»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

""நான் அதிமுகவில் இணைந்துள்ளதால், என் மீதுள்ள வழக்குகளை வைத்து என்னை பயமுறுத்த முயற்சி நடக்கிறது. ஆனால், நான் பயப்படமாட்டேன் என்று அதிமுகவின் புதிய வரவு நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்தார்.

பாமக, புதிய தமிழகம் என்று சென்று தற்போது அதிமுகவில் அடைக்கலம் புகுந்துள்ள நடிகர் மன்சூர் அலிகான் சென்னையில் செவ்வாய்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டி:

கேள்வி:

-------

உங்கள் மீது ஏற்கனவே பெண்ணை ஏமாற்றிக் கெடுத்ததாக வழக்கு உள்ளது. அந்த வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக தான் அரசியல் கட்சிபின்னணியை தேடியுள்ளீர்கள் என்று கூறப்படுகிறதே, உண்மையா?

பதில்:

-----

சட்டத்தின் முன்னால் நான் தலை வணங்கத் தயாராக இருக்கிறேன். ஆனால், வழக்குகளுக்கு பயந்து நான் அதிமுகவில் சேரவில்லை. என்மீது போடப்பட்டுள்ள வழக்கு விஷமத்தனமானது. அதற்கு பின்னணி இருக்கிறது. அதை வைத்து என்னை இப்போது பயமுறுத்தப்பார்க்கின்றனர். நான் பயப்பட மாட்டேன்.

கேள்வி:

------

பிறகு ஏன் திடீரென்று அதிமுகவில் சேர்ந்தீர்கள்...?

பதில்:

-----

புதிய தமிழகம் கட்சிக்காக இரவு பகலாக உழைத்தேன். தேர்தலில் 10 லட்ச ரூபாய் செலவு செய்தேன். அவர்கள் என்னை வைத்து பணம்சம்பாதித்துக் கொண்டார்கள். நான் வேதனைப்பட்டு கொண்டிருந்த நேரத்தில், அதிமுகவில் சேரும்படி நடிகர் ராதாரவி என்னை அழைத்தார்.எந்த பிரதிபலனும் பாராமல், ஜெயலலிதா தலைமையை ஏற்று அதிமுகவில் சேர்ந்துள்ளேன் என்றார்.

Read more about: admk, mansoor alikhan, tamilnadu

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil