத் தருவது எனது பொறுப்பு என்று ரொம்பவும் மெச்சூர்டாக பேசுகிறார்.

கமல்ஹாசனின் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். படத்தில் சினேகாவின் தோழியாக இப்போது மாளவிகா நடித்துவருகிறாராம். தானே ஒரு ஹீரோயினாக இருந்தாலும், இன்னொரு ஹீரோயினுக்கு தோழியாக நடிப்பதில்பிரச்சினை இல்லையா என்று கேட்டால், இல்லவே இல்லை என்கிறார் மாளவிகா.

சரண் சார் இயக்கத்தில் கமல் சாருடன் நடிக்கும் அரிய வாய்ப்பு இது. மேலும் இந்தியில் மிகப் பெரிய வெற்றிப்பெற்ற படம் இது. இந்திப் படத்தைப் பார்த்திருப்பதால் அதிலுள்ள ஒவ்வொரு கேரக்டரின் தன்மையும் எனக்குத்தெரியும். எல்லா கேரக்டர்களும் முக்கியத்துவமுள்ளவை. அதனால்தான் இதில் நடிக்க ஒப்புக் கொண்டேன்.

நான் ஒன்றும் சினிமாவிலிருந்து காணாமல் போய்விடவில்லை. தமிழில் ஒரு இடைவெளி ஏற்பட்டுவிட்டது.அவ்வளவுதான். இந்தியில் அஸ்வின் பட்டேல் இயக்கத்தில் ஒரு படமும், தெலுங்கில் ராஜேந்திர பிரசாத்இயக்கத்தில் ஒரு படமும் நடித்திருக்கிறேன். இரண்டிலும் எனக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்கள்.

என்னைப் பொருத்தவரை, எந்த வேடமாக இருந்தாலும் அதை சிறப்பாக நடித்துத் தருவேன். இழுத்துப் போர்த்திக்கொள்ளச் சொன்னாலும் சரி, படு கிளாமராக நடிக்க வேண்டும் என்றாலும் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

இன்று எடுக்கப்படும் பெரும்பாலான படங்களும் இளைஞர்களை மனதில் வைத்து எடுக்கிறார்கள். அதனால்கிளாமருக்கு இம்பார்ட்டன்ஸ் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்றார்.

காதல் பற்றி உங்கள் கருத்து என்ன கேட்டால், தயங்காமல் பதில் வருகிறது. தோல்வியுறாத வரையில் அதுரொம்பவும் இனிமையான அனுபவம். எனக்கும் காதல் அனுபவம் உண்டு. ஆனால் அதைப் பற்றி விரிவாகச்சொல்ல விரும்பவில்லை என்று தைரியமாக சொல்லும் மாளவிகா கையில் இப்போது 5 படங்கள் உள்ளதாம்.

பிரஷாந்துடன் ஒரு படம். தேவா சாரோட தம்பி மகனான ஜெய்யுடன் ஒரு படம் என அடுத்த ஒரு ரவுண்ட் வரும்தெம்பில் இருக்கிறார் மாளவிகா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil