»   »  மந்திர பேட்டி

மந்திர பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

கிரிக்கெட் ஆட்டத்தை ரசிக்க வேண்டிய ரசிகர்களை, தன் பக்கம் ஈர்த்து தனிப்பெரும் கிளாமருடன் கலகலக்க வைத்த மந்திரா பேடி மீண்டும் சினிமாவில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்.

சாந்தி டிவி சீரியல் மூலம் நாடு முழுவதும் ஏராளமான ரசிகர்களை சம்பாதித்தவர் மந்திரா பேடி. அந்தப் புகழ் காரணமாக ஷாருக்கான், கஜோல் நடிப்பில் வெளியான பெரும் வெற்றிப் படமான தில்வாலே துல்ஹானியா லேஜாயங்கே படத்தில் சின்ன கேரக்டரில் வந்து அதிகம் பேரை ஈர்த்தார்.

இந்த சமயத்தில்தான் கடந்த உலகக் கோப்பைப் போட்டியில் டிவி தொகுப்பாளராகும் வாய்ப்பு கிடைத்தது மந்திராவுக்கு. தனது மாயக் கவர்ச்சியாலும், மயக்கும் உடையாலும் டிவி பெட்டி பக்கம் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கூட்டி வந்து கலகலக்க வைத்தார் மந்திரா.vகிரிக்கெட் ஆட்டத்தை விட மந்திரா அணிந்து வந்த கவர்ச்சி உடைதான் பட்டொளி வீசி பட்டயைக் கிளப்பியது. இந்த உலகக் கோப்பைப் போட்டி வர்ணணனையின்போதும் கலக்கத் தவறவில்லை மந்திரா.

இதுதவிர சினிமாவிலும் தனது சில்மிஷ கிளாமரைத் தூறத் தவறவில்லை மந்திரா. சிம்புவுடன் இணைந்து மன்மதனில் இவர் போட்ட ஆட்டம், ரசிகர்களை கிடுகிடுக்க வைத்தது. வயதை மீறிய மந்திராவின் மின்னல் கவர்ச்சியால் ரசிகர்களிடையே அவருக்கு தனிப் பெரும் வட்டமே உருவானது.

உலகக் கோப்பைப் போட்டிக்காக இடையில் சினிமா பக்கம் கவனம் செலுத்தாமல் இருந்த மந்திரா மீண்டும் சினிமா மீது தனது பார்வையைத் திருப்பியுள்ளாராம்.

சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்தார் மந்திரா. ஒரு தனியார் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசடராக நியமிக்கப்பட்டுள்ள மந்திரா அதுதொடர்பான நிகழ்ச்சிக்காகவே சென்னைக்கு வந்திருந்தார் மந்திரா.

கிடைத்த கேப்பில் மந்திராவைப் பிடித்து வாட் நெக்ஸ்ட என்றோம். தெலுங்கில் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம் மந்திரா. கிளாமர் கலந்த வேடமாம் இது.

இதுதவிர கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட மீராபாய் நாட் அவுட் என்ற படத்திலும் நடித்துள்ளார் மந்திரா. இந்த மாதத்தில் இப்படம் வெளியாகவுள்ளதாம்.

இதுதவிர சோனி டிவியில் ஒரு புதிய நிகழ்ச்சியை நடத்தவும் ஒப்புக் கொண்டுள்ளாராம். சினிமா, டிவி ஷோ என இரட்டைக் குதிரை சவாரி செய்யப் போவதாக தோளில் சரிந்து விழுந்த தலைமுடியை ஸ்டைலாக தள்ளியபடி சொன்னார் மந்திரா.

டிவி தொடர், சினிமா என்று நடித்திருந்தாலும் கூட தனது இன்றையப் புகழுக்கு கிரிக்கெட் தொகுப்பாளினி ரோல்தான் முக்கிய காரணம் என்று வெளிப்படையாக சொல்கிறார் மந்திரா. நான் மட்டும் கிரிக்கெட் தொகுப்பாளினியாக வந்திருக்காவிட்டால் நிச்சயம் இந்த இடத்தில் இருந்திருக்க மாட்டேன் என்கிறார் மந்திரா.

முதல் முறையாக நான் டிவியில் கிரிக்கெட் விமர்சனத்தில் ஈடுபட்டபோது இந்திய அணி படு உற்சாகமாக வெற்றி நடை போட்டுக் கொண்டிருந்தது. எனது டிவி பணியும் படு ஜாலியாக போனது. ஆனால் இந்த உலகக் கோப்பபைப் போட்டி எனக்கும் திருப்தியாக இல்லை, நமது நாட்டு ரசிகர்களுக்கும் திருப்தியைத் தரவில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் சொதப்பல் ஆட்டம் குறித்து அதிருப்தியையும் வெளிப்படுத்தினார் மந்திரா.

ஆனால் உங்க ஆட்டத்தில் சொதப்பலே வராது பேடியக்கா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil