»   »  சூர்யாவுக்கு ஆசைப்படும் மேக்னா

சூர்யாவுக்கு ஆசைப்படும் மேக்னா

Subscribe to Oneindia Tamil

சூர்யாவுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என ஏக்கத்துடன் ஆர்வம் தெரிவித்துள்ளார் மேக்னா நாயுடு.

வீராச்சாமி படம் மூலம் தமிழக்கு அறிமுகமான மேக்னா நாயுடு இந்தியில் கவர்ச்சி குண்டாக வெடித்து வருபவர்.

வீராச்சாமி வெளிவருவதற்கு முன்பே சரவணா, ஜாம்பவான் ஆகிய படங்களில் நடித்து முடித்துவிட்டார்.

இந்த இரு படங்களிலும் செகண்ட் ஹீரோயினாக வந்து போனாலும் முக்கிய வேலையாக கிளாமரை அள்ளித் தந்து கிறங்கடித்தார்.

இதனால் இளவட்டங்களின் நெஞ்சாங் கூடுகளில் நிரந்தரமாக இடம் பிடித்து வைத்துள்ளார்.

இப்போது சரத்குமாருடன் வைத்தீஸ்வரன் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இதில் கவர்ச்சியோடு நடிப்பிலும் கலக்கி வருகிறாராம் (மேக்னா நடிக்கிறாரா)

இதில் மேக்னாவுக்கு பத்திரிக்கை நிருபர் வேடமாம்.

வைத்தீஸ்வரன் படப்பிடிப்பில் இருந்த மேகனாவிடம் வாயை கொடுத்தோம்.

எனக்கு வர்ற எல்லா கேரக்டர்களும் கிளாமருடன் கூடிய கதையாக தான் வருது. அதற்காக கிளமார் ரோலிலேயே நடிப்பேன் என்று நினைக்க வேண்டாம்.

இப்போது தான் தமிழில் கால் வைத்திருக்கிறேன் போக போக நல்ல குடும்பப் பங்கான ரோலிலும் நடிப்பேன்.

தமிழில் எனக்கு ரொம்ப பிடிச்ச நடிகர் சூர்யா தான். அவர் நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் கூட ஒரு படமாவது நடிக்கனும் அது தான் என ஆசை. நிச்சயம் அவருடன் இணைந்து நடிப்பேன் என்றார்.

ஜோதிகா கொஞ்சம் கவனம்..

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil