»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Subscribe to Oneindia Tamil

ஆஸ்திரேலியா தூதரகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்றுபரபரப்பாக வந்த செய்தியை மறுத்துள்ளார் நடிகை மனிஷா கொய்ராலா.

இன்னும் ரெண்டு வருஷத்துக்குக் கல்யாணம் பண்ணிக்கிறதா ஐடியா இல்ல என்கிறார். ஹைதராபாத்தில் டைரக்டர்ராஜ்குமார் சந்தோஷியின் லஜ்ஜா திரைப்பட ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த போது, கிடைத்த கேப்பில் நாம்இந்த மும்பை தென்றலிடம் புகுந்தோம். அவர் நமக்களித்த பேட்டி:

இப்போதைக்கு நான் 200 சதவீதம் முழுக்க, முழுக்க என் திரையுலக எதிர்காலத்தைப் பற்றித்தான் சிந்திப்பேன்.அதாவது என் வேலை தான் எனக்கு முக்கியம்.

என் வேலையில் எனக்கு முழு திருப்தி கிடைத்து நான் செட்டில் ஆன பின் தான் திருமணத்தைப் பற்றியோசிப்பேன்.

பல படங்களில் தொடர்ந்து ஒரே மாதிரியான கேரக்டர்களில் நடித்து வருவது ரொம்ப போரடிக்கிறது.

எனக்ன்ெறு சில குறிக்கோள்கள் இருக்கு. அதுபடிதான் நான் செயல்படுகிறேன். அதுக்காக நான் யாரையும்ஏமாற்றியோ, காலை வாரி விட்டோ குறிக்கோளை அடையணும்னு ஒரு போதும் நினைக்க மாட்டேன்.

நான் ரொம்ப வெளிப்படையான பெண். இது என்னோட பலவீனம்னு சொல்லலாம். பத்திரிக்கைகாரர்களிடம்ரொம்ப பிராங்கா இருக்கறதால நான் அதிகமா பீல் பண்ணியிருக்கேன்.

ஏன்னா, நான் மது அருந்துவதை மிகவும் விரும்புவேன் என்று கூறினால், நான் குடிகாரி என்று அர்த்தமல்ல.பத்திரிக்கைகாரங்ககிட்ட பேசும்போது ரொம்ப கவனமா இருக்கணும். இல்லன்னா செய்தியை மாற்றிபோட்டுடுவீங்க.

அனுபம் கெர்ரும், நானும் சேர்ந்து ஜீ.டிவியில் ஸவால் தஸ் க்ரோர் கா நிகழ்ச்சியை நடத்தினோம். அந்த நிகழ்ச்சி கோன் பனேகா க்ரோர்பதி நிகழ்ச்சியை விட 10 மடங்கு நல்ல நிகழ்ச்சியாக அமையும் என நினைத்தேன். ஆனால்,எனது கணிப்பு தவறாகப் போனது.

இந்த நிகழ்ச்சியில் கோன் பனேகா க்ரோர்பதியை விட 10 மடங்கு அதிக பரிசுகள் அறிவித்திருந்தோம்.

ஆனால் ஸவால் தஸ் க்ரோர் நிகழ்ச்சி பொதுமக்களிடம் அதிக வரவேற்பைப் பெறவில்லை. நிகழ்ச்சிதோல்வியடைந்தது. காரணம் தெரியலை. அந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட அனுபவம் எனக்கு அதிக மனக் கஷ்டத்தைக்கொடுத்தது என்றார் மனிஷா கொய்ராலா.

மும்பையிலிருந்து வந்து மணிரத்தினத்தின் இரண்டு படங்களில் நடித்த ஒரே நடிகை இவர் தான்.

நான்கு வருடங்களுக்கு முன் கமலஹாசனுடன் இந்தியன் படத்தில் நடித்தார். அந்தப் படம் ஹிந்தியிலும்இந்துஸ்தானி என்ற பெயரில் வெளியானது. இப்போது மீண்டும் கமலஹாசனுடன் இணைகிறார். அபய் படத்தில்இப்போது கமலுடன் நடிக்கிறார். மனிஷா தொழிலை மிகவும் நேசிப்பவர் என்று புகழ்கிறார் கமல்.

இந்த திரையுலகின் மிகச் சிறந்த நடிகையான ஷபனா ஆஸ்மியையே நடிப்பால் மிகவும் கவர்ந்தவர் மனிஷா.அவரால் மிகவும் பாராட்டப்பட்டு வரும் மனிஷா தனிப்பட்ட முறையிலும் மிக நேர்மையாவர் என்கிறதுதிரைப்படவுலகம்.

ஷியாம் பெனகலின் ஜூபைதா, தீபா மேத்தாவின் வாட்டர், கல்பனா லாஜ்மியின் தாமன் படங்களில்ஒப்பந்தமானபின் சில பிரச்சனைகளில் அந்தப் படங்களிலிருந்து நீக்கப்பட்டார் மனிஷா. ஆனால் அதைப்பற்றிசிறிது கூட அவர் வருத்தப்படுவதாகத் தெரியவில்லை.

ஐ.ஏ.என்.எஸ்.

Read more about: hyderabad, mani ratnam, manisha, mumbai
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil