Mariselvaraj: என் படத்தில் சாதியை மட்டும் தான் பார்க்கிறீர்கள்.. மாரி செல்வராஜ் அதிரடி பதில்!

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் மாரி செல்வராஜ். இவர் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை' என அடுத்தடுத்து பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். தற்போது மாரி செல்வராஜ், 'பைசன்' திரைப்படத்தை இயக்கியுள்ளார். துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தீபாவளி பண்டியை முன்னிட்டு தியேட்டரில் வெளியாகி உள்ள இந்த படம் 17ஆம் தேதி திரையங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், மாரி செல்வராஜ் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அது என்னென்ன என்று பார்க்கலாம்.

கேள்வி: உங்களின் கனவு திரைப்படம் எந்த மாதிரியான கதை அம்சத்தை கொண்ட திரைப்படமாக இருக்கும்?

பதில்: அனைத்து படங்களுமே என்னுடைய கனவு திரைப்படம் தான், பரியேறும் பெருமாள் கதையை எழுதும் போதே இந்த திரைப்படத்தை எப்படியாவது எடுத்து விட வேண்டும் என நினைத்தேன். அதை தொடர்ந்து கர்ணன், இந்த திரைப்படத்தை எடுத்துவிட்டால் போதும் என நினைத்தேன். அதன் பிறகு மாமன்னன் படத்தை எடுத்துவிட்டால் போதும் நிம்மதியாக இருக்கலாம் என நினைத்தேன் இப்படி ஒவ்வொரு திரைப்படமும் எனது கனவு திரைப்படமாகத்தான் இருக்கிறது.

Bison Mari Selvaraj
Photo Credit:

கேள்வி: தமிழ் சினிமாவை தவிர்த்து உங்களுடைய ரோல் மாடல் யார்?

பதில்: எழுத்தாளர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். ஆனால், சினிமாவில் என்னுடைய ரோல் மாடல் என்று நான் யாரையும் எடுத்துக் கொள்ளவில்லை.

கேள்வி: பா ரஞ்சித்தையும், உங்களையும் ஒப்பிட்டு சமூக வலைத்தளத்தில் வரும் விவாதங்களை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்

பதில்: விவாதங்கள் அவசியமானது என்பது தான் என்னுடைய கருத்து, விவாதங்கள் என்பது மிகவும் ஆரோக்கியமானது. அதில் பயன்படுத்தும் வார்த்தைகள் என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும், விவாதத்தை புரிந்து கொள்ளும் ஒரு நாகரீக சமுதாயம் இருக்கு என்பதை நம்புகிறேன். விவாதங்கள் நடக்கக்கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமையில்லை. ஆனால், அந்த விவாதத்தில் எதிர்மறையாக இருந்து பேசுபவர்களின் கவனத்தை நம் பக்கம் திருப்பி அதை சவாலாக எடுத்துக்கொண்டு அதை ஆரோக்கியமாக மாற்ற வேண்டும் என்பது என்னுடைய கருத்து.

கேள்வி: பாகுபலி. காந்தாரா படங்கள் போன்று படம் எடுக்கும் எண்ணம் இருக்கிறதா? அப்படி எடுப்பதாக இருந்தால் எதைப்பற்றியும் எடுப்பீர்கள்>

பதில்: அவ்வளவு செலவு செய்து ஒரு படத்தை நான் எடுப்பதாக இருந்தால், அதைக்காண கதையும் நோக்கமும் எனக்கு அமைய வேண்டும். அந்தக் கதையின் மீது எனக்கு பெரிய நம்பிக்கை இருந்தால், அப்படி ஒரு படத்தை எடுப்பேன்.

கேள்வி: அனைத்து சாதியிலும் வறுமை காரணமாக நசுக்கப்படுகின்ற, எளிய மக்களின் வலிகளை மாரி செல்வராஜ் திரைப்படமாக எடுப்பாரா?

பதில்: நான் படம் எடுப்பதால், நான் அவர்களைப் பற்றி மட்டுமே படம் எடுப்பதாகத்தான் உங்களுக்கு தெரிகிறது. அது எல்லாருக்குமான கதையாக நீங்கள் பார்த்து பழக வேண்டும். அப்படித்தான் சினிமாவும் இருக்கிறது, படைப்பும் இருக்கிறது. நான் யார் என்று தெரிந்ததாலேயே முழுக்க முழுக்க, அது என் வீட்டுக்குள் இருந்து வரும் கதை போல நினைத்துக் கொள்கிறீர்கள். கதை என்பது அவர்களுக்கு தெரிந்த மனிதர்களை பற்றி வைத்து மட்டுமே எடுக்கப்படுகிறது. ஆனால், அந்த கதை என்பது உலகத்தில் உள்ள அனைவருக்குமே பொருந்தக்கூடிய ஒரு கதை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். காதல்,வலி, கண்ணீர் என்பது எப்படி அனைவருக்கும் பொருந்துகிறதோ அப்படித்தான் என் படைப்பு.

பதில்: ஜாதி வேற்றுமைகளை காட்டாமல் பொதுவாக ஒரு படத்தை இயக்க முடியாதா?

கேள்வி: நான் எடுக்கும் படத்தில் நீங்கள் சாதியை மட்டும் தான் பார்க்கிறீர்கள், அதற்குள் நிறைய விஷயங்கள் இருக்கிறது. நிறைய கிளைகள் இருக்கின்றன. அதை உன்னிப்பாக பார்க்க வேண்டும் மாரி செல்வராஜ் யார் என்பதை மனதில் வைத்துக் கொண்டே படத்தைப் பார்த்தால், என்னால் ஒன்றும் செய்ய முடியாது. சோசியல் மீடியா என்னுடைய வீடு, சமையலறை, வீட்டு முகவரி என அனைத்தையும் அப்பட்டமாக காட்டிவிட்டது. இதனால் மாரி செல்வராஜ் படம் எடுத்தால், நான் அந்த அடக்குமுறைக்கு உள்ளான பையன் என்பதால் உங்களுக்கு அப்படி ஒரு எண்ணம் தோன்றி கொண்டே இருக்கிறது. என்னிடம் இவ்வளவு எதிர்பார்க்கும் நீங்கள், என்னுடைய மற்ற படங்களையும் பார்க்க ஆசைப்படும் நீங்கள், மற்ற இயக்குனர்களிடமும் நான் எடுப்பது போல படத்தை எதிர்பார்த்தால் நான் இன்னும் சந்தோஷப்படுவேன் என்று மாரி செல்வராஜ் தனது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X