»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Subscribe to Oneindia Tamil

மாளவிகா... சட்டென்று தமிழக சினிமா ரசிகர்களின் மனதில் தனக்கென தனிஇடத்தைபிடித்துக்கொண்டவர்.

ஆனந்தபூங்காற்றே படத்தில் அறிமுகமாகி, "ரோஜாவனத்தில்" தன்னுடைய கலைச்சேவையால் ரசிகர்களைத் திக்குமுக்காட வைத்தவர். அடுத்த படம் "பூப்பறிக்கவருகிறீர்களா". படம் ஒடியதோ இல்லையோ, ரசிகர்கள் மனதில் இவர்ஒட்டிக்கொண்டார். தற்பொழுது "வெற்றிக்கொடிகட்டு" படத்தில்கலக்கியிருக்கிறார்.

ஹாரிங்டன் ரோட்டில் மாளவிகா வாங்கியுள்ள புதிய வீட்டில் அவரைச் சந்திக்கசென்றோம். அப்போழுதான் குளித்துவிட்டு ஈரத்துடன் வந்திருந்தார்.

நீங்க தமிழ்ல பேசினா நல்லா புரிந்து கொள்வேன். ஆனா நான் சுமாரா தான்பேசுவேன் என்று குழந்தைபோல கொஞ்சினார்..ஸாரி..பேசினார்.

"வெற்றிக்கொடிகட்டு" படத்திற்கு அடுத்து இரண்டு மூன்று படங்களில் நடிக்கபேசிக்கொண்டிருக்கிறேன். தேடி வருகின்ற எல்லா கம்பெனி படங்களையும்ஒத்துக்கொள்வதில்லை. ரொம்ப கவனமாக படங்களை ஒப்புக்கொள்ளவேண்டியிருக்கிறது. காரணம், கவர்ச்சி நடிகை என்ற முத்திரை குத்திவிடாதபடிநல்ல கதாபாத்திரங்களில், நடிப்பை வெளிப்படுத்தும்படியான வேடங்ளை தேர்வுசெய்து நடிக்க முடிவு செய்துள்ளேன்.

தெலுங்கிலும் நான் நடித்த முதல் படமான "சாலபாகஉந்தி" பெரிய வெற்றிப்படம்.சமீபத்தில் அதன் நூறாவது நாள் விழா ஆந்திராவில் நடந்தது. அமிதாப்பச்சன் தான்சீஃப் கெஸ்ட். அவருடைய கையால் கேடயம் வாங்கினேன். மிகவும்சந்தோஷமான விஷயம் அது.

எனக்கு அதிகமான படம் இல்லாதற்கு காரணம் உண்டு. சினிமாவிற்கு வந்தவுடன்நான் ஒரு மேனேஜரை நியமித்தேன். அவர் எனக்கு உதவி செய்வதாக கூறி பலதொந்தரவுகளை செய்துவிட்டார். என்னைப்பற்றி பல தவறான செய்திகளையும்பரப்பிவிட்டு, என்னை பழி வாங்கிக் கொண்டிருக்கிறார். ( பூவுக்குள் பூகம்பம்?)

"பூப்பறிக்க வருகிறோம்" படத்தில் உங்களுடன் ஜோடியாக நடித்த அஜய்க்கும்,உங்களுக்கும் காதல் என்றும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் ஒருபேச்சு அடிபடுகிறதே?

சுத்தமான கற்பனைச் செய்தி. அஜய் தயாரிப்பாளர் ரெட்டி அவர்களின் மகன்."பூப்பறிக்க வருகிறோம்" படத்தில் நடிக்கும் வரை எனக்கு சில உதவிகளைச்செய்தார். அவ்வளவுதான். என் மேனஜர் என்று ஒருவரைப் பற்றிச் சொன்னேனே.அவருடைய திட்டமிட்ட சதிவேலைகளில் இந்த கிசுகிசுவும் ஒன்று. சென்ற ஆண்டுஅக்டோபர் மாதத்திற்குப்பிறகு நான் அஜய்யை சந்தித்தது கூட கிடையாது. இதுஉண்மை, சத்தியம்.

"வெற்றிக்கொடிகட்டு" படத்தில் நீங்கள் நடித்த கதாபாத்திரம் பற்றிசொல்லுங்களேன்.?

பெரிய கதாபாத்திரம் என்று சொல்லிக்கொள்ள முடியாவிட்டாலும் கூட, ஓரளவுநல்ல கேரக்டர். ஆனால் என் சினிமா வாழ்க்கையில் வெற்றிக்கொடி கட்டுநிச்சயமாக ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது. டைரக்டர் சேரன் அவர்கள்,எப்படி நடிக்கவேண்டும் என்பதை தெளிவாகச் சொல்லிக் கொடுத்து, புரியவைத்திருக்கிறார்.

இதுவரை சொல்லிக்கொடுக்கும் வசனத்தை ஒப்பித்து வந்த எனக்கு , ரியாக்ஷன்செய்யவும், இன்வால்மென்ட்டுடன் பேசவும் வைத்து புரிய வைத்திருக்கிறார்.அவருக்கு என்னிடம் எந்த மாதிரி நடிப்புத் தேவையோ அதை வரவழைத்துபடமாக்கியுள்ளார்.

"பூப்பறிக்க வருகிறோம்" படத்தில் சிவாஜியுடன் நடித்த அனுபவம் பற்றிச்சொல்லுங்களேன்.?

சிவாஜி, நடிப்பில் சிங்கம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவரை முதல் நாள்சந்தித்து ஆசி பெற்றபொழுது, தன்னுடன் தமிழிலேயே பேசும் படிகேட்டுக்கொண்டார். வேகமாக தமிழ் கற்றுக்கொள்ள முடியும் என்று அவருடன்சேர்ந்து நடிக்கும் போதுதான் தெரிந்து கொண்டேன்.

அவருடைய நடிப்பைப் பார்த்து நான் வியப்பில் ஆழ்ந்துவிட்டேன். இத்தனைவயசுக்கு அப்புறம், அவரசு சுறுசுறுப்பும், நடிப்பும் என்னை மெய்சிலிர்க்கவைத்தது. அவருடன் சேர்ந்து ஒரு படத்திலாவது நடித்து விட்டோமே என்று நான்பெருமைப்பட்டேன்.

ரசிகர்களிடமிருந்து கடிதங்கள் வருகிறதா?

ஏகப்பட்ட கடிதங்கள் வருகின்றன. இங்கிலீஷில் வரும் கடிதங்களுக்கு நானே பதில்எழுதுகிறேன். தமிழில் வருகின்ற கடிதங்களுக்கு என் அம்மா பதில் எழுதுகிறார்.அம்மாவுக்கு நல்லா தமிழ் தெரியும். எனக்கு பேச மட்டும் தான் தெரியும்.என்னைப்பார்க்கும் பொழுது ரோஜா மாதிரி இருக்கிறேன் என்கிறார்கள்.

நான் இதுவரை ரோஜாவைப் பார்த்தது இல்லை. ரோஜா, ரேவதி இருவரையும்சந்திக்கவேண்டும் என்கிற ஆசை உண்டு. அவர்களுடைய நடிப்பு ரொம்பபிடிக்கும் என்றார்.

ஒ.கே மாள், குட் லக் என்று சொல்லி விடைபெற்றோம்.

Read more about: ajay, cheran, cinema, interview, malavika
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil