நான் விடாமல் ஃபாலோ செய்வது இவரை தான்...ஜெய்பீம் மணிகண்டன் சொன்ன ரகசியம்

சென்னை : ஜெய்பீம் படத்தில் நடித்த மணிகண்டன், தான் யாரை விடாமல் ஃபாலோ செய்து வருகிறார் என்ற ரகசியத்தை ஓப்பனாக தெரிவித்துள்ளார். ஃபிலிமிபீட்டிற்கு அவர் அளித்த ஓப்பனான பேட்டியில் மணிகண்டன் இதை தெரிவித்துள்ளார்.

Recommended Video

எனக்கு Pair இல்லாததுக்கு இதான் காரணம் | Manikandan| Sila Nerangalil Sila Manithargal|Filmibeat Tamil

ஜெய்பீம் படத்தில் முக்கியமான ராஜாகண்ணு கேரக்டரில் நடித்து, பெரிய அளவில் பேசப்பட்டவர் மணிகண்டன். எழுத்தாளர், நடிகர், இயக்குனர், வசனகர்த்தா, மிமிக்ரி கலைஞர், முன்னாள் ரேடியோ ஜாக்கி என முகங்களைக் கொண்டவர் மணிகண்டன். இவர் விக்ரம் வேதா, விஸ்வாசம், தம்பி, சில நேரங்களில் சில மனிதர்கள் உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதி உள்ளார்.

இதற்காக தான் ஜெய்பீம் படம்

இதற்காக தான் ஜெய்பீம் படம்

மணிகண்டன் ஃபிலிமிபீட்டிற்கு அளித்த பேட்டியில், ஜெய்பீம் படம் ஆஸ்காருக்கு சென்றது சந்தோஷமாக உள்ளது. ஆரம்பிக்கும் போது ஆஸ்காருக்கு போகுமா, தேசிய விருதுக்கு போகுமா என எந்த சிந்தனையும் இல்லை. யதார்த்தத்திற்கு எவ்வளவு பக்கத்தில் இந்த கேரக்டர்களை எடுத்துக் கொண்டு நிறுத்த போகிறோம் என்கிற வேலையை தான் செய்தோம். ஒருவர் தான் அதை செய்தார்கள் என்றில்லை. ஒட்டுமொத்த டீமும் அதற்காக பாடுபட்டது. அதற்கு கிடைத்த அங்கீகாரம் தான் இது.

ராஜாகண்ணாக பார்க்கும் மக்கள்

ராஜாகண்ணாக பார்க்கும் மக்கள்

இப்போதும் நிறைய பேர் பார்க்கும் போது ராஜாகண்ணு கேரக்டரை நன்றாக செய்தீர்கள். ராஜாகண்ணாக நன்றாக நடித்தீர்கள் என்று. அந்த கேரக்டராக மக்கள் என்னை பார்த்து கூப்பிடும் போது ரொம்ப சந்தோஷமாக உள்ளது. எல்லா கதாபாத்திரங்களுமே எனக்கு ஸ்பெஷல் தான். ஆனால் ஜெய்பீம் உண்மை சம்பவத்தை சொல்வதால் அதே போல் இருந்ததா பாராட்டியதால் அதை ஸ்பெஷலாக நினைக்கிறேன். எனக்கு அடுத்த படத்திற்கான கெட்அப் தான் இது. அதில் ராஜாகண்ணின் எந்த சாயலும் வராது.

சப்போர்ட் இல்லைனா எல்லாம் வேஸ்ட்

சப்போர்ட் இல்லைனா எல்லாம் வேஸ்ட்

2022 ல் நடிக்க வேண்டிய படங்கள் என எதுவும் உறுதியாகவில்லை. எல்லாம் பேச்சளவில் தான் உள்ளது. கதை மட்டும் தேர்வு செய்து வைத்துள்ளேன். அவைகள் உறுதியானதும் ஒவ்வொன்றாக நடக்கும் என நம்புகிறேன். சக மனிதர்களின் சப்போர்ட் இல்லாமல் இங்கு எந்த வேலையும் செய்ய முடியாது. அவங்க பார்ப்பதற்கும், பாராட்டுவதற்கும் தயாராக இல்லை என்றால் நாம் என்ன செய்தாலும் வேஸ்ட் தான். நம்மை இன்று நான்கு பேர் பாராட்டுகிறார்கள், எழுதுகிறார்கள் என்றால் அதற்கு முக்கியமான காரணம் அவங்க மட்டும் தான்.

இவரை தான் ஃபாலோ செய்கிறேன்

இவரை தான் ஃபாலோ செய்கிறேன்

நான் கமலின் தீவிர ரசிகன். ரசிகன் என்பதை விட அவரின் ஒவ்வொரு வேலைகளையும் என் நண்பர்களிடமும் அவரின் நடிப்பு, வசனங்கள் பற்றி பேசிக் கொண்டிருப்பேன். ஒரு எழுத்தாளராகவும் சரி, ஒரு நடிகராகவும் சரி அவரின் வேலைகளை நான் ஃபாலோ செய்து கொண்டே இருப்பேன். என்றாவது ஒருநாள் தூரத்தில் நின்று நேரில் பார்த்து விடமாட்டோமா என நினைத்த மனிதர், ரொம்ப பக்கத்தில், அதுவும் நான் இருக்கும் மேடையிலேயே அவரும் இருக்கிறார் என்னும் போது தூக்கமே வரலை.

இவரை தான் ஃபாலோ செய்கிறேன்

இவரை தான் ஃபாலோ செய்கிறேன்

நான் கமலின் தீவிர ரசிகன். ரசிகன் என்பதை விட அவரின் ஒவ்வொரு வேலைகளையும் என் நண்பர்களிடமும் அவரின் நடிப்பு, வசனங்கள் பற்றி பேசிக் கொண்டிருப்பேன். ஒரு எழுத்தாளராகவும் சரி, ஒரு நடிகராகவும் சரி அவரின் வேலைகளை நான் ஃபாலோ செய்து கொண்டே இருப்பேன். என்றாவது ஒருநாள் தூரத்தில் நின்று நேரில் பார்த்து விடமாட்டோமா என நினைத்த மனிதர், ரொம்ப பக்கத்தில், அதுவும் நான் இருக்கும் மேடையிலேயே அவரும் இருக்கிறார் என்னும் போது தூக்கமே வரலை.

எந்த ஆசையும் இல்லை

எந்த ஆசையும் இல்லை

இவருடன் பணியாற்ற வேண்டும், இது தான் ஆசை என எதுவும் நான் வைத்துக் கொள்வதில்லை. அது மனதை, எண்ணங்களை குறுக்கி விடும். அப்படி நினைத்தால், தேடலும் அதை நோக்கியே இருக்கும். மற்ற நல்ல விஷயங்களில் கவனம் செல்லாது. ஒரு நல்ல ப்ராஜெக்டை வேண்டுமென்றே நான் மிஸ் செய்வதை போல் ஆகி விடும். எது இன்ட்ரெஸ்டிங்கா இருக்கோ அதை எடுத்து செய்கிறேன்.

மீண்டும் வயதான கேரக்டரா

கதை சப்போர்ட் செய்தால் வயதான கேரக்டராக இருந்தாலும் அதற்கான வேலையை செய்ய போகிறோம். அதற்கு சரியான கதை அமைய வேண்டும். நம்கிற போல் காட்டுகிற டெக்னீசியன்களும் வேண்டும். நினைச்சதும் வயதான கேரக்டருக்கு மாறி விட முடியாது. அதற்கான டெக்னீசியன்கள், அதற்கு சப்போர்ட் செய்யும் கதை அமைய வேண்டும். ஜெய்பீம் டீமோடு இப்போதும் டச்சில் இருக்கிறேன் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X