»   »  காத்திருக்கும் மீ(ன்)னா!

காத்திருக்கும் மீ(ன்)னா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சினிமாவிலிருந்து நான் ஓரம் கட்டப்படவில்லை. நல்ல கதைக்காக காத்திருக்கிறேன். கிடைத்தால் நடிப்பேன் என்கிறார் முத்துப் பல்லழகி மீனா.

தெத்துப் பல் சிரிப்பு, முத்தான நடிப்பு, அழகான கிளாமர் என ஒரு காலத்தில் அட்டகாசம் செய்தவர் மீனா. சூப்பர் ஸ்டார் ரஜினி, கலைஞானி கமல் முதல் நேற்று வந்த விஜய், அஜீத் வரை அத்தனை முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டுக் கலக்கியவர் மீனா.

பரபரவென போய்க் கொண்டிருந்த மீனாவின் மார்க்கெட், மீன் மார்க்கெட் போல இப்போது வாடை அடித்துக் கிடக்கிறது. எல்லாம் கேரள வரவுகளின் கோலாகலக் குவியல்தான் காரணம். சினிமாவில் ஓரம் கட்டப்பட்டு விட்ட மீனாவுக்கு இப்போது துடுப்பாக கிடைத்திருப்பது லட்சுமி டிவி சீரியல் மட்டுமே.

இந்த டிவி சீரியலும் இப்போது ரேட்டிங்கில் பல படி இறங்கி விட்டதால் அப்செட் ஆகியுள்ளாராம் மீனா. 100 டிகிரி வெயிலில் சென்னை உருகிக் கொண்டிருந்த ஒரு நாளில் ஜில்லென தேவதை போல இருந்த மீனாவைச் சந்தித்து உசாவினோம்.

என்ன மீனா, இனிமேல் சினிமாவுக்கு நோ தானா என்று நோகாமல் ஆரம்பித்தோம். அப்படியெல்லாம் இல்லை. லட்சுமி தொடரின் கதை பிடித்ததால் நடிக்க ஒத்துக் கொண்டேன். முதலில் விருப்பம் இல்லாமல்தான் இருந்தேன். பிறகு கதை பிடித்ததால் ஒத்துக் கொண்டு நடிக்கிறேன்.

என்னிடம் படமே இல்லை என்று கூற முடியாது. மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறேன் என்றார்.

சினிமா டல்லாக இருந்தால் பேசாமல் டிவி சீரியல் தயாரிக்கலாமே என்றால், அந்த எண்ணமே எனக்கு இல்லை. தயாரிப்பில் எல்லாம் இறங்க மாட்டேன். நல்ல கதையாக இருந்தால் நடிப்பேன், அவ்வளவுதான்.

கிளாமர் காட்டினால்தான் வாய்ப்பு வரும் என்று நான் நினைத்ததில்லை. அப்படித்தான் நடிக்க வேண்டும் என்று எந்த நிர்ப்பந்தமும் எனக்கு இல்லை. எனக்கு கதை பிடிக்க வேண்டும், அது மட்டுமே நான் போடும் நிபந்தனை.

ரஜினியைப் போலவே உங்களுக்கும் ஜப்பானில் ஒரு ரசிகர் குரூப் இருக்குது போல என்று சொல்லி மீனாவுக்கு குஷி கொடுத்தோம். ஆமாம், ரஜினி சாருடன் நான் இணைந்து நடித்த முத்து படத்திற்குப் பிறகுதான் எனக்கும் ஜப்பானில் ரசிகர்கள் கிடைத்தனர். என் மீது அவர்களுக்கு ரொம்பப் பாசம், ரொம்பப் பிரியமாக இருக்காங்க.

எனது ஜப்பான் ரசிகை ஒருவருக்கு முத்து படத்தைப் பார்த்த பிறகு தமிழர்கள் மீது அன்பு பிறந்து, தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரையே காதலித்துக் கல்யாணமும் செய்து கொண்டார். அந்த ரிசப்ஷன் கூட சென்னையில்தான் நடந்தது. நானும் போய் வாழ்த்தி விட்டு வந்தேன்.

உங்க கல்யாணம் எப்ப மீனா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil